படிக்காதவன் படத்தில் முதலில் இவர் தான் நடிக்க இருந்தாராம் !யார் தெரியுமா ! புகைப்படம் உள்ளே !

0
1284
padikkathavan

தமிழில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான படம் ‘படிக்காதவன் ‘சூப்பர் ஹிட் ஆன படத்தை அவரது மருமகன் தனுஷ் ரீமேக் செய்தார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் 2009 ஆம் ஆண்டு வெளியானது.

Padikathavan vivek

நடிகர் தனுஷ் கதனாயாகனாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். மேலும் காமெடி கலந்த அக்ஷன் படமான இந்த படத்தில் காமெடி நடிகர் விவேக் படம் முழுவதும் பயணம் செய்து கலக்கி இருப்பார். இந்த படத்தின் விவேக் மற்றும் தனுஷின் காமெடி மிகவும் பிரமாதமாக அமைந்தது. அதன் பின்னர் இவர்கள் இருவர் கூட்டணியில் பல படங்கள் வெளியாகி இருக்கிறது.

ஆனால் நடிகர் விவேக் நடித்த அந்த காதா பாத்திரத்தில் முதன் முதலில் காமெடி நடிகர் வடிவேலு தான் நடித்திருந்தாராம். இந்த படத்தில் நடிகர் வடிவேலு விவேக் கதாபாத்திரத்தில் இரண்டு நாட்கள் கூட நடித்து முடித்து விட்டாராம். அதன் பின்னர் இந்த படத்தில் இயக்குனர் சுராஜிடம் தனக்கு காட்சிகளை அதிகமாக வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு சுராஜ் மறுக்கவே இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம் வடிவேலு.

Vadivelu

இதுவரை தனுஷ் மற்றும் வடிவேலு ஓரு படத்தில் கூட இணைந்து நடித்ததில்லை. ஒருவேளை இந்த படத்தில் நடித்திருந்தால், வடிவேலுவை தான் தற்போது தனது படங்களில் தனுஷ் காமெடியனாக போட்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.