தாத்தா, மகன், பேரன் இணைந்து நடித்துள்ள ‘ஓ மை டாக்’ எப்படி – முழு விமர்சனம் இதோ.

0
843
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் அருண் விஜய். தற்போது இவர் நடித்து உள்ள படம் ஓ மை டாக். புதுமுக இயக்குனர் சரோவ் சண்முகம் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ஓ மை டாக். இந்த படத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார், விஜயகுமார், அர்னவ் விஜய் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார் மற்றும் கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகியுள்ள அருண் விஜயின் ஓ மை டாக் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக கதாநாயகன் அருண் விஜய் நடித்திருக்கிறார். இவருடைய மனைவியாக மகிமா நம்பியார், இவருடைய தந்தையாக விஜயகுமார், மகனாக அர்னவ் விஜய் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஊட்டியில் வாழ்ந்து வருகிறார்கள். அருண் விஜய் தன்னுடைய வசதியை மீதி மகனை உலகத்தர பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதால் கடன் சிக்கல், குடும்பத்திலும் சின்னச் சின்ன சங்கடங்கள் என்று எதார்த்தமான குடும்ப வாழ்க்கையை காட்டி இருக்கிறார்கள். அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் மிகவும் குறும்புத்தனமான சேட்டை செய்பவனாக இருக்கிறார்.

- Advertisement -

இன்னொரு பக்கம் வில்லனாக நடித்து இருக்கும் வினய் டாக் ஷோவில் கலந்து கொள்கிறார். அதனால் பல வெற்றிகளை குவிக்கிறார். இப்படி ஒரு நிலையில் கண் தெரியாமல் இருக்கும் ஒரு குட்டி நாயை தன்னுடைய ஆட்கள் மூலம் கொல்ல சொல்கிறார் வினய். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த குட்டி நாய் அர்னவ் விஜயிடம் கிடைக்கிறது. பின் அந்த குட்டி நாய்க்கு சர்ஜரி செய்து கண் பார்வை வர வைக்கிறார் அருண் விஜய். பின் அந்த நாயும் வளர ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் டாக் ஷோவில் அர்னவ் விஜய் தன்னுடைய நாயை போட்டிக்கு அழைத்து செல்கிறார்.

அங்கு நடக்கும் எல்லா சுற்றிலும் அர்னவ் விஜய் நாய் வெற்றி பெறுகிறது. இது வில்லன் வினய்க்கு பிடிக்காமல் போகிறது. பிறகு இறுதியாக நடக்கும் போட்டிகளில் அந்த நாயை கலந்து கொள்ளாமல் தடுக்க முயற்சி செய்கிறார் வினய். இறுதியில் அர்னவின் நாய் டாக் ஷோவில் வெற்றி பெற்றதா? வினயின் முயற்சி என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. அதுமட்டும் இல்லாமல் ஒரே படத்தில் முதன் முறையாக ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா,மகன்,பேரன் ஆகிய மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்த படம் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது ஓமை டாக்.

-விளம்பரம்-

படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் அருண் விஜய் தன்னுடைய தந்தை கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். பின் விஜயகுமார் மற்றும் அர்னவ் உடன் வரும் கோபம், பாசம், செண்டிமெண்ட் என அனைத்து காட்சிகளிலும் அருண் விஜய் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படம் அர்னவ் விஜய்க்கு முதல் படம் என்பதால் பல இடங்களில் ரசிக்க வைத்து இருக்கிறார். குடும்பத்தினரால் அடக்க முடியாத குறும்புகள், பள்ளியில் ஆசிரியர்கள் அறியாமல் செய்யும் சேட்டைகள், நாய்க்குட்டி வந்தவுடன் அதனுடன் ஏற்படும் அன்னியோன்யம், கடைசிக் காட்சியில் வில்லனையும் மனம் மாற வைக்கும் தூய அன்பு ஆகிய எல்லாவற்றிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார் அர்ணவ்.

அதேபோல் படத்தில் அர்னாவின் நண்பர்களாக வரும் சிறுவர்களும் தங்களுடைய துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மேலும், அருண் விஜய்யின் மனைவியாக வரும் மஹிமா தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். வழக்கம்போல் விஜயகுமார் தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர்களை தொடர்ந்து ஸ்டைலிஷ் வில்லனாக வினய் மிரட்டி இருக்கிறார். ஒரு கண் தெரியாத நாய் போட்டியில் கலந்து கொண்டு எப்படி வெற்றி பெறுகிறது? என்பது தான் கதையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.

ஒரு சிம்பிளான கதையாக இருந்தாலும் அதை கொண்டு போன விதம் சிறப்பு. மேலும், சிறிய குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் ரசிக்கும் படியாக திரைக்கதை உருவாகி இருக்கிறது. குறிப்பாக சிறுவர்கள் மற்றும் நாய் இடமும் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. புதுமுக இயக்குனர் நாய்க்குட்டி, குதிரை ஆகிய பிற உயிரினங்கள் மீதும் அன்பும், அக்கறையும் காட்ட வேண்டும் என்பதை தான் படத்தில் சொல்லி இருக்கிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் படமாக ஓ மை டாக் அமைந்துள்ளது.

நிறைகள் :

தாத்தா,மகன்,பேரன் ஆகிய மூன்று தலைமுறையினர் ஒரே படத்தில் நடித்து உள்ளார்கள்.

பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக உள்ளது.

சிம்பிளான திரைக்கதையை இயக்குனர் கொண்டு போன விதம் அருமையாக உள்ளது.

சிறியவர்கள் விரும்பி பார்க்கும் படமாக உள்ளது.

குறைகள் :

ஆங்காங்கே சில இடங்களில் லாஜிக் குறைபாடுகள்.

காமெடி காட்சிகள் இருந்திருக்கலாம்.

சில இடங்களில் சலிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

வழக்கமாக ஒரு நாயை வைத்து கதை முழுவதும் செல்கிறது.

மொத்தத்தில் ஓ மை டாக்- சிறியவர்களை கவரும்.

Advertisement