மீண்டும் மாதவனை திருமணம் செய்துகொள்ள சொல்லி கேட்ட 19 வயது பெண். அதற்கு அவரின் பதிலை பாருங்க.

0
12289
Madhavan
- Advertisement -

அரவிந்த்சாமி, பிரசாந்த் போன்ற நடிகர்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் நடிகர் மாதவன் மட்டும்தான். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் மாதவன், தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியிலும் இவருக்கென்று தனித்துவமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். பீகாரில் பிறந்த மாதவன் ஆரம்பத்தில் படங்களில் நடித்து வந்த மாதவன் பின்னர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பின்னர் மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து வந்தார் மாதவன். சாக்லேட் பாய் என்ற அந்தஸ்தில் இருந்ததால் இவருக்கு தொடர்ந்து ரொமான்டிக் ரோல் கிடைத்தது. ஆனால், இவரை ஆக்ஷன் நாயகனாக ஓரளவிற்கு மாற்றியது தம்பி திரைப்படம் தான். அந்த படத்திற்கு பின்னர் மாதவன் தொடந்து ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்தவர்களுக்காக பிரபல நடிகர் செய்த செயல். வைரலாகும் வீடியோ.

மேலும், அலைபாயுதே படத்தில் அறிமுகமாவதற்கு முன்பே அவருக்கு திருமணமும் ஆகி இருந்தது. இருப்பினும் அலைபாயுதே படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம்வந்த மாதவனுக்கு ஆண் ரசிகர்களைவிட பெண் ரசிகர்கள் தான் அதிகம் இருந்தனர். மாதவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்தும் அவரை பல பெண்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். தற்போது மாதவனுக்கு தோலுக்கு மேல் வளர்ந்த ஒரு மகனும் இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் 19 வயது நிரம்பிய பெண் ஒருவர் மாதவனை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு அந்த பெண் ,ஓ மை கடவுளே மேடி தற்போதும் இளமையாகவும் அம்சமாகவும் இருக்கிறீர்கள் எனக்கு 19 வயது தான் ஆகிறது என்னை திருமணம் செய்து கொள்வீர்களா ? அப்படி இல்லை என்றால் ஐ லவ் யு என்றாவது சொல்லுங்கள் போதும் என்று கமெண்ட் செய்திருந்தார் இதற்கு பதிலளித்த மாதவன் சிரித்தபடி மீண்டும் ?? என்று கேள்விக் குறியுடன் பதிவிட்டுள்ளார்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாதவனுக்கு வந்த இது போன்ற கமன்ட்

மாதவன் இப்படி மீண்டுமா என்று கூறியதற்கு காரணமும் இருக்கிறது. கடந்த ஆண்டும் இதே போல மாதவன் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அப்போதும் மாதவனிடம் 18 வயது நிரம்பிய பெண் ஒருவர், எனக்கு 18 வயது ஆகிறது, நான் உங்களை திருமணம் செய்து கொண்டால் தவறா? என்று கமன்ட்செய்திருந்தார். அதற்கு மாதவன் , உங்களுக்கு என்னை விட ஒரு சிறந்த நபர் கணவராக அமைவார் என்று கமன்ட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement