ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரை விமர்சனம் !

0
3783
Movie-review

விஜய்சேதுபதி நடிப்பில் ஆறுமுககுமார் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்திருக்கும் படம் ஒருநல்லநாள் பாத்து சொல்றேன். கௌதம் கார்த்திக் மற்றும் நிகாரிகா கொனிடாலே ஜோடியாக நடித்துள்ளனர். காமடிக்கு ரமேஷ் திலக், டேனியல் போப், மற்றும் ராஜ்குமார் ஆகியோர் உள்ளனர். இந்த படத்தை 7C Entertainment Pvt Ltd மற்றும் Amma Narayana Productions இணைந்து தயாரித்துள்ளது

oru nalla naal paathu solren

காட்டிற்குள் தன் கூட்டத்து மக்களுக்கு இளவரசனாக இருக்கும் விஜய் சேதுபதி, தனது காட்டில் ஏற்கனவே வாழ்ந்து சென்னையில் சென்று செட்டில் ஆன ஒரு குடும்பத்தின் பெண்ணை திருமணம் செய்ய சபதம் எடுக்கிறார். இராவணணாக சென்னை சென்று அந்த பெண்ணை கவர்ந்து தன் காட்டிற்கு வருகிறார். இவரை மீட்க வரும் கவுதம் கார்த்திக் எப்படி மீட்டு செல்கிறார், விஜய் சேதுபதி எதற்காக கடத்தினார் என்பதுதான் சேதுபதியின் இராவணகாவியம்.

தன் காட்டில் விவசாயம் செழித்து இளவரசனாக வாழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. அவருக்கு உடன் இருப்பவர்கள், ரமேஷ் திலக் மற்றும் ராஜ்குமார். மூவரும் சேர்ந்து நிகாரிகாவை கடத்த சென்னை செல்கின்றனர். இந்த சீன்களில் காமெடிகள் வந்து போகிறது.

vijay sethubathi

சேதுபதிக்கு அம்மாவாக விஜி சந்திரசேகர் தனது வேலையை கச்சிதமாக செய்துள்ளார். சென்னை சென்று கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் நிகாரிகாவை கடத்துகின்றனர். ஆனால் நிகாரிகாவிற்கு அங்கு தன் கல்லூரியில் உள்ள கௌதம் கார்த்திக்கின் மீது காதல் வருகிகிறது. இந்நிலையில் நிகாரிகா கடத்தப்படுகிறார். கௌதம் கார்த்திக்குடன் சுமார் மூஞ்சி குமார் டேனியல் காமெடியில் அசத்துகிறார்.

vijay sethupathi

விஜய்சேதுபதி மீண்டும் வித்யாசமான கதையுடன் வந்து மக்களை மகிழ்வித்திருக்கிறார். இறுதியாக கௌதம் கார்த்திக் நிகரிகாவை மீட்டரா?? விஜய்சேதுபதி அபாயலட்சுமியான நிகரிகாவை எதற்கு கடத்தினார் என்பதுதான் கதை. அபாயலட்சுமி யார் என்பதை சொல்கிறது கதை.