விஜய் அலுவகத்தில் வாயில் பரோட்டாவுடன் ஆண் சடலம் – போலீசார் விசாரணை. என்ன நடந்தது ?

0
159
vijay
- Advertisement -

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் வாயில் பரோட்டாவுடன் சடலமாக இறந்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். ‘பீஸ்ட்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

இதையும் பாருங்க : இதுநாள் வரை சூர்யவம்சம் படத்தில் வந்த இந்த பையன் கனா காணும் காலங்கள் ராகவினு தான நெனச்சாய்ங்க ? அதான் இல்ல. அந்த குழந்தை இந்த ஜீ தமிழ் சீரியல் நடிகை தான்.

- Advertisement -

தளபதி 66 படம்:

இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் , ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தளபதி 67 படம்:

இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார். அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நடிகர் விஜயின் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து உள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் ஒரு மாதமாக பெயிண்டிங் வேலை சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலம்:

இந்த வேலையை பிரபாகரன் என்பவர் செய்து கொண்டிருந்தார். கடந்த சனிக்கிழமையன்று சம்பளத்தை பெற்று கொண்டு தன்னுடைய குடும்பத்தினரை காணச்சென்ற பிரபாகரன் சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு குடிபோதையில் நடிகர் விஜயின் அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார். அங்கிருந்த மேஸ்திரியிடம் தனக்கு பசிப்பதாக கோரி 100 ரூபாய் பணத்தை பெற்று ஓட்டலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின் மறுநாள் காலையில் அலுவலக வளாகத்தினுள் சுவரை ஒட்டி கையிலும் வாயிலும் பரோட்டா இருந்த நிலையில் பிரபாகரன் இறந்துகிடந்தார்.

ஊழியர் மரணம்:

இதைப் பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் அளித்திருந்தனர். பின் கானத்தூர் போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். போலீஸ் விசாரணையில், குடிபோதையில் இருந்த பிரபாகரன் பரோட்டா சாப்பிட்டதில் உணவு குழாயில் அடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும், உடல்கூறு ஆய்வுகளின் அறிக்கை வந்த பிறகே இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

Advertisement