எப்படி இருக்கிறது ‘நித்தம் ஒரு வானம்’ – முழு விமர்சனம். கூடவே ரசிகர்களின் FDFS Review.

0
917
- Advertisement -

இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் நித்தம் ஒரு வானம். இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிதா ராஜசேகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை வியாகாம் 18 ஸ்டுடியோஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டையின்மென்ட் இணைந்து தயாரித்து இருக்கிறது. ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மையமாகக் கொண்ட கதை. இன்று வெளியாகி உள்ள நித்தம் ஒரு வானம் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஐடி கம்பெனியில் அசோக்செல்வன் வேலை செய்கிறார். இவர் சுத்தமாக இருக்க வேண்டும், எதுவும் ஒழுங்காக இருக்க வேண்டும், எதையும் முறையாக செய்ய வேண்டும் என்ற குணம் கொண்டவர். வீட்டில் இருக்கும் நாயை கூட தொடாதவர் அசோக். அப்படிப்பட்டவருக்கு திருமணம் நிச்சயமாகிறது. திருமணம் நடக்கும் அன்று அதிகாலையில் மணப்பெண் அவருடைய காதலனுடன் அசோகிடம் சொல்லிவிட்டு செல்கிறார். திருமணம் நின்றுவிடுகிறது.

- Advertisement -

வாழ்வின் மீது அசோக்செல்வனுக்கு விரக்தி ஏற்படுகிறது. அந்த சமயத்தில் தான் அசோக் செல்வன் மருத்துவரை சந்திக்கிறார். டாக்டர் ஆன அபிராமி அசோகிடம் ஒரு சிறு கதைகளை கொடுத்து படிக்க சொல்கிறார். ஆனால் , அந்த கதைகளில் முடிவுகள் கிழிக்கப்பட்டிருக்கிறது. அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அபிராமிடம் அதைப் பற்றி கேட்க செல்கிறார் அசோக். ஆனால், அபிராமி அது கதை அல்ல உண்மை. அவர்களை பற்றி தெரிந்து கொள்ள அவர்களை தேடுங்கள் என்று முகவரிகளை கொடுக்கிறார்.

அசோக் அவர்களை பார்க்க கிளம்புகிறார். அதன் பின் அந்த பயணத்தில் அவர் என்ன அனுபவங்களை கற்றுக் கொள்கிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை. மிக எளிமையான கதையை நம்பிக்கை ஊட்டும் விதமாக இயக்குனர் கார்த்திக் கொடுக்க முயற்சி செய்து இருப்பதற்கு பாராட்டுக்கள். படத்தில் மூன்று விதமான கதாபாத்திரங்களில் அசோக் செல்வன் நடித்திருக்கிறார். எதிலியுமே விருப்பமில்லாமல் விலகியிருக்கும் அர்ஜுன், முரட்டுத்தனமான மதுரை இளைஞன் வீரா, குறும்பும் அப்பாவித்தனமான பிரபா என்ற மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் அசோக்.

-விளம்பரம்-

அதேபோல் படத்தில் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். மூன்று கதைகளிலும் அடுத்து என்ன நடக்கும்? என்ற ஆர்வத்தை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும், அதை குழப்பாமல் இயக்குனர் கொண்டு சென்ற விதம் சிறப்பு. பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக இருக்கிறது. ஆனால், பாடல்கள் தான் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. படத்தில் உணர்வு ரீதியான பல விஷயங்கள் திணிக்கப்பட்டது போல காண்பிக்கப்பட்டிருக்கிறது.

சில காட்சிகளை உணர்வுரீதியாக காண்பித்து இருந்தால் பார்வையாளர்களை எளிதாக சென்றடைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. கதையின் சில முக்கிய திருப்பங்கள் எல்லாம் ஷாக்கிங் ஆக காண்பித்து இருக்கிறார்கள் தவிர இயற்கையான முறையில் காண்பிக்கவில்லை. சில கதாபாத்திரங்களை இன்னும் தெளிவாக காண்பித்து இருக்கலாம். இப்படி ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும் படம் முடியும்போது ஒரு நல்ல உணர்வை தந்து இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அசோக் செல்வனின் முயற்சி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. நித்தம் ஒருவானம் சுமாரான படமாக இருக்கிறது.

நிறைகள் :

எளிமையான கதையை இயக்குனர் கையாண்ட விதம் அருமை.

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

குறைகள் :

உணர்வு ரீதியான சில காட்சிகளை வசனங்கள் மூலம் காண்பிக்கப்பட்டிருக்கிறது.

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்.

பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.

மொத்தத்தில் நித்தம் ஒரு வானம்- மனிதனுடைய எண்ணம்

Advertisement