விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார்..!சர்கார் பட முக்கிய நடிகர் பேட்டி..!

0
149
vijay

‘சர்கார்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும்” என்று அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, அன்பழகன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார், விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் வில்லன்களில் ஒருவராக நடித்த மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா.

KARUPPIAH

இதுகுறித்து பேசியுள்ள அவர், படத்தில் சொல்லப்பட்ட வசனங்கள் அனைத்தும் அப்படியே வெளிவரவில்லை. அதில், ஆளும் அ.தி.மு.க கட்சி பற்றி மட்டுமல்ல, எதிர்க்கட்சியான தி.மு.க பற்றிய வசனங்கள் பலவும் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தி எதிர்ப்பு தொடர்பாகக் கேலிசெய்யும் வசனம் படத்திலிருந்து நீக்கப்பட்டது.

படத்தில் எந்தக் கட்சிக்கும் சார்பாக இல்லை. அமைச்சர்கள் எதிர்க்கிறார்கள் என்றால் அதில் விஷயம் இருக்கிறது என்று எல்லோரும் பார்ப்பார்கள். அமைச்சர்கள் எதிர்ப்பது, வெற்றிபெற வேண்டிய படத்தை பெருவெற்றியாக மாற்ற மட்டுமே உதவும். கல்வி போன்றவைதான் இலவசமாகக் கொடுக்க வேண்டும்.

இலவசங்கள் அன்றைய தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும், நிரந்தர தீர்வைத் தராது. உங்களிடம் வளர்ச்சிக்கான திட்டம் இல்லை. அதை சுட்டிக்காட்டினால் எதிர்ப்பது சரியல்ல. விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்பது உறுதி. அது, அவரிடம் பேசும்போது அவர் பேச்சிலேயே பலமுறை வெளிப்பட்டது. அவரைக் கொண்டாடும் மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், எப்போது வருவார் என்று சொல்ல முடியாது” என்றார்.