14 வயது பெண்ணை மிரட்டி கற்பமாகியுள்ள ‘ஓ மை காட்’ டிக் டாக் பிரபலம். போக்ஸோ சட்டத்தில் கைது.

0
8384
bar

சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும் ஆண்கள் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விடீயோக்கள் மூலம் லட்சக்கணக்கில் லைக் பெறுவதும் உண்டு. இந்த அற்ப லைக்குக்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வந்தனர்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் இந்த டிக் டாக் செயலி பிரபலமானது. அதே போல இந்த டிக் டாக் செயலி மூலம் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் பிரபலமாகி இருக்கின்றனர். அந்த வகையில் தெலுங்கில் ‘Fun Bucket’ என்ற பெயரால் ஆரம்பிக்கப்பட்ட டிக் டாக் வீடியோகள் பெரும் வைரலானது. அதிலும் அந்த டிக் டாக்கில் வரும் ‘ஓ மை காட், ஓ மை காட்’ என்ற வசனம் பெரும் பிரபலம் தான்.

இதையும் பாருங்க : உன் அப்பன் பணத்த அழிக்காதே – அட்வைஸ் செய்தவருக்கு சச்சின் மகள் கொடுத்த பதிலடி. (அப்படி என்னையா அந்த பொண்ணு பண்ணிடிச்சி)

- Advertisement -

இந்த ‘Fun Bucket’ சேனலில் பார்கவ் மற்றும் நித்யா என்ற இரண்டு நபர்கள் செய்த வீடியோக்கள் படு வைரலானது. இப்படி ஒரு நிலையில் இந்த சேனலின் ஒரு உரிமையாளரான பார்கவ், 14 வயது சிறுமையை பாலியல் கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுளளார். பார்கவ் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். மேலும் அந்த சிறுமியுடன் தன் காதலை தெரிவிக்க அந்த சிறுமி மறுத்ததால் அவரது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும் தன்னை காதலிக்க மறுத்தால் அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளான்.

பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளான். ஆரம்பத்தில் இதுகுறித்து வீட்டில் மறைத்துள்ள அந்த சிறுமி பின்னர் 4 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளது அவரது குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த சிறுமியின் குடும்பத்தார் பார்க்கவ் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து பார்கவ்வை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து உள்ளார்கள். ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் விசாகப்பட்டினத்தில் உள்ள போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவனுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement