மதுரை மீனாட்சி கோவிலில் எடுத்த புகைப்படத்தால் சர்ச்சை.! உடனடியாக நீக்கிய நிவேதா பெத்துராஜ்.!

0
1965
Nivetha-pethuraj
- Advertisement -

பெரும்பாலும் நடிகைகள் என்றாலே சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒரு விஷயம் தான். ஆனால் சினிமாவில் இத்தனை வருடங்கள் ஆகியும் சர்ச்சையில் சிக்காமல் இருந்த வந்து நிவேதா பெத்துராஜ், சமீபத்தில் மதுரை காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றது பெரும் சர்ச்சையாக அமைந்துள்ளது.

-விளம்பரம்-
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஃபோட்டோ... சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு நாள் கூத்து’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற விருதினையும் பெற்றார்.

- Advertisement -

அதன் பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘டிக் டிக் டிக்’ விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘திமிருபிடித்தவன்’ போன்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘பார்ட்டி’ படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தெய்வ வழிபாட்டிற்காக சென்றுள்ளார்.

கோவிலுக்குள் சென்ற நிவேதா பெத்துராஜ் தான் வைத்திருந்த செல்போன் மூலம் சில புகைப்படங்களை எடுத்துள்ளார் இதனை கண்ட அங்கிருந்த பக்தர்கள் கோவிலுக்குள் புகைப்படம் எடுக்கக் கூடாது என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று நீங்கள் மட்டும் ஏன் புகைப்படம் எடுக்கிறார்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கோவில் நிர்வாகத்திடமும் நடிகைக்கு ஒரு சட்டம் பொதுமக்களுக்கு ஒரு சட்டமா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த புகைப்படங்களை நிவேதா பெத்துராஜ் தனது விட்டாராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால், தற்போது அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் அம்மணி.

-விளம்பரம்-
Advertisement