அவர் அம்மா தான் அப்படி சொன்னார், இது தெரிந்து இருந்தால் அவரை காதலித்து இருக்க மாட்டேன் – நித்யா மேனனின் திருமணம் குறித்து பேசிய நபர்.

0
280
nithyamenon
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் நித்யா மேனன். நித்யா மேனன் பெங்களூரில் ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்திருக்கிறார். தான் திரைத்துறையில் நடிப்பதற்கு விரும்பியது கிடையாது பத்திரிக்கையாளராக தான் இருக்க விரும்பியதாக ஒரு தொலைகாட்சி பேட்டியில் கூறியிருந்தார். பின்பு இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 180 படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் விஜய்யுடன் மெர்சல், சூர்யாவுடன் 24, விக்ரமுடன் இருமுகன் என்று தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். பின் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த சைக்கோ படத்தில் நித்யா நடித்திருந்தார்.

-விளம்பரம்-
nithya

அதற்கு பிறகு நித்தியா மேனன் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் குண்டாக இருந்த நித்யா மேனன் உருவக் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகி இருந்தார். இதனால் உடல் எடையை குறைக்க முடிவு செய்த நித்யா மேனன் அவர்கள் சித்தா மற்றும் சில உடற்பயிற்சிகளை மேற்கொண்டு இருந்தார். அதன் பலனாக தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி இருக்கிறார். சமீபத்தில் நித்யா மேனன் உடலை குறைத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இதனால் இவருக்கும் மீண்டும் பட வாய்ப்புகள் வரத்துவங்கி இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : என் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி வசூல் வேட்டை நடத்துகிறார் – பா ஜ கவை சேர்ந்த சீரியல் நடிகை மீது சினேகன் புகார்.

திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் :-

தற்போது தனுஷின் 44வது படமான ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தில் நித்யா மேனன் நடித்து இருக்கிறார். இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் முதல் சிங்கிளான தாய்க்கிழவி பாடல் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது. இந்த பாடலை தனுஷ் எழுதி பாடியிருக்கிறார். அதோடு இந்த பாடல் வெளியாகி 4 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கடந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து நித்யா மேனன் சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு நித்யா மேனன் வீல் சேரில் வந்து இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
nithyamenon

வீல் சேர்ரோட ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் நித்தியா மேனன் :-

பொதுவாகவே தமிழ் சினிமாவில் நடக்கும் பெரும்பாலான இசை வெளியீடுகள், பத்திரிகையாளர் சந்திப்புகள், ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளுக்கு முன்னணி நடிகைகள் கலந்து கொள்வது கிடையாது. இது குறித்த சர்ச்சைகள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் நித்யா மேனன் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவிற்கு வீல் சேரில் வந்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது நித்யா மேனன் ‘மாடர்ன் லவ் ஐதராபாத்’ என்ற இணைய தொடரில் நடித்து இருக்கிறார். இந்த இணைய தொடர் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. நித்யா மேனன் வீல்சேரில் வந்து இந்த விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார். அதாவது வீட்டுப் படியில் ஸ்லிப்பாகி விழுந்து காலில் அடி பட்டதாக அவர் கூறியிருந்தார். மேலும், வீல் சேரில் வந்து கையில் ஊன்றுகோல் உடன் மேடை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டிருந்தார். நித்யா மேனன் இப்படி கலந்துகொண்டது படக்குழுவினருக்கு மட்டுமில்லாமல் பார்ப்போரையும் நெகிழச் செய்தது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து நித்யா மேனனை பாராட்டி வருகிறார்கள்.

திருமணம் செய்து கொள்ளுமாரு டார்ச்சர் செய்கிறார் :-

மோகன்லாலின் ஆராட்டு சினிமா பற்றி பேசி சமூக வலைதளங்களில் வைரல் ஆனவர் தான் சந்தோஷ் வர்க்கி. இவர் கடந்த பல வருடங்களாக நித்தியா மேனனே திருமணம் செய்யப் போவதாக கூறிக் கொண்டிருந்தார். இந்நிலையில் விஜய் சேதுபதி நித்யாமேனனும் இணைந்துநடித்து மலையாளத்தில் வெளிவரும் படம் 19(1)ஏ இந்த பட புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நித்தியாமேனியிடம் சந்தோஷ் வர்க்கி கூறியதை பற்றி கேட்ட பொழுது.”அவர் சொல்வதை கேட்பவர்கள் முட்டாள்கள்” தான் சந்தோஷ் வர்க்கி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சில வருடங்களாக என்ன தொல்லை செய்து கொண்டிருந்தார். 30-க்கும் மேற்பட்ட மொபைல் நம்பர்களிலிருந்து போன் பண்ணி டார்ச்சர் செய்தவாரே இருந்தார். நான் எனது அப்பா அம்மாவிடம் அந்த நம்பரை பிளாக் செய்து விடுங்கள் என்று கூறினேன். அவரது முகம் சமூக வலைதளங்களில் பரீட்சியமானதும் அதைப் பற்றி வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரை நான் மனப்பூர்வமாக மன்னித்து விட்டேன் அவரைப் பற்றி போலீசில் புகார் கொடுக்க சொல்லும் போதும் நான் புகார் கொடுக்கவில்லை என்று பதில் சொன்னார்.

நித்தியா மேனன் குற்றசாட்டுக்கு சந்தோஷ் வர்க்கி பதில் :-

பட புரொமோஷன் நிகழ்ச்சியில் நித்யா மேனன் கூறிய குற்றச்சாட்டுகள் சந்தோஷ் வர்க்கி பதில் கொடுத்துள்ளார். அவர் கூறுவது என்னவென்றால் 30க்கும் மேற்பட்ட நம்பர்களிலிருந்து போன் செய்து டார்ச்சர் செய்வதாக கூறினார். ஒரு மனிதன் வாழ்நாளில் எத்தனை சிம் கார்டு வாங்க முடியும் என்று மக்களாகிய உங்களுக்கு தெரியும் அதுமட்டுமில்லாமல் நித்யா மேனனின் தாயார் அவளுக்கு வேறு இடத்தில் நிச்சயம் செய்து விட்டதாக என்னிடம் கூறினார். ஆனால் அவர் அப்பாவோ என்னிடம் கூறியது அவளுக்கு வரன் எதுவும் பார்க்கவில்லை என்று சொன்னார் இவர்கள் இருவரும் ஆளுக்கு ஒன்றாக கூறியதில் நான் மிகவும் குழப்பம் அடைந்தேன் மேலும் அவர் மேல் நான் பாலியல் தொல்லை கொடுப்பதாக வழக்கு தொடர இருந்ததாக எனக்கு தெரியவந்தது. அத்துடன் என் தந்தை மறைவுக்கு பின்னால் நான் எந்த விஷயங்களிலும் தலையிடாமல் என் கடமைகளை மட்டும் சரிவர செய்து கொண்டு வருகிறேன். இப்படி தெரிந்து இருந்தால் அவரை காதலித்து அவர் பின்னால் நான் சுற்றி திரிந்து இருக்க மாட்டேன் என்ன வர்க்கி கூறினார்.

Advertisement