‘ஓ’ன்ற வார்த்த அவனுக்கு பெரிய பிரச்சனை ஆகிடுச்சாம் – லோகேஷ் படம் குறித்து கடுமையாக விமர்சித்த பா ரஞ்சித். வைரலாகும் வீடியோ இதோ.

0
836
- Advertisement -

மாநகரம் படம் குறித்து பா ரஞ்சித் பேசி இருந்த பழைய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இவர் முதல் படத்திலே சினிமா உலகில் தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான படத்தை கொடுத்து இருந்தார். அதனை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. பின் இவர் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ ‘தளபதி’ படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படமும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருந்தது. பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து இருந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் சேர்ந்து உதயநிதி ஸ்டாலின் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இதையும் பாருங்க : எனக்கும் விஜய்யும் பிடிக்கும் அஜித்தும் புடிக்கும், ஆனா, இவர் பையனா நடிக்கனும்னு தான் ஆசை – நயனின் ரீல் மகன் ரித்து ராக்ஸ் .

- Advertisement -

விக்ரம் படம்:

மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள். மேலும், இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. இதனால் விக்ரம் படம் உலகம் முழுவதும் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த மாபெரும் வெற்றிக்கு கமல் படக்குழுவினருக்கு பரிசு கொடுத்து இருந்தார்.

லோகேஷ்-விஜய் கூட்டணி:

இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜயை வைத்து தளபதி 67 படத்தை இயக்குகிறார். இந்த தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இது உறுதியான தகவல் என்று லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் மாநகரம் படம் குறித்து பா ரஞ்சித் பேசி இருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, மாநகரம் படத்தில் இடம்பெற்ற ஒரு கெட்ட வார்த்தை கோபத்தை தூண்டுகிறதாம்.

-விளம்பரம்-

மாநகரம் படம் குறித்து பா.ரஞ்சித் சொன்னது:

ஏன், இதற்கும் முன் சென்னையை தவிர்த்து வேறு எந்த ஒரு ஊரிலும் கெட்ட வார்த்தையை நீங்கள் கேட்டதே இல்லையா? இந்த வார்த்தை கேட்டவுடன் உங்களுக்கு கோபம் வருகிறது என்றால், அது சைக்கலாஜிக்கல் பிரச்சனை. ஏனென்றால், உன் சொல் பேச்சை கேட்ட அடிமைப்பட்டு கிடந்த ஒருவன் சென்னையில் உன்னை அசால்டாக டீல் செய்வது உனக்கு கோபத்தை தூண்டுகிறது என்று கூறியிருக்கிறார். இப்படி சில வருடங்களுக்கு முன்பு பா ரஞ்சித் பேசியுள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பா.ரஞ்சித் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா. ரஞ்சித். 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் மெட்ராஸ் கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற பல படங்களை இயக்கி இருந்தார். தற்போது இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது.

Advertisement