சந்தோஷ நாராயணன் என்னை முழுமையாக புரிந்து கொண்டவர், ஆனா – ஜி.வி பிரகாஷுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பா.ரஞ்சித்

0
320
- Advertisement -

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உடன் பணியாற்றிய அனுபவத்தை இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்துள்ள செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா.ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘அட்டக்கத்தி’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாகக் கொண்டு ‘மெட்ராஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கியிருந்தார். பின் இவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் இயக்கிய எல்லா படங்களிலும் பெரும்பாலும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்திருப்பார். ஆனால் தற்போது இவர் இயக்கியிருக்கும் தங்கலான் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

தங்கலான்:

அதாவது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல நடிகர் விக்ரம் நடித்திருக்கும் படம் தான் தங்கலான். கேஜிஎப் இல் இருந்த பூர்வ குடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சந்தோஷ் நாராயணன் குறித்து பா.ரஞ்சித்:

தற்போது இந்த படத்தின் பிரமோஷன் வேலைகள் தான் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜி.வி உடன் பணியாற்றிய அனுபவத்தை பா.ரஞ்சித் முதன்முதலாக பகிர்ந்துள்ளார். அதில், எனக்கு எந்த மாதிரி இசை தேவைப்படுகிறது என்பதை நான் ஒரு வார்த்தையில் தான் சொல்வேன். ஆனால, அதில் ஒரு எமோஷன் இருக்கும். நான் சொன்ன ஒரு வார்த்தையில் இருந்தே அந்த எமோஷனை சந்தோஷ் நாராயணன் புரிந்து கொள்வார். சில நேரங்களில் அவர் கொண்டு வரும் பாடல்களை நான் பிடிக்கவில்லை என்று சொன்னாலும், ‘சரி மாமே’ என்று கூலாக போய்விடுவார்.

-விளம்பரம்-

ஜி.வி குறித்து பா.ரஞ்சித்:

ஆனால் ‘தங்கலான்’ படத்திற்காக ஜி.வி பிரகாஷ் உடன் வேலை செய்யும்போது எனக்கு நிறைய கேள்விகள் இருந்தன. நான் சொல்வதை அவரால் புரிந்து கொள்ள முடியுமா என்று. ஆனால் ஜி.வி எனக்கு எப்படிப்பட்ட பாட்டு வேண்டுமோ அதை சொன்ன உடனே புரிந்து கொண்டார். அதுபோல் நான் வேண்டாம் என்று சொன்ன இசைக்கருவிகள் எல்லாம் அவர் பயன்படுத்தவில்லை. இந்தப் படத்தில் ஜி.வியுடன் பணிபுரிந்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

பா.ரஞ்சித் குறித்து ஜி.வி:

அதற்குப் பிறகு ஜி.வி பிரகாஷ் கூறுகையில், ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு குரல் இருக்கிறது. அந்த மாதிரி தங்கலான் படம் பழங்குடி மக்களின் குரலாகும். அந்தக் குரலை தான் இந்த படத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நான் நினைத்தேன். இந்த படத்திற்காக நிறைய பழங்குடி மக்களின் இசையை ஆராய்ச்சி செய்தோம். உலகத்தரம் வாய்ந்த இசையையும், பழங்குடி மக்களின் இசையையும் சேர்த்து இந்த படத்திற்காக உருவாகி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியாக போகும் ‘தங்கலான்’ மக்கள் மனதில் இடத்தை பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement