தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பி. வாசு என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. அந்த அளவிற்கு பி. வாசு வணிகரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இவர் முதன் முதலாக பன்னீர் புஷ்பங்கள் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது இவர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து சந்திரமுகி 2 படம் இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காலங்கள் கடந்தாலும் சின்னத்தம்பி படம் மாதிரி ஒரு படம் மீண்டும் வருவது எல்லாம் ரொம்ப கஷ்டம்.
இந்நிலையில் இயக்குனர் பி. வாசு அவர்கள் சமீபத்தில் நடந்த பேட்டியில் சின்னத்தம்பி படத்தில் நடந்த அனுபவங்களைக் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் உங்கள் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த சின்னத்தம்பி கதை உருவான விதத்தைப் பற்றிக் கூறுங்கள் என்று கேட்டதற்கு அவர் கூறியது, நான் ஒருமுறை சூட்டிங்க்காக போன இடத்தில் அரண்மனைகள் மாதிரி அழகான வீடுகள் இருந்தது. அந்த அரண்மனையோட ராஜா சூட்டிங் பார்க்க வந்திருந்தார்.
இதையும் பாருங்க : ஜோதிகா குறிப்பிட்டு பேசிய மருத்துவமனையில் சிக்கிய பல விஷப்பாம்புகள், ஒருவர் பலி- வைரலாகும் வீடியோ.
அப்போது அங்கு ஜன்னல் வழியாக ஒரு பெண்ணின் குரல் கேட்டது. உடனே ராஜா அந்த ஜன்னல் பக்கத்தில் போய் பதில் சொல்லிவிட்டு வந்தார். அந்த பெண் வெளியே வரவில்லை. பிறகு நான் இது குறித்து அவர்களிடம் கேட்டதற்கு வெளி ஆட்கள் முன்னாடி ராஜா வீட்டுப் பெண்கள் யாரும் வெளியே வரமாட்டாங்க என்று சொன்னார்கள். பிறகு வேறு இடத்துக்கு சூட்டிங்காக போனோம். அங்கே தனிப்பட்ட முறையில் ஒரு பாதை இருந்தது.
இது என்னன்னு கேட்டப்ப ராஜா வீட்டு பொண்ணுங்க எல்லாரும் இந்த வழியாகத் தான் கோயிலுக்கு போவார்கள், வருவார்கள் என்றும், ராஜா வீட்டு பொண்ணுங்க சாமி கும்பிட்ட பிறகு தான் அனைவரும் வந்து சாமி கும்பிடுவார்கள் என்றும் சொன்னார்கள். இதையெல்லாம் கேட்டு எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதை மையமாக வைத்து தான் நான் சின்னதம்பி படத்தை எடுக்க யோசித்தேன். படத்தில் இளையராஜா இருந்தால் நல்லா இருக்கும் என்று தான் கதாநாயகனை பாடகராக மாற்றினேன் என்று கூறினார்.
இதையும் பாருங்க : கண்ணீர் மல்க கைகூப்பி கும்பிட்டு இயக்குனரின் காலில் விழுந்த நயன். வைரலாகும் வீடியோ.
இதனை தொடர்ந்து சின்னத்தம்பி படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் பிரபு, குஷ்பு, கவுண்டமணி, மனோரமா என பல நடிகர்கள் சொல்லலாம். எப்படி இவர்கள் எல்லாம் இந்த படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறியது, 1988 ஆம் ஆண்டு வெளிவந்த என் தங்கச்சி படிச்சவ படத்தின் முதல் பாதியில் பிரபு ரொம்ப அப்பாவி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த மாதிரி கதாபாத்திரம் தான் பிரபுக்கு நன்றாக இருக்கும் என்று நினைத்து தான் சின்ன தம்பி கதாபாத்திரத்தில் அவரை நடிக்க முடிவு செய்தேன்.
படத்தின் கதை எழுதிக் கொண்டிருக்கும் போதே நான் நடிகன் படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு கதாபாத்திரத்தில் சத்யராஜ் அவர்கள் சித்தப்பா வேடம் அணிந்தும், குஷ்பு சேலை கட்டிட்டு அடக்க ஒடுக்கமான பெண்ணாகவும் வந்து நிற்பார்கள். இந்த சீன் எடுக்கும்போது குஷ்பு தான் சின்னதம்பி கதாநாயகி ஆக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால், அப்போது குஷ்பூவுக்கு தமிழ் சரியாக பேச வராது. ஹிந்தி, இங்கிலீஷ் கலந்த தமிழ் தான் பேசுவார். அவங்களுக்கு போன் பண்ணி படத்தோட கதையை சொன்னேன்.
உடனே குஷ்பூ இந்த மாதிரி கதை கிடைப்பதெல்லாம் ரொம்ப அபூர்வம். கண்டிப்பாக இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னார். ஆனால், படத் தயாரிப்பாளர்களுக்கு தான் குஷ்பு, பிரபு ஜோடி சேர்ந்து நடிப்பதில் உடன் பாடுஇல்லை. பின் குஷ்பு இல்லையென்றால் இந்த படம் நான் எடுக்க மாட்டேன் என்று சொன்னேன். அதற்கு பிறகு தான் இந்த படத்தின் கதை உருவானது. எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை தந்தது என்று கூறினார்.