‘இந்த முதல் வாய்ப்பிற்கு நன்றி’ – சினிமா வாய்ப்பு கொடுத்த தன் கணவருக்கு ரஞ்சித் மனைவி போட்ட பதிவு .

0
884
ranjith
- Advertisement -

பொதுவாகவே தமிழ் சினிமாவில் காலம் காலமாக ஜாதிக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட படங்கள் வெளிவந்தாலும் நிஜத்திற்கு நெருக்கமான அரசியல் சினிமா படத்தை தன்னுடைய திரைப்படங்கள் மூலம் புதிய விவாதங்களை உருவாக்குபவர் இயக்குனர் பா ரஞ்சித். 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

-விளம்பரம்-
Image

அதனை தொடர்ந்து இவர் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார். இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சார்பட்டா பரம்பரை படமும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் படங்களையும் தயாரித்து வருகிறார்.

- Advertisement -

பா. ரஞ்சித் இயக்கிய படங்கள்:

இவர் தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. தற்போது வெளிவந்த ரைட்டர் படமும் இவருடைய தயாரிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வந்தார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Image

நட்சத்திரம் நகர்கிறது படம்:

மேலும், நட்சத்திரம் நகர்கிறது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி படக்குழுவினர் அனைவரும் இறுதிநாளில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். அதற்கான புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்கள். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்து உள்ளார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்துக்கு இசையமைத்த தென்மா அவர்கள் தான் இந்த படத்துக்கும் இசை அமைத்துள்ளார்.

-விளம்பரம்-

நட்சத்திரம் நகர்கிறது படம் பற்றிய தகவல்:

முதலில் இந்த படத்துக்கு இளையராஜா தான் இசை அமைப்பார் என்று தகவல் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இந்த படத்தில் கலையரசன், அரிகிருஷ்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை நீலம் புரோடக்சன் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் பா ரஞ்சித் இன் மனைவி அனிதா அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாக இருக்கிறார்.

பா.ரஞ்சித் மனைவி போட்ட டீவ்ட்:

இதுகுறித்து அனிதா ரஞ்சித் தற்போது டீவ்ட் ஒன்று போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, இறுதியாக இது ஒரு முடிவாகும். நட்சத்திரம் நகர்கிரது இந்த முதல் வாய்ப்புக்கு மிக்க நன்றி அன்புள்ள பா ரஞ்சித். கல்லூரிக் காலத்திற்குப் பிறகு உங்களுடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் @officialneelam @YaazhiFilms_ அனைத்து அணிகளுக்கும் எனது நன்றி மற்றும் அசிட் @TamilStylist மட்டுமே என்று கூறி உள்ளார்.

பா.ரஞ்சித் மற்றும் அவரது மனைவி அனிதா இருவரும் சென்னையில் உள்ள நுண்கலை கல்லூரியில் ஒன்றாக சேர்ந்து படித்தவர்கள். படிக்கும் போது இவர்கள் இருவரும் காதலித்தார்கள்.பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இப்படி ஒரு நிலையில் ரஞ்சித்தின் மனைவி தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆவது குறித்து சோஷியல் மீடியாவில் பலரும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். மேலும், ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement