ஆன்மிகம் குறித்து சீரியல் நடிகை ஸ்வேதா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்வேதா. இவர் இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் ஆன்மிகம் குறித்து கூறியிருந்தது, என்னைப் பொருத்தவரைக்கும் பாசிட்டிவ் எனர்ஜி என்றால் நான் கடவுள் நம்பிக்கையாக பார்க்கிறேன்.
சாமியோட முகத்தை பார்க்கும்போது மனதில் புதுவித தெம்பு வரும். இதை நிச்சயம் எல்லோரும் உணர முடியும். என்னுடைய இஷ்ட தெய்வம் என்றால் அது துர்க்கை அம்மன் தான். அவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்க குடும்பத்தோட குல தெய்வம் பெருமாள். சின்ன வயதிலிருந்தே கடவுள் மீது எனக்கு பற்று அதிகம். தேர்வு நெருங்கும் போது நிச்சயமாக குறைந்தபட்சம் இரண்டு, மூன்று கோயிலுக்கு போயிட்டு வந்து விடுவேன். தினமும் சாமியை வழிபட்டு தான் ஸ்கூலுக்குப் போவேன். அப்படி ஆரம்பித்தது தான் எனக்கு இந்த பழக்கம். நான் ரொம்ப ஹார்ட் வொர்க் பண்ணுவேன். அதற்கான பலன் உடனே கிடைக்கவில்லை என்றாலும் கண்டிப்பாக ஒரு நாள் கிடைக்கும்.
இதையும் பாருங்க : டைட்டில் மட்டுமல்ல விஜய் பெயரிலும் V செண்டிமெண்ட் – இதுவரை நடிக்காத ரோலில் விஜய்.
ஸ்வேதா அளித்த பேட்டி:
அதை கடவுள் தான் எனக்கு உணர்த்தினார். தமிழ் சீரியல் பண்ணனும் என்று ரொம்பவே ஆசைப்பட்டேன். அது உடனே நடக்கவில்லை. தாமதமானாலும் நடந்தது. அதை தான் கடவுள் நம்பிக்கை என்று சொன்னேன். நான் சீரியல் ஆர்ட்டிஸ்ட். எப்ப சீரியல் முடியும் போகும் என்று தெரியாது. நிரந்தர வருமானம் வரக்கூடிய வேலை கிடையாது. அப்படி சூட் முடிந்து என்ன பண்ணுவது என்று உட்கார்ந்த சமயம் சட்டென விளம்பர படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏதோ ஒரு வகையில் வருமானம் கிடைக்க வழிவகை செய்து கொடுக்கிறார் கடவுள் என்று தோன்றியது. நான் நிறைய கோவிலுக்கு போவேன். மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு அடிக்கடி போவேன்.
கோமா நிலைக்கு போன பிறகு:
இப்ப கொரோனா காரணமாக இரண்டு, மூன்று வருஷமாக போகமுடியவில்லை. திடீரென்று ஒருநாள் பிரண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து போகலாம் என்று முடிவு பண்ணி போயிட்டு வந்தோம். அப்படி நான் ப்ளான் பண்ணாம திடீரென்று நிறைய கோயிலுக்கு போயிட்டு வந்து இருக்கிறேன். அப்போதெல்லாம் கடவுள் நம்மளை கூட்டிட்டுப் போகிறார் என்று தோணும். வருஷத்துக்கு ஒரு முறை நிச்சயமாக ஷீர்டி சாய்பாபா கோவிலுக்கு போயிட்டு வந்து விடுவேன். மீடியா துறையில் வரதுக்கு முன்னாடி படித்து முடித்துவிட்டு ஒரு கம்பெனியில் வேலைக்கு போயிட்டு இருந்தேன். அந்த சமயம் எனக்கு உடல்நிலை ரொம்ப மோசமாகி கோமா ஸ்டேஜுக்கு போயிட்டேன். நான் பிழைத்ததே பெரிய விஷயம்.
ஷீரடி சாய்பாபா:
எங்க வீட்டில் ஷீர்டிக்கு போய் எனக்காக வேண்டிக் கொண்டு விபூதி எல்லாம் வைத்து விட்டார்கள். அவர்களுடைய வேண்டுதலின் பலனாக நான் பிழைத்தேன். சாய்பாபா தான் எனக்கு புது வாழ்க்கையை கொடுத்தார். அவர் கொடுத்த வாழ்க்கையை தான் இப்ப நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதிலிருந்து தவறாமல் ஷீர்டிக்கு இப்போது வரைப் பார்த்து தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். கோயிலுக்கு போவதற்கு முன்னாடி மனசுல பல கவலைகள், குழப்பங்கள் எல்லாம் இருக்கும் போது அவரை பார்த்துவிட்டு வரும்போது நான் இருப்பேன் என்கிற உணர்வைத் அவர் கொடுப்பார். நமக்கு நல்லதுதான் நடக்கும் என்கிற பாசிட்டிவான சிந்தனைகள் ஏற்படும். ஒவ்வொரு முறையும் பாபா கோயிலுக்கு போயிட்டு வரும்போது அவருடைய சிலை வாங்கிட்டு வருவேன்.
ஆன்மிகம் குறித்து ஸ்வேதா சொன்னது:
கல்யாணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி வரை எங்க வீட்டில் கிட்டத்தட்ட 20 பாபா இருந்தார்கள். கல்யாணத்துக்கு பிறகு வீட்டில் ஒரு பெரிய பாபா சிலை வாங்கி வைத்து வழிபடுகிறோம். இப்ப வாங்கிற சிலையை நெருக்கமான நண்பர்களுக்கு பரிசளிக்கிறேன். என்னோட ஊர் பெங்களூராக இருந்தாலும் சென்னை சூட்டிங்கிற்காக வரதுக்கு முன்னாடியே மேல்மருவத்தூர் கோயிலுக்கு வருவேன். என்னுடைய பேவரைட் கோயில்களில் அதுவும் ஒன்று. 5 வருடமாக மாலை போட்டு இருக்கேன். இப்ப சூட்டிங்கிற்காக வரும் போது தவறாமல் அங்க போயிட்டு வந்து விடுவேன். அதே மாதிரி வடபழனி முருகன் கோயிலுக்கு அடிக்கடி போவேன் என்று ஆன்மீகம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் நடிகை ஸ்வேதா .