‘ஓ மணப்பெண்ணே’ – முழு விமர்சனம் இதோ.

0
4061
- Advertisement -

ஹரிஷ் கல்யான் நடிப்பில், அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் இன்று ஹாட் ஸ்டார் Ott தளத்தில் வெளியாகி இருக்கிறது. வேணு அரவிந்த், அபிஷேக் குமார், அன்புதாசன், அனிஷ் குருவில்லா, குக்கு வித் கோமாளி அஸ்வின், கே எஸ் ஜி வெங்கடேஷ் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்து இருக்கிறார். இந்த படத்தை பற்றிய முழு விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம் :

- Advertisement -

படத்தின் நாயகனான கார்த்தி (ஹரிஷ் கல்யாண்) கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை வெட்டி இல்லாமல் வீட்டில் விஐபி ஆக இருக்கிறார். எந்த வேலையின் பொறுப்பையும் அவர் ஏற்காமல் ஜாலியாக இருந்து வருகிறார். இருப்பினும் ஒரு chef ஆக வேண்டும், ஒரு ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசைமட்டும் படுகிறார். ஆனால், அதற்கான பணம் அவரிடம் இல்லை. இப்படி ஒரு நிலையில் அவரது தந்தையான வேணு அரவிந்த் அவருக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்தால்தான் சம்பாதிப்பார் என்று ஜோசியர் சொன்னதால் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். ஹரிஷ் கல்யாணும், தனக்கு கல்யாணம் ஆனால் அதில் இருந்து வரதட்சணை வரும், அதை வைத்து செட்டில் ஆகிவிடலாம் என்று எண்ணி திருமணத்திற்கும் சம்மதிக்கிறார். அப்போதுதான் ப்ரியா பவானி சங்கரை பெண்பார்க்க செல்கின்றனர்.

பிரியா பவானி சங்கர், ஹரிஷ் கல்யானுக்கு நேர் எதிரான குணாதிசயத்தை கொண்டவர். எம்பிஏ கோல்டு மேடலிஸ்ட் ஆன அவர் வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்பதை கனவாக கொண்டிருக்கிறார். ஆனால், அவரது தந்தை அதற்க்கு பணம் தர தயாராக இல்லை. அவருக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்பதே அவரின் குறிக்கோள். இதனால் ஒரு ஹோட்டல் பிஸ்னஸ்ஸை ஆரம்பித்து அதில் இருந்து வரும் பணத்தை வைத்து எப்படியாவது வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்,. ஆனால், அவரது தந்தையோ தனக்கு ஆண் பிள்ளை இல்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார். அதனால் பிரியா பவானி சங்கர் எப்படியாவது திருமணம் செய்து வைத்து அனுப்பிவிட வேண்டும் என்று பல வரன்களை பார்க்கிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் தான் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கரை பெண் பார்க்க வருகிறார். அப்போது பிரியா பவானி சங்கர் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் எதிர்பாராத விதமாக பிரியா பவானி சங்கர், ஹரீஷ் கல்யாண் இருவரும் ஒரு சிக்கிக் கொள்கின்றனர். அந்த அறையின் கதவை திறக்க முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் இருவரும் அங்கேயே அமர்ந்து தங்களுடைய வாழ்க்கை கதைகளை சொல்கின்றனர். அதில் இருவருக்குமே தங்களை பற்றியும் தங்கள் முன்னாள் எப்படி காதல் முறிந்தது, தங்களின் வாழ்க்கையின் லட்சியம் என்ன போன்றவற்றை பரிமாறிக் கொள்கின்றனர்.

பின்னர்தான் தெரிகிறது ஹரிஷ் கல்யாண் தவறுதலாக அட்ரஸ் மாறி பிரியா பவானி சங்கர் வீட்டிற்கு வந்துவிடுகிறார் என்று. அதன் பின்னர் ஹரிஷ் கல்யாண் தாங்கள் பார்க்க வந்த பெண்ணை தேடிச்செல்கிறார். அவரோ பயங்கர பணக்காரர் அதனால் ஹரிஷ் கல்யாண் ஒரு வெற்றிகரமான பிசினஸ் மேனாக அவர் எதிர்பார்க்கிறார். இதனால் மீண்டும் பிரியா பவானி ஷங்கருடன் இணைந்து ஒரு புட்டு ட்ரக் பிசினசை துவங்குகிறார்கள். அது மிகவும் பிரபலமடைந்து விடுகிறது. அதன் பின்னர் ஹரிஷ் கல்யாண் ஆசைப்பட்டபடி வரதட்சணைக்காக அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டாரா ? பிரியா பவானி சங்கர் வெளிநாடு சென்றாரா ? பின்னர் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் யாரை திருமணம் செய்து கொண்டார்கள் என்பதுதான் படத்தின் கதை.

பிளஸ் :

oh mana penne

படத்தின் முதல் பிளஸ் இந்த படத்தின் நடிகர் நடிகைகளின் தேர்வு தான். அனைவருமே தங்கள் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்து இருக்கின்றனர்.

அன்புதாசன் மற்றும் அபிஷேக் குமரன் காமெடி ஒர்க் ஆகி இருகிறது. அதிலும் நான் என்ன புடுங்குனா உனக்கு என்னடா வசனம் வேற லெவல்.

இந்த காலத்திலும் ஜோதிடம் சாஸ்திரம் போன்றவற்றி நம்பி பிள்ளைகளின் வாழ்க்கையை கெடுக்கும் பெற்றோர்களுக்கு ஒரு நல்ல மெசேஜ். மேலும், வரதட்சணை குறித்தும் நல்ல கருத்தை சொல்லி இறுகின்றனர்.

படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானி ஷங்கரின் கெமிஸ்ட்ரி செமையாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

குக்கு வித் கோமாளி அஸ்வின் வரும் காட்சிகளும் கண்களுக்கு குளிர்ச்சி தான்.

மைனஸ் :

படத்தின் ஒரு சில காட்சிகள் கொஞ்சம் போர் அடிக்கிறது.

பிரியா பவானி ஷங்கர் அஸ்வின் காதல் கதையை சரியாக காட்டவில்லை

குக்கு வித் கோமாளியில் அஸ்வினின் குரலை கேட்டுவிட்டு இதில் அவருடைய டப்பிங் குரலை கேட்கும் போது அந்நியமாக தெரிகிறது. மேலும், அவர் ஏன் பிரியா பவானி சங்கரை பிரிகிறார் என்ற விளக்கம் சரியாக காண்பிக்கபடவில்லை

மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.

இறுதி அலசல்.

ஹரிஷ் கல்யாண் போன்ற இளம் நடிகர், வெறும் ரொமான்ஸ் படம் மட்டும் செய்யாமல் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இது போன்ற படங்களில் நடித்துள்ளது பாராட்டுக்குரியது. இந்த படம் தெலுங்கில் வெளியான பெல்லி சூப்பளு என்ற படத்தின் தழுவலை போல் இருந்தாலும். சீனுக்கு சீன் காபி அடிக்காமல் கதாபாத்திரங்களில் தன்னுடைய டச்சை புகுத்தி தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர். மொத்தத்தில் ஓ மன பெண்ணே, ஒரு அழகான, டீசென்ட்டான படம். இளசுகளையும் கவரும் பெரியவர்களையும் அவரும்.

Advertisement