ஆர்யா இல்லை, இந்த நடிகரை மனதில் வைத்து தான் இந்த படத்தை எழுதினேன் – ரஞ்சித் சொன்ன சீக்ரெட். (செமயா இருந்திருக்குமே)

0
62523
sarpatta
- Advertisement -

சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகர் தவறவிட்ட படத்தை வேறு ஒரு நடிகர் நடிப்பது வழக்கமான ஒன்றுதான் அந்த வகையில் ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் சார்பட்டா பரம்பரை என்ற படமும் விதிவிலக்காக அமையவில்லை. தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக மாறிய பல நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் ஆர்யாவும் ஒருவர். அறிந்தும் அறியாமலும் படத்தில் வில்லனாக அறிமுகமான ஆர்யா அதன் பின்னர் ஹீரோவாக நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆர்யாவின் பல படங்கள் விமர்சன ரீதியாக நல்ல பெயரை எடுத்துள்ளது. இவர் நடிப்பில் இறுதியாக வந்த மகாமுனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

-விளம்பரம்-
Image

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை என்ற படத்தில் நடித்து வந்தார் சமீபத்தில் தான் இந்த படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி இருந்தது இந்த படத்தில் நடிகர் ஆர்யா ஒரு குத்துச் சண்டை வீரராக நடித்து இருகிறார். இதற்காக தன்னுடைய உடலை ஒரு குத்துச் சண்டை வீரரை போல தயார் படுத்தி இருந்தார் ஆர்யா.

இதையும் பாருங்க : பாகுபலி வெப் தொடரில் நயன்தாரா – அதுவும் எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா ? அதிகாரபூர்வ அறிவிப்பு.

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்திற்காக ஆர்யா மேற்கொண்ட உடற்பயிற்சிகளின் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பா ரஞ்சித் பேசுகையில், நான் எந்த ஒரு படத்தின் கதையையும் நடிகர்களை மனத்தில் வைத்து எழுத மாட்டேன். காலா படம் வேண்டுமானால் நான் ரஜினிக்காக எழுதி இருக்கலாம்.

ஆனால், மற்ற படங்களின் கதையை நடிகர்களை மனதில் வைத்து எழுத மாட்டேன் என்று கூறியுள்ளார் ரஞ்சித். மேலும், ‘சார்பட்டா பரம்பரை’ படம் சூர்யாவிற்காக எழுதப்பட்ட கதையா என்று கேள்வி கேட்டகப்பட்டது.அதற்கு சிரித்துகொண்டே பதில் அளித்த ரஞ்சித், இந்த படத்திற்காக பல பேரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது சூர்யா உட்பட எனக்கு ஆர்யாவை மெட்ராஸ் பட சமயத்தில் இருந்தே தெரியும். அவர் என்னிடம் தனக்காக ஒரு கதையை தயார் செய்யுமாறு அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார். அதனால்தான் இந்த படம் மூலமாக நாங்கள் இருவரும் இணைந்து இருக்கிறோம் என்று கூறியுள்ளார் ரஞ்சித்.

-விளம்பரம்-
Advertisement