திருமண உடையில் திருமண தேதி – திடீர் திருமணத்தை முடித்த பாவம் கணேசன் சீரியல் நடிகை.

0
480
- Advertisement -

பாவம் கணேசன் சீரியல் நடிகையின் திருமண புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பல்வேறு திருப்பங்களுடன் சென்றிருந்த தொடர் தான் பாவம் கணேசன். இந்த கதை ஆரம்பத்தில் இருந்து நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. இடையில் விறுவிறுப்பு குறைந்த உடன் சீரியலை சீக்கிரமாகவே முடித்து விட்டார்கள்.

-விளம்பரம்-

இந்த சீரியலில் kpy புகழ் நவீன் நாயகனாக அறிமுகமாகி இருந்தார். பின் இந்த தொடரில் நேகா கவுடா, அனில ஸ்ரீகுமார், ஷிமோனா ஜேம்ஸ், ஆனந்த் பாண்டி, ஷயமா ரெய்லடீன் என பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். மேலும், இந்தத் தொடர் பாவம் கணேசன் தன்னுடைய குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு உழைப்பவர். அக்கா, தங்கை, தம்பிகளை நல்லபடியாக வளர்த்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறார். இன்னொரு பக்கம் குணா 15 வருடங்களாக கணேசனை காதலித்து வந்தார்.

- Advertisement -

பாவம் கணேசன் நடிகை:

பிறகு இருவருக்கும் பல போராட்டங்களுக்கு பின் கல்யாணம் நடக்கிறது. இதற்கிடையில் சொந்தங்களே இவருக்கு குழி பறிக்கிறது. இதையெல்லாம் எதிர்த்து கணேசன் எப்படி போராடி ஜெயிக்கிறார் என்பது தான் கதை. மேலும், இந்த சீரியலில் ப்ரியா கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிமோனா.
இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். சன் டிவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த நாயகி என்ற தொடரின் மூலம் ஷிமோனா சின்னத்திரையில் அறிமுகம் ஆகியிருந்தார். அதற்கு பிறகு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் என்ற தொடரில் நடித்திருந்தார்.

ஷிமோனா-கிரண் திருமணம்:

இந்த சீரியலுக்கு பிறகு இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இருந்தாலும் இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். அப்போதுதான் இவர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருப்பதாக கூறி இருந்தார். பின் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று கூறி திருமணம் குறித்த தகவல்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று திருமணம் நடந்திருக்கிறது. நடிகை ஷிமோனா- கிரண் என்பவரை திருமணம் செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ஷிமோனா திருமண உடை:

இவர்கள் திருமணம் கோயம்புத்தூரில் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றிருக்கிறது.
இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும், இவர்களுடைய திருமணத்திற்கு சின்னத்திரை நடிகர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இவருடைய திருமண உடையில் திருமண தேதி, கிரன்- ஷிமோனா ஆகியோரின் பெயர் இடம் பெற்று இருக்கிறது. தற்போது இந்த புகைப்படம் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது

Advertisement