திருமணத்திற்கு பின் சமீரா நடிப்பதை நிறுத்துவிட்டாரா ? விளக்கமளித்த பகல் நிலவு அன்வர்.

0
11402
Anwar-sameera
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரு சில சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பாகத் தொடங்கிய `பகல் நிலவு’ சீரியல் இளசுகள் மத்தியில் படு பிரபலமடைந்தது. இந்த தொடரில் நடித்த அன்வர் சமீரா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்கள். 700-வது எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்த தொடரில் இருந்து அன்வர் மற்றும் சமீரா ஜோடி வெளியேறினார்.

-விளம்பரம்-
Image result for anwar sameera marriage photos

- Advertisement -

விக்னேஷ் கார்த்திக் – சௌந்தர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைந்ததாகவும், அன்வர் கதையில் குறுக்கிட்டு டாமினேட் செய்ததே அதற்குக் காரணம் என்றும் பேசப்பட்டது. அதன் பின்னர் கார்த்திக் மற்றும் சௌந்தர்யா ஜோடியும் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்கள். அன்வர்– சமீரா அவர்கள் நவம்பர் 11ஆம் தேதி மாலை பௌர்ணமி நிலவில் இருவரும் மணம் முடித்து தங்களுடைய வாழ்க்கையை தொடங்கினார்கள். மேலும்,ஹைதராபாத்தில் உள்ள சமீரா வீட்டில் பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் முறைப்படி மிக எளிமையாக இவர்களுடைய திருமணம் நடந்தது.

இதையும் பாருங்க : முதன் முறையாக திருமண முறிவு குறித்து மனமுறுகி பேசிய டிடி திவ்யதர்ஷினி.

ரியல் காதலர்களாக இருந்த அன்வர்– சமீரா பகல் நிலவு சீரியலில் காதலர்களாக நடித்ததால் அந்த சீரியல் செம ஹிட். பகல் நிலவு சீரியலுக்கு பின் சமீரா, ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘றெக்க கட்டி பறக்குது மனசு’ என்ற தொடரை தயாரித்து அதில் ஹீரோயினியாகவும் நடித்து இருந்தார். ‘பொன்மகள் வந்தாள்’ தொடர் மூலம் அன்வர் தயாரிப்பு பக்கம் வந்தார். இந்நிலையில் றெக்க கட்டி பறக்குது சீரியல் சில மாதங்களுக்கு முன்பு தான் வெற்றிகரமாக முடிந்தது.

-விளம்பரம்-
Image result for anwar sameera

இந்த நிலையில் திருமணத்திற்கு பின் சமீரா நடிப்பாரா இல்லையா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. அதை தெளிவுபடுத்தும் விதத்தில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அன்வர் மற்றும் சமீரா இருவரிடமும் இதே கேள்வி கேட்ப்பட்ட போது, அதற்கு அவர்(சமீரா) நடிப்பதும், நடிக்காததும் அவரின் விருப்பம். மேலும், நாங்கள் இருவரும் அவரவர் விருப்பத்திற்கு முடிவு எடுத்துக்கொள்வோம் என்று என இரண்டு பேருமே முடிவு செய்திருக்கோம்  என்று கூறியுள்ளார் அன்வர்.

Advertisement