விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் நண்பர் திருமணத்தில் சந்தோஷமாக ராஜி- கதிர் இருவரும் ஆட்டம் பாட்டம் என்று இருந்தார்கள். இன்னொரு பக்கம் செந்தில், தலைவலி தாங்க முடியாததால் வீட்டிற்கு வந்துவிட்டார். அந்த சமயம் வந்த பாண்டியன், கடையில் வேலை முடிந்ததா? எதற்காக சீக்கிரம் வந்தாய்? வசூல் கணக்கு எங்கே? அந்த பணத்தை பாதி எடுத்து விட்டாயா? என்றெல்லாம் மோசமாக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட செந்தில், ரூமிற்கு சென்று விட்டார்.

பின் மீனா- கோமதி இருவரும் செந்திலை சமாதானம் செய்யப் பார்த்தார்கள். ஆனால், அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் தங்கமயில் நேரம் ஆகிவிட்டது என்று தன்னுடைய ஓனரிடம் வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்டார். ஆனால், அவர் முடியாது. வேலை செய்துதான் ஆக வேண்டும் என்று கோபமாக சொன்னார். அப்போது தங்கமயிலுக்கு போன் செய்த கோமதி, வீட்டிற்கு வரவில்லையா? என்று கேட்டார். அதற்கு தங்கமயில் தாமதமாகும் என்று சொன்னார். அதன் பின் சரவணன், நான் உன்னுடைய ஆஃபீஸ்க்கு வெளியே தான் நின்று கொண்டிருக்கிறேன் வருகிறாயா? என்று கேட்டவுடன் தங்கமயில் ஷாக் ஆனார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் தங்கமயில், தன்னுடைய ஓனரிடம் எப்படியோ கெஞ்சி கேட்டு கிளம்பி விட்டார். சரவணன் தங்கமயிலுக்காக அவருடைய ஆபீஸ்க்கு வெளியே காத்துக் கொண்டிருந்தார். தங்கமயில் எப்படியோ அந்த இடத்திற்கு வந்து விட்டார். பின் இருவருமே வீட்டிற்கு வந்தார்கள். அப்போது பாண்டியன்-கோமதி இருவரும் ஏன் லேட்? என்று கேட்க, ஏதோ காரணங்களை சொல்லி தங்கமயில் சமாளித்தார். அப்போது கோமதி, டீச்சர் வேலைக்கு போய் இருக்கலாம். இந்த வேலை வேண்டாம் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:
தங்கமயிலின் விருப்பத்தை யாருமே கேட்கவில்லை. மீனா வாசலில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது ராஜி- கதிர் இருவரும் வந்தார்கள். ராஜி கல்யாணத்தில் நடந்த விஷயத்தை எல்லாம் மீனாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டார். அதற்கு பின் செந்தில் வீட்டிற்கு வந்தார். அப்போது மீனா, நான் எப்படியாவது பணத்தை ஏற்பாடு செய்து உங்களுக்கு அந்த வேலை கிடைக்குமாறு ரெடி பண்ணுகிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் அரசிடம் சுகன்யா, நீ ரெடியாகு. குமாருடன் படம் பார்த்துட்டு சாப்பிட போலாம் என்று தேவையில்லாத யோசனை எல்லாம் கொடுத்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அரசி, ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது என்று வீட்டில் சொல்லி வெளியே கிளம்ப பார்க்கிறார். உடனே கோமதி, உனக்கு எப்போதுமே சனிக்கிழமை காலேஜ் இருக்காதே, இப்ப எங்க போகிறாய்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அப்போது பாண்டியன், நம்ம பொண்ணு பொய் சொல்ல போறாளா? என்று அரசிக்கு சப்போர்ட் செய்கிறார். அதற்குப்பின் அரசி கிளம்பிய உடன் சுகன்யாவும் வீட்டிற்கு செல்வதாக சொல்லி இருவருமே தியேட்டருக்கு செல்கிறார்கள். அங்கு குமாரை பார்த்தவுடன் அரசி பயமாக இருக்கிறது என்று புலம்புகிறார்.

சீரியல் ட்ராக்:
உடனே சுகன்யா, உங்கள் இருவருக்கும் மத்தியில் நான் எதற்கு என்று கிளம்பி விடுகிறார். குமார்-அரசி இருவரும் தியேட்டருக்குள் செல்கிறார்கள். பின் பழனியின் அண்ணன் வீட்டிற்கு சென்ற சுகன்யா, இவரை கல்யாணம் செய்து கொண்டு நான் ரொம்பவே கஷ்டப்படுகிறேன். கையில் காசு கூட இல்லை என்று ரொம்ப ஏளனமாக பழனியை பேசுகிறார். உடனே ராஜியின் அம்மா, சேர வேண்டிய நேரத்தில் எல்லோருக்கும் சொத்து பிரித்து கொடுப்பார்கள். நீ அதை பற்றி எல்லாம் யோசிக்காதே என்று கோவமாக பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






