என் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி வசூல் வேட்டை நடத்துகிறார் – பா ஜ கவை சேர்ந்த சீரியல் நடிகை மீது சினேகன் புகார்.

0
608
snehan
- Advertisement -

தன்னுடைய பெயரை சொல்லி மோசடி நடப்பதாக சினேகன் புகார் அளித்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான பாடலாசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் தனது ஆரம்ப காலங்களில் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் பணிபுரிந்தார். பின்னர் தனியாக வந்து பாடல்களை எழுத துவங்கி தற்போது வரை 2500 பாடல்கள் எழுதி இருக்கிறார். மேலும், இவர் சில படங்களிலும் நடித்தும் இருக்கிறார். பின் இவர் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார். இந்த சீஸினில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சினேகன் கலந்து இருந்தார். அதோடு இவர் சமீபத்தில் வெளிவந்த ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து சினேகன் சில படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய பெயரை சொல்லி மோசடி நடப்பதாக சினேகன் புகார் அளித்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : நயன்தாரா, தமன்னா, ஷ்ரேயா, காஜல் அகர்வால் என்று Plastic Surgery செய்துகொண்ட தமிழ் சினிமாவின் முன்னனி நடிகைகள்.

சினேகன் நடத்தும் பவுண்டேஷன் :

2015ஆம் ஆண்டில் இருந்து சினேகன் அவர்கள் சினேகம் என்ற பவுண்டேஷன் ஒன்றை நடத்தி வருகிறார்.
அதன் மூலம் அவர் ஏழை குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இது முழுக்க முழுக்க அவர் தன்னுடைய சொந்த பணத்தில் செய்து வருகிறார். ஆனால், சமூக வலைத்தளங்களில் இவருடைய பெயரை பயன்படுத்தி பணம் வசூலித்து வருகிறார்கள். இதை அறிந்த சினேகன் போலீசில் இது தொடர்பாக புகார் அளித்து இருக்கிறார். மேலும், இதுகுறித்து சினேகன் பேட்டியில் கூறி இருந்தது, நான் 2015ஆம் ஆண்டில் இருந்து பவுண்டேஷன் நடத்தி வருகிறேன். இது என்னுடைய சொந்தப் பணத்தில் மூலம் உருவாக்கினேன்.

-விளம்பரம்-

சினேகன் அளித்த புகார்:

இதன் மூலம் நான் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து வருகிறேன். நான் இதற்கு முறையாக income.tax செலுத்தி இருக்கிறேன். அதற்கான ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. என்னுடைய நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் என்னுடைய பெயரை பயன்படுத்தி பணம் மோசடி செய்கிறார்கள் என்று கூறியிருந்தார்கள். பின் income.tax யிலும் நீங்கள் மக்களிடம் பணம் வசூலித்து பவுண்டேஷன் நடத்துகிறீர்களா? என்று கேட்டார்கள். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பின் அந்த சமூக வலைத்தளத்திற்கு சென்று பார்த்தேன். அதில் அவர்கள் கொடுத்திருந்த முகவரி எல்லாம் பொய்யாக இருந்தது. நான் என்னுடைய வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தேன்.

புகாரில் சினேகன் கூறி இருப்பது:

இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் வரவில்லை. அது பொய்யான முகவரி என்று வந்தது. இதனை அடுத்து நான் என்னுடைய மேலாளர் மூலம் விசாரித்தேன். அப்போது அதிலிருந்த போன் நம்பர் மூலம் என்னுடைய மேலாளர் தொடர்பு கொண்டு பேசினார். இதை செய்வது சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி என்று தெரியவந்தது. அந்த நடிகை காபி ஷாப்புக்கு வாங்க பேசலாம் என்று கூறினார். இதற்கு பிறகு நாம் நேரடியாக செல்லக்கூடாது சட்டரீதியாக செல்லலாம் என்று போலீசில் புகார் அளித்து இருக்கிறேன். இதை அடுத்து இது தொடர்பாக நடிகை ஜெயலட்சுமியை தொடர்பு கொண்டு கேட்டபோது, இதுவரை எனக்கு சினேகன் அவர்கள் எந்த காலும், நோட்டீசும் அனுப்பவில்லை. நான் ஏன் அவருடைய பவுண்டேஷன் மூலம் பணம் வாங்க வேண்டும்.

ஜெயலட்சுமி அளித்த பேட்டி:

அவருடைய பவுண்டேஷன் பெயர் கூட எனக்கு தெரியாது. என்னுடைய பவுண்டேஷன் பெயர் சினேகம். நான் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். அதற்கான ரெஜிஸ்டர் செய்து வைத்திருக்கிறேன். இந்த பவுண்டேஷனில் இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் டிரன்சாக்சன் இருக்காது. என்னுடைய சம்பளத்தில் என்னால் என்ன முடியுமோ அதைத்தான் செய்து இருக்கிறேன். நான் மக்களிடம் எந்த ஒரு நிதி திரட்டி செய்யவில்லை. என்னால் முடிந்ததை செய்து வருகிறேன். அதுமட்டுமில்லாமல் நான் யாரையும் டீயோ, காபியோ சாப்பிட கூப்பிடுவதில்லை. நான் எனக்கான ஒரு வாழ்க்கையை நியாயமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய முகவரி, மொபைல் நம்பரும் சமூக வலைதளங்களில் இருக்கிறது. ஈஸியாக எடுக்கலாம். ஆனால், அவர்கள் இதுவரை என்னை தொடர்பு கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். அதோடு கடந்த ஆண்டே ஜெயலட்சுமி மீது கந்து வட்டி புகார் அளிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement