வைரலான உதயநிதியின் பழைய பதிவு – இப்போதே அரசியல் சண்டையை துவங்கிய விஜய் ரசிகர்கள்.

0
505
- Advertisement -

காலமாக விஜயின் அரசியல் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். இவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. சமீபத்தில் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருந்தார்.

-விளம்பரம்-

இதன் மூலம் விஜய் அரசியல் வருவதற்கு அடுத்த கட்டமாக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று பலரும் கூறுகின்றனர். அதோடு விஜய் விரைவிலேயே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் தன்னுடைய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

இதனை அடுத்து விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகியான புஸ்ஸி தலைமையில் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து தன்னுடைய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.அதோடு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார்.

இப்படி முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாகுவதாகவும் அறிவித்து இருக்கிறார். விஜய்யின் புதிய கட்சிக்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். அந்த வகையில் உதயநிதி ‘இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் அரசியல் இயக்கம் ஆரம்பிக்கும் உரிமை இருக்கின்றது. நடிகர் விஜய் இப்போது இந்த முடிவெடுத்துள்ளார்.

-விளம்பரம்-

அவருக்கு அனைவரது சார்பாகவும் வாழ்த்துகள். அவருடைய மக்கள் பணி சிறக்கட்டும்’ என்று கூறி இருந்தார். இந்த நிலையில், அவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஒரு ட்வீட்டினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஒருவரை டேக் செய்து, “காமெடி பண்ணாதீங்க ப்ரோ, விஜய் அண்ணா கூட போய் போட்டி போட நான் என்ன லூசா?” என்று கேட்டிருக்கிறார். இவர் ட்வீட் போட்டிருந்த இந்த சமயத்தில் அரசியலுக்கு வரும் ஆசை, உதயநிதிக்கும் இல்லை, விஜய்க்கும் இல்லை. ஆனால், தற்போது இருவருமே அரசியலில் இருக்கின்றனர்.

அதே போல 2011ஆம் ஆண்டு உதயநிதி போட்ட மேலும் ஒரு டீவீட்டில் ‘ நான் விஜய் அண்ணாவின் ஆதரவாளன் தான். எல்லோருக்கும் பயம் தான். Time To Lead இப்போ Plead ஆகிடுச்சே என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது தலைவா படம் வந்த போது அப்போதைய ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவால் அந்த படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டது எப்போது விஜய் கையை கட்டிக்கொண்டு ஜெயலலிதாவை சந்திக்க வேண்டுகோள் வைத்த வீடியோ அப்போது கேலிக்கு உள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில் தி.மு.க ஆதரவாளர்கள் தொடர்ந்து விஜய்யை சமூக வலைதளத்தில் கேலி செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்களும் தி.மு.கவை கேலி செய்யும் வகையில் பதிவுகளை போட்டு வருகின்றனர். இதுநாள் வரை அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் மோதிக்கொண்டு இருந்த விஜய் ரசிகர்கள் தற்போது விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு பின்னர் உதயநிதியுடன் மோத துவங்கிவிட்டனர்.

Advertisement