‘இவர யாருன்னே தெரியாது’ கௌதம் மேனனின் ஷாக்கிங் பதில் – பதிவையே நீக்கிய ரஞ்சித். வைரலாகும் ஸ்க்ரீன் ஷாட் இதோ.

0
1209
ranjith
- Advertisement -

பிரபல இயக்குனர் ப ரஞ்சித், கெளதம் மேனன் படம் குறித்த பதிவை கண்டு கெளதம் மேனனே ஷாக்காகி இருக்கிறார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் இயக்குனர் கௌதம் மேனனும் ஒருவர் இவர் இயக்கிய பல்வேறு திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்திருக்கிறது. அதிலும் போலீஸ் ஸ்டோரி என்றால் நிச்சயம் ஹிட் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், சமீபகாலமாக இவர் இயக்கிய எந்த படங்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

-விளம்பரம்-

இயக்குனர் கெளதம் மேனனை விட நடிகர் கெளதம் மேனனை தான் அதிகம் பேருக்கு பிடிக்கும். அதிலும் குறிப்பாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. மேலும், இறுதியாக இவர் மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ருத்ர தாண்டவம் ‘ படத்தில் கூட ஒரு போலீஸ் அதிகாரியாக தான் நடித்து இருந்தார்.

- Advertisement -

இதனாலேயே இவரை பல ரசிகர்களும் இவர் ஒரு நல்ல போலீஸ் ஸ்டோரியில் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பிரபல இயக்குனர் ரஞ்சித், கெளதம் மேனனின் அடுத்த படத்தின் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து இருந்தார். வினோத் என்பவர் இயக்கத்தில், seventymmstudio தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ‘அன்புச்செல்வன்’ என்று டைட்டிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கெளதம் மேனன் இயக்கிய ‘காக்கா காக்கா’ படத்தில் நடித்த சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயரான ‘அன்புச் செல்வன்’ என்ற பெயரை தான் இந்த படத்திற்கு வைக்கப்பட்டு இருந்தது. அதே போல இந்த படத்தின் போஸ்டரிலும் கெளதம் மேனன் காக்கி சட்டையில் இருந்தார். இதனால் இந்த படம் உண்மை தானோ என்று ரசிகர்கள் பலரும் நினைத்துவிட்டார்கள்.

-விளம்பரம்-

ஆனால், இந்த படத்தின் போஸ்டர் போலியானது என்றும் இப்படி ஒரு படத்தில் நான் நடிக்கவே இல்லை என்றும் கூறி ஷாக் கொடுத்துள்ளார் Gvm. இதுகுறித்து பதிவிட்ட அவர், இந்த செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தை பற்றி எனக்கு எந்த ஒரு ஐடியாவும் கிடையாது. ஆனால் இந்த படத்தின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள இயக்குனரை எனக்கு யார் என்றே தெரியாது அவரை நான் நேரில் கூட சந்தித்தது இல்லை.

தயாரிப்பாளர் ஒரு மிகப்பெரிய நபரை வைத்து ட்வீட் செய்திருக்கிறார். இது போன்ற விஷயங்கள் மிகவும் சுலபமாக நடக்கிறது என்று நினைத்தால் மிகவும் அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது என்று பதிவிட்டு இருக்கிறார். கெளதம் மேனனின் இந்த பதிவை கண்டதும் பா ரஞ்சித், அந்த பதிவையே நீக்கிவிட்டார். இருப்பினும் அதன் ஸ்க்ரீன் ஷாட் வைரலாக பரவி வருகிறது.

Advertisement