தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் ‘தல’ அஜித் மற்றும் ‘தளபதி’ விஜய். இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருக்கின்றது. ஆனால், அது ‘தல’ அஜித் மற்றும் ‘தளபதி’ விஜய் ஆகிய இருவரின் ரசிகர்கள் இடத்தில் இல்லை. அதுவும் சமூக வலைத்தளம் தான் அவர்கள் மோதிக் கொள்ளும் இடமாக இருக்கிறது.அஜித்தின் ரசிகர்கள் விஜய்யை பற்றி இழிவாக பேசி பதிவிட வேண்டியது. விஜய்யின் ரசிகர்கள் அஜித்தை தாழ்த்தி பேசும் வகையில் ஒரு ஹேஸ் டேக் உருவாக்கி அதை ட்விட்டரில் ட்ரெண்டு செய்ய வேண்டியது என இவர்களுக்குள் பிரச்சனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
இது போல பல முறை நடந்து இருக்கிறது. நடிகர் விஜய்க்கு வரும் ஜூன் 22 ஆம் தேதி வந்தால் 47வயது ஆகப்போகிறது. அதே போல நடிகர் அஜித் கடந்த மாதம் தான் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். இவர்கள் இருவருமே ஹன்ட்ஸமான ஹீரோ தான் என்றாலும் யார் தற்போதும் இளமை தோற்றத்துடன் இருக்கிறார் என்றால் அது விஜய் தான் என்பது மறுக்கமுடியாத ஒன்று.
இளம் வயதில் விஜய்யை விட அஜித் தான் படு ஹான்ட்சமாக இருந்தார். ஆனால், அவருக்கு ஏற்பட்ட அறுவை சிகிச்சைகளில் அவரால் உடலை சரியாக கவனித்துக்கொள்ள முடியவில்லை. அதே போல படங்களிலும் பெரிதாக மேக்கப் போடாமல் தான் தற்போது நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் விஜய் மற்றும் அஜித் குறித்து பாட்டி ஒருவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், அஜித்தை விட விஜய் தான் எ;அழகு என்று கூறியுள்ளார். மேலும், யாருடன் நடிப்பீர்களா என்று கேட்டதர்க்கு விஜய்க்கு அம்மாவாக சூப்பரா நடிப்பேன், அஜித்துக்கு அக்காவாக தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்களை கொஞ்சம் காண்டாகி இருக்கிறது.