தென்னிந்திய சினிமா உலகில் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பி.வாசு. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், திரைப்பட கதாசிரியர் என பன்முகங்களை கொண்டவர். இவருடைய திரைப்படங்கள் எல்லாமே வணிக ரீதியாக வெற்றி அடைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் ஒரு வெற்றிகரமான இயக்குனராக திகழ்ந்த போதிலும் இவரது மகன் சக்தியால் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிகரமான நடிகராக வர முடியவில்லை.
சக்தி அவர்கள் ‘தொட்டால் பூ மலரும்’ என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இதன் பின் பல படங்கள் நடித்து இருக்கிறார். ஆனால், சக்திக்கு அழகும் திறமையும் இருந்தும் சினிமாவில் பட வாய்ப்புகள் சொல்லி கொள்ளும் அளவிற்கு அமையவில்லை. அதன் பின் சக்தி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். ஆனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நிறைய எதிர்மறை விமர்சனங்கள் தான் வந்தது. சொல்லப் போனால் ஒரு பெரிய வில்லனாகவே இவர் மக்கள் மத்தியில் தோன்றினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சக்தி:
அதற்குப்பின் இவர் சில படங்களில் நடித்தார். இருந்தாலும், பெரிதாக வரவேற்க்கப்படவில்லை. அதற்குப்பின் இவருக்கு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் சக்தி, நான் சின்ன வயதிலிருந்தே தோல்வியை சந்தித்தது கிடையாது. எதிலும் பெயில் ஆனதும் கிடையாது. நன்றாகத்தான் நான் படித்தேன். நான் எம்பிஏ வரை படித்திருக்கிறேன். ஆனால், இந்த சினிமாத்துறைக்கு வந்த பிறகு தான் நான் நிறைய தோல்விகளை சந்தித்து இருக்கிறேன். குறிப்பாக, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது தான் என்னுடைய வாழ்க்கையிலேயே நான் செய்த பெரிய தவறு.
சக்தி பேட்டி:
என்னுடைய அப்பா இந்த நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என்று சொன்னார். ஆனால், நான் அதை கேட்காமல் பிடிவாதமாகப் போனேன். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு பல பிரச்சனைகள் வந்தது. அதனால் நான் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். உண்மையில் எனக்கு திமிர் எல்லாம் கிடையாது. நான் யார் வம்புக்குமே போக மாட்டேன். நிறைய பேர் பூட்டிக்கொண்டு செய்யிற விஷயத்தை நான் திறந்து வைத்துக் கொண்டு பண்ணுவேன். அது என்னோட கெட்ட நேரம். முதலில் சந்தோஷத்துக்கு குடிக்கிறவங்க இருப்பாங்க, பண திமிரில் குடிப்பாங்க, சூழ்நிலை கஷ்டத்தில் குடிப்பாங்க. எனக்கு திமிர் எல்லாம் கிடையாது.
வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள்:
என்னுடைய கஷ்டம் என்ன என்பது என் குடும்பத்திற்கு தெரியும். அந்த கடவுளுக்கு தெரியும். அதிலிருந்து மீண்டு நான் இப்போது என் குடும்பத்துக்காக வந்து விட்டேன். இப்போது வேலை வேலை என்றுதான் இருக்கிறேன். என்னை எல்லோருக்குமே பிடிக்கனும் என்று அவசியம் கிடையாது. பிடிக்கிறவங்களுக்கு பிடித்தால் போதும். நான் தவறு பண்ணினால் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார். இவரை தொடர்ந்து பி. வாசு பேட்டியில், ஒருமுறை நான் என்னுடைய அப்பாவுக்கு தெரியாமல் குடித்தேன். அது எங்க அப்பா பார்த்துவிட்டு, உங்களை மாதிரி நான் இருக்கணும்னு நினைத்திருந்தால் நீங்கள் இப்படி இருக்க முடியாது என்று சொன்னார்.
பி.வாசு அளித்த பேட்டி:
நான் என்னை நம்பி இருக்கிறவங்களை நினைக்கிறேன் என்று சொன்னார். அதனாலே நான் குடிப்பது கிடையாது. வீட்டில் நடக்கும் பல கஷ்டங்களையும் நான் மனதுக்குள்ளே வைத்துக் கொள்வேன். நிறைய முறை நான் பல விஷயங்களை வெளியில் சொல்ல முடியாமல் பாத்ரூமில் போய் அழுது இருக்கிறேன். அடக்கி கை, பல்லு எல்லாம் கடித்து அழுதிருக்கிறேன் என்று கூற, பின் சக்தி, எதைப் பற்றியும் கவலைப்படாதே, உன்னுடைய வேலையை பார்த்துட்டு போய்க்கொண்டு இரு. காலம் பொன் போன்றது என்று அப்பா சொன்னார். ஒரு ஐந்து வருடங்கள் ரொம்ப கஷ்டமான காலகட்டமாக இருந்தது. ஒரு நாள் ரஜினி சார் போன் பண்ணி என்னை அவர் வீட்டுக்கு வர சொன்னார். பின் அவர் ஆறுதலாக பல விஷயங்கள் பகிர்ந்தார் என்று பல விஷயங்களை எமோஷனலாக பேசியிருக்கிறார்கள்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.