உன் அப்பன் பணத்த அழிக்காதே – அட்வைஸ் செய்தவருக்கு சச்சின் மகள் கொடுத்த பதிலடி. (அப்படி என்னையா அந்த பொண்ணு பண்ணிடிச்சி)

0
25933
sachin

தனது அப்பாவின் பணத்தை அழிக்க வேண்டாம் என்று அட்வைஸ் செய்த ரசிகருக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் மகள் சாரா பதிலடி கொடுத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் மற்றும் 100 சதங்கள் என இவர் எண்ணிலடங்கா பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார்.

சச்சின் 1995ஆம் ஆண்டு அஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு சாரா என்ற மகளும் அர்ஜுன் என்ற மகனும் இருக்கின்றனர். மகன் அர்ஜுன் தற்போது மும்பை அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் அவருடைய மகள் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார்.

இதையும் பாருங்க : சொக்கா போடமா சுகமா இருக்கோ – ராஜா ராணி பட நடிகையை கேலி செய்யும் ரசிகர்கள்.

- Advertisement -

சச்சின் தனது மகளை என்ன தான் மீடியாவிற்கு தன் மகளை காட்டக்கூடாது மகள் பற்றிய செய்திகள் பெரிதாய் வரக்கூடாது என்று நினைத்தாலும் அவரது எண்ணம் சில சமயங்களில் நிறைவேறுவது இல்லை. சச்சின் மகள் சாரா பல கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார். சாரா டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும் கேகேஆர் அணியின் தொடக்க வீரருமான ஷுப்மன் கில்லை காதலிக்கிறார் என்று கூட கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால், இந்த தகவல் வெறும் வதந்தி தான் என்று தெரியவந்தது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் இவர் காபி குடிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர் ‘உன் அப்பா பணத்தை அழிக்காதே’ என்று மெசேஜ் செய்ய அதற்கு சாரா, கஃபைனில் செலவு செய்வது நன்றாக செலவு செய்ததாக தான் அர்த்தம். அது வீணாக்குவது கிடையாது என்று கூறியுள்ளார்

-விளம்பரம்-

Advertisement