எங்கள் உறவு இப்படி தான் ஆரம்பித்தது . அன்வர் பிறந்தநாளில் வாட்ஸ் அப் மெஸேஜை பகிர்ந்த சமீரா.

0
18919
anwar-Sameer
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரு சில சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒளிபரப்பான`பகல் நிலவு’ சீரியல் இளசுகள் மத்தியில் படு பிரபலமடைந்தது. இந்த தொடரில் நடித்த அன்வர்– சமீரா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்கள். சின்னத்திரை தொடர்களில் காதல் ஜோடியாக வலம் வந்தவர்கள் அன்வர்– சமீரா.

-விளம்பரம்-

இவர்கள் பகல் நிலவு சீரியலில் காதலர்களாக நடித்து வந்தார்கள். ஆனால், இவர்கள் லைப்பிலும் உண்மையான காதலர்கள் தான். பின் அன்வர் மற்றும் சமீரா ஜோடி இந்த சீரியலில் இருந்து திடீரென்று விளக்கினார்கள். இதற்கு காரணம் சீரியலில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதற்கு பிறகு சமீரா அவர்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘றெக்க கட்டி பறக்குது மனசு’ என்ற தொடரை தயாரித்தும் அதில் ஹீரோயினியாகவும் நடித்து இருந்தார். இந்த சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலுக்கு பின்னர் அன்வர்– சமீரா அவர்கள் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி மாலை பௌர்ணமி நிலவில் இருவரும் மணம் முடித்து தங்களுடைய வாழ்க்கையை தொடங்கினார்கள்.

Image result for anwar sameera

-விளம்பரம்-

மேலும், ஹைதராபாத்தில் உள்ள சமீரா வீட்டில் பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் முறைப்படி மிக எளிமையாக இவர்களுடைய திருமணம் நடந்தது. இந்நிலையில் நடிகை சமீரா அவர்கள் தன்னுடைய கணவர் அன்வருக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.

அவரிடம் முதன் முதலாக பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய வாட்ஸ்அப் மெசேஜையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நான் முதன் முதலாக இந்த தேதியில் தான் அவரிடம் பேச ஆரம்பித்தேன். நான் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுப்பி இருந்தேன். உடனே அவர் நான் உங்களிடம் இத எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு ரொம்ப சர்ப்ரைசாக இருக்கிறது. ரொம்ப நன்றி என்று சொன்னார். பின் எப்படி உங்களுக்கு என்னுடைய நம்பர் கிடைத்தது என்று கேட்டார்.

அதற்கு நான் உங்களுடைய அம்மா டிபியில் ஸ்டேடஸ் வைத்திருந்தார்கள். அதை பார்த்து தான் அவர்களிடம் சொன்னேன். அவர்கள் நீங்களே அவரிடம் சொல்லுங்கள் என்று மொபைல் நம்பர் கொடுத்தார்கள் என்று கூறினார். ஐந்து வருடங்களுக்கு முன் நட்பாக தொடங்கிய எங்கள் உறவு இன்று கணவன், மனைவியாக மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் சமீரா. தற்போது இந்த ட்விட்டர் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement