இந்தியை தேசிய மொழியாக ஏற்கப்போவதில்லை – ரஞ்சித் கருத்திற்கு மோகனின் நேரெதிரான கருத்தை பாருங்க.

0
457
ranjith
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்றும், உள்துறை அமைச்சகத்தில் 70 விழுக்காடு அலுவல் பணிகள் ஹிந்தியில் மட்டுமே நடைபெறுவதாகவும் னைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொதுமொழியாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய மொழி ஒன்று இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தமிழ் சினிமாவில் இருக்கும் பல பரபலங்கள் அமித் ஷாவின் கருத்திற்கு எதிராக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

-விளம்பரம்-

அதிலும் ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் கூட தமிழ் தான் இணைப்பு மொழி என்று கூறி இருந்தது பெரும் பேசுபொருளானது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ரஞ்சித் ‘இந்திய அளவில் இந்தி மொழி ஆதிக்கம் அதிகமாக இருப்பதனால் அவ்வாறு நினைக்கின்றனர். வட இந்தியா, தென் இந்தியாவைவிடவும். வட இந்தியர்கள் தென்னிந்தியர்களைவிடவும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது.

- Advertisement -

இந்தி மொழி குறித்து ரஞ்சித் ;

அதேபோல் இந்தி மொழி, பல மாநிலங்கள் சேர்ந்து பேசக்கூடிய ஒரு மொழியாக இருப்பதாலும் அது மேன்மையானது என்று யோசிக்கலாம். ஆனால் அதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லையே. தொடர்ந்து நாம் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். நாம் அதனை ஒருபோதும் தேசிய மொழியாக ஏற்கப்போவதில்லை.எனக்கான இணைப்பு மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

திராவிடர்கள் ஒன்று சேர வேண்டும் :

அப்படி இருப்பது தவறில்லை. இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் அவசியம் என்று நான் கருதுகிறேன். திராவிடர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிற்பது முக்கியமனது என்றும் நான் நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இப்படி ஒரு நிலையில் இந்தி மொழிக்கு ஆதரவாக திரௌபதி இயக்குனர் ஜி மோகன் பதிவிட்டு இருப்பது ரஞ்சித்தின் கருத்திற்கு நேரெதிராக இருக்கிறது. அவர் பதிவிட்டுள்ளதாவது : –

-விளம்பரம்-

இந்தி மொழி குறித்து மோகன் :

இந்தி ஏற்க மாட்டோம் ஆனால் இந்தி படங்கள் இயக்க துடிப்போம், இந்தி படிக்க புடிக்காது ஆனால் இந்தி நடிகர்கள், நடிகைகளை தமிழில் நடிக்க வைப்போம், இந்தி பேச புடிக்காது ஆனால் தமிழ் படங்களை இந்தியில் மொழி பெயர்த்து லாபம் அடைவோம்.. தமிழின் பெயரை சொல்லி ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள். இப்படி பேசும் எந்த சினிமா பிரபலமும் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழி பாடத்தில் படிக்க வைப்பதில்லை… அப்படி படிக்க வைப்பவர்கள் இதை பேசட்டும்.. ஆதரவு தரலாம் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தி திணிப்பு குறித்து மோகன் :

மோகனின் இந்த கருத்தை பலரும் ஆதரித்தும் பலரும் எதிர்த்தும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ட்விட்டர் வாசி ஒருவர் ‘இந்தி படிப்பது தவறில்லை இந்தியை திணிப்பது தவறு !!!’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த மோகன் ‘இந்தியை திணித்தால் நிச்சயம் தவறு தான்.. ஏற்கவே மாட்டோம் என ஊருக்கு சொல்லிட்டு அங்க தொழில் பண்ண நினைக்கிறது தவறு..’ என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement