தமிழுக்கு வருகிறார் பிரியா வாரீயர்.! முதல் படமே கலைப்புலி தானுவா.!

0
350
Priya-varrier

இன்டர்நெட் சென்சேஷன் பிரியா பிரகாஷ் தற்போது அவர் அடைந்திருக்கும் புகழை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தள்ளாடி வருகிறார். ஒரு ஆதார் லவ் என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார்.

தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் பாலிவுட் சினிமா வரை சென்று விட்டார் பிரியா வாரியார். தற்போது இந்தியில் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்க : மார்பில் டாட்டூ குத்திக்கொண்ட ப்ரியா வாரியர்.! அதோட அர்த்தம் இதானாம்.! 

இந்நிலையில் பிரியா வாரியரரின் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘ஒரு அடார் லவ்’ தமிழிலும் வெளியாக இருக்கிறது. நூரின் ஷெரீப் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை, ’ஹேப்பி வெட்டிங்’, ’சங்க்ஜ்’ ஆகிய மலையாளப் படங்களை இயக்கிய ஒமர் லுலு இயக்கியுள்ளார். 

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் மற்றும் அதில் முத்தக் காட் சிகளுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றம் வரை சென்றது. அதனால், பிரியா வாரியர் நீண் ட நாள் பேசு பொருளாக இருந்தார். இந்தப் படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் டப் செய்யப்பட்டது. இப்போது தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இதை தயாரிப் பாளர் எஸ்.தாணு, தனது வி கிரியேஷன்ஸ் மூலம் பிப்ரவரி 14 ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார்