லிவிங் டுகெதரில் நித்யா மேனன்.. திருமணம் குறித்து என்ன சொல்லி இருக்கார் பாருங்க..

0
11337
Nithya

விஜய்யின் மெர்சல் படம் மூலம் மக்களிடையே அதிகமாக பிரபலமானவர் நடிகை நித்யாமேனன். தற்போது இவர் ஒரு சில படத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து அவரிடம் பேட்டி எடுத்தபோது நித்யாமேனன் கூறியது, மிஸ்கின் சாரைப் பத்தி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கேன். அது மட்டும் இல்ல நடிகை ரோகினி எனக்கு ரொம்ப நல்ல பழக்கம். அவங்க இவரு ரொம்ப சூப்பரான இயக்குனர் என்றும் சொல்லுவாங்க. ஒரு இயக்குனர் நல்ல படம் எடுப்பார் என்று சொன்னால் எப்பவுமே முன்னாடி பின்னாடி வந்த படங்கள் எல்லாம் பார்க்க கூடாது. அவருடைய கதை எப்படி? இருக்குன்னு மட்டும் தான் பார்க்கணும். அத தெரிஞ்சிட்டு அவை எப்படிப்பட்ட இயக்குனர் என்று நமக்கு தெரிஞ்சுடும். அது மட்டும் இல்லைங்க மிஸ்கின் கூட வேலை பார்த்தது எனக்கு ரொம்ப ஈசியா இருந்துச்சு. எந்த ஒரு கஷ்டமும் இல்ல. அது மட்டும் இல்லைங்க எதுனாச்சும் எனக்கு ஒரு தனிப்பட்ட பிரச்சனைன்னா அவர் என்னை புரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த மாதிரி நடந்துகொள்வார். எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தாலும் நீ நடிச்ச தீரனும் என கட்டாயப்படுத்த மாட்டார்.

Nithya Menon

அதோடு உதயநிதி பத்தி சொல்லனும்னா , சூட்டிங் வந்த உடனே ரொம்ப அமைதியா இருப்பாரு. யார் கிட்டேயும் அதிகம் பேசவே மாட்டாரு. இந்த படத்தின் மூலம் இரண்டு நல்ல மனுஷங்களை பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். மேலும், இந்த படத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் இசை அமைத்து இருக்கிறார். அவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும் என்று கனவு கண்டு இருந்தேன். ஆனால், அந்த கனவை இந்த படத்தில் நிஜமாகிருச்சி.இதனைத்தொடர்ந்து கேமராமேன் பி.சி. ஸ்ரீராம் பத்தி சொல்லனும்னா, ரொம்ப ஸ்பெஷலான மனிதர். சினிமாவுல நான் அவரை எப்பயுமே அப்பா ஸ்தானத்தில் வைத்து தான் பார்ப்பேன். அவரும் என்னை மகள் மாதிரிதான் நினைத்து என்னுடன் பழகுவார்.

இதையும் பாருங்க : சரவணன் மகனின் பிறந்தநாளை கொண்டாடிய ஒட்டுமொத்த படக்குழு.. வைரலாகும் புகைப்படம்..

- Advertisement -

நான் படம் எப்படி தேர்ந்தெடுப்பேன் என்று பார்த்தால், நியாயமாகவும் நேர்மையாகவும் இருந்தால் போதும் அதுக்கு நான் ஓகே சொல்லிடுவேன். படத்தில் என்ன கேரக்டர்? எல்லாம் பார்க்க மாட்டேன். அதிலும் இயக்குனர்களை பார்த்து படம் ஒப்பந்தம் செய்ய மாட்டேன். என்ன தேடி வர இயக்குனர்களை பார்த்து அவர்களுடைய கதையில் எனக்கு முக்கியத்துவம் இருப்பதை அறிந்து அப்ப ஓகே சொல்லுவேன். அதோட கதையை நானே கேட்டு தெரிந்து கொள்வேன். யார்கிட்டயும் அந்த பொறுப்பை விடமாட்டேன். நான் கன்னடம் ,தமிழ் மொழி பேசுவது எனக்கு ரொம்ப சுலபமான விஷயம். ஆனால், தெலுங்கு படத்துல நடிக்கிறது தான் கொஞ்சம் கஷ்டமாயிருந்துச்சுன்னு நினைக்கிறேன். மற்றபடி எனக்கு எப்பவுமே ஈசியா இருக்கிற மொழி பார்த்தா நம்ம ‘தமிழ் மொழி’ தாங்க. உங்கள் திருமணம் பற்றி சொல்லுங்கள் எனக் கேட்டதற்கு, இப்போதைக்கு எனக்கு திருமணத்தில் எந்த ஒரு உடன்பாடும் இல்லை.

Nithya Menon

இவர் தான் என் வாழ்க்கை துணை என்று எனக்கு தோணுதோ அப்ப உடனே கல்யாணம் பண்ணிப்பேன். இதுவரை யாரும் அந்த மாதிரி நான் பாக்கல. அதுமட்டுமில்லாமல் எங்க வீட்டிலேயும் இப்ப கல்யாணம் பண்ணிக்கோன்னு எந்த ஒரு கட்டாயமும் இல்லை. மேலும், எனக்கு சரியான நேரம் வரப்ப என் திருமணம் குறித்து நான் கூறுகிறேன். மேலும்,படத்தில் நான் ‘ லிவிங் டுகெதர், லெஸ்பியன் ரிலேஷன்ஷிப்’என இந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிச்சது எனக்கு சவால் கொடுத்த கேரக்டர். அதனால அதே என் வாழ்க்கை என்று நினைப்பது ரொம்ப தப்பு. இப்ப புதிதாக ‘தி அயன் லேடி’ படம் குறித்து பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து இயக்குனர் பிரியதர்ஷினி கிட்ட கேட்டபோது அவங்களும் பண்ணட்டும், நாமும் பண்ணலாம் என்று அவங்க சாதாரணமா சொன்னாங்க. அவர்களுடைய பதில் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அது மட்டுமில்லாமல் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவின் கதையை எல்லாரும் படமாக எடுக்க நினைக்கிறாங்க. அதுல யார்? கதை மக்களுக்கு பிடித்திருக்கிறதோ அதை ரசிக்கட்டும் என்று சொன்னாங்க.

-விளம்பரம்-
Advertisement