பா ரஞ்சித்தின் ‘தம்மம்’ படத்தில் நடித்த இந்த சிறுமி யார் ? எப்படி கிடைத்தது இந்த வாய்ப்பு ? பூர்வதாரணியின் பேட்டி.

0
629
dammam
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக பா ரஞ்சித் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த படம் தம்மம். இந்த படத்தில் ஒரு காட்சியில் பௌத்த மதத்தை அவமதித்ததாக சொல்லி தமிழ்நாடு பக்தர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதற்கு படக்குழுவினர் தரப்பிலும் பதிலளித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் தைரியமிக்க பெண்மணி கதாபாத்திரத்தில் நடித்து மக்களை பிரம்மிக்க வைத்திருப்பவர் பூர்வ தாரணி. இவர் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த கர்ணன் படத்தில் முகம் காட்டாத காட்டு பேச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் பூர்வ தாரணியிடம் பிரபல ஊடகம் பேட்டி ஒன்றை எடுத்திருந்தது. அதில் அவர் கூறியிருப்பது, சினிமாவில் நடிக்கணும் என்கிற ஆசை எல்லாம் எனக்கு கிடையாது.

- Advertisement -

பூர்வ தாரணி அளித்த பேட்டி:

நாங்கள் வானம் கலை திருவிழாவுக்கு அடிக்கடி போவோம். அப்போது அங்கு நான் நாடகமெல்லாம் நடித்திருக்கிறேன். அந்த சமயத்தில் ஒரு அக்கா என்னை பார்த்து விட்டு, நீ ரொம்ப நல்லா நடிக்கிறாய்! என்று பாராட்டி இருந்தார். பின் ஷார்ட் பிலிமில் நடிக்கிறாயா? என்று கேட்டார். நானும் ஜாலியாக போய் நடித்தும் கொடுத்தேன். நான் நடித்த சாட்பிலிம் ரஞ்சித் பெரியப்பா பார்த்திருந்தார். ஆனால், நான் நடித்தது அவர்களுக்கு முன்னாடி தெரியாது. நான் நடித்ததை பார்த்து நம்ம தாரணியா என்று ஆச்சரியப்பட்டார்கள்.

சினிமா வாய்ப்பு:

அதற்குப் பிறகுதான் என்னை கூப்பிட்டு பாராட்டி தம்மம் படத்தில் நடிக்க வைத்தார் இரஞ்சித் பெரியப்பா. கர்ணன் படத்தில் காட்டு பேச்சியாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், கர்ணன் படத்தில் என்னோட முகம் யாருக்குமே தெரியாது. இன்னமும் அந்த படத்தில் வந்த காட்டு பேச்சு யார்? என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது தம்மம் படத்தின் கதை முழுக்க என்னுடைய முகம் தெரிவது எனக்கு சந்தோஷமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. டிவியில் வந்த விளம்பரங்களை பார்த்து விட்டு நீதானே அந்த படத்தில் நடித்திருக்கிறாய் என்று கேட்பது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.

-விளம்பரம்-

சூட்டிங் ஸ்பாட் குறித்து சொன்னது:

அது மட்டும் இல்லாமல் ரொம்ப நன்றாக நடித்து இருக்கிறார் என்று பலரும் பாராட்டி இருந்தார்கள். அந்த வகையில் வெங்கட் பிரபு சார், என்னை பாராட்டி உனக்கு ஏதாவது நடிக்க பயிற்சி கொடுத்தார்களா? என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னதும் அவர் வியப்படைந்து விட்டார். சூட்டிங் போவதற்கு முன்னால் எனக்கு எந்த ஒரு நடிப்பு பயிற்சியும் கொடுக்கவில்லை. சூட்டிங் ஸ்பாட்டில் இதுதான் சூழ்நிலை, இப்படி தான் பண்ணனும் என்று சொல்லுவார்கள். அவர் சொன்னதை அப்படியே பண்ணுவேன். சூட்டிங்கில் எல்லோருமே ரொம்ப ஜாலியாக இருந்தார்கள். ஒரு வாரம் இந்த படத்தை எடுத்தார்கள்.

புத்தர் குறித்து சொன்னது:

சூட்டிங்கில் விளையாடிக் கொண்டிருந்தாலும் ஸ்டார்ட் என்று சொன்னதும் நடித்துக் கொடுப்போம். படத்தில் மட்டுமில்லை நிஜத்திலும் நான் ரொம்ப தைரியமான பொண்ணு தான். புத்தர் பற்றிய கொள்கை எல்லாம் எனக்கு முழுசா தெரியாது. ஆனால், வீட்டில் புத்தர் சிலை இருக்கு. எங்க அப்பா ஜீவநாதன். பெரியப்பா ரஞ்சித் எல்லோரும் புத்தரை பின்பற்றுவார்கள். அதனால் தான் பூர்வ தாரணி என்று புத்தர் பெயரை எனக்கு வைத்தார்கள். என் தம்பி பெயர் கனிஷ். ஆறாவது படிக்கிறான். அரசாங்க பள்ளியில் இப்போது நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். என்று கூறியிருக்கிறார்.

Advertisement