விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன், எங்கு செல்வது என்று புரியாமல் வேதனையில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் பாண்டியன் மீது மோத வர, பாண்டியன் நிலை தடுமாறி கீழே விழ பார்த்தார். அதற்குப்பின் பிச்சை எடுப்பவர்கள் அருகில் அமர்ந்து அரசியை நினைத்து பாண்டியன் வருத்தப்பட்டு அழுது கொண்டிருந்தார். கதிர்-செந்தில்-பழனி மூவருமே பாண்டியனை தேடி எல்லா இடத்திலுமே அலைந்தார்கள். பின் பிச்சைக்காரர் உடன் பாண்டியன் படுத்திருப்பதை பார்த்து கதிர் ரொம்பவே மனமுடைந்து விட்டார்.

பின் அவர் தன்னுடைய தந்தையை எழுப்பி தண்ணீர் கொடுத்து ஆறுதல் சொன்னார். பாண்டியன் ரொம்ப எமோஷனலாக கதிரை கட்டிப்பிடித்து அழுதார். அதற்குப்பின் கதிர், பாண்டியன் இருக்கும் இடத்தை எல்லோருக்கும் சொல்லி வரவைத்தார். வீட்டில் உள்ளவர்களுக்கு பாண்டியன் இருக்கும் இடத்தை சொன்னார்கள். சரவணன், பாண்டியனுக்காக வெளியே காத்துக் கொண்டிருந்தார். செந்தில்- கதிர் இருவரும் பாண்டியனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் பாண்டியனை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அவரின் நிலையை பார்த்தவுடன் மொத்த குடும்பமும் கதறி அழுதது. கோமதி, நான் தான் ஒழுங்காக அரசியை பார்த்துக் கொள்ளவில்லை. என் மீது தான் தவறு. என்னை மன்னித்து விடுங்கள் என்று தன் கணவரிடம் ரொம்ப எமோஷனலாக பேசி அழுதார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே தங்களுடைய வேலைகளை செய்தார்கள். பாண்டியனின் மகன்கள, தன்னுடைய அப்பாவின் நிலைமையை நினைத்து வருத்தப்பட்டார்கள்.

நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் ராஜியின் அப்பா வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அரசி-குமார் காதலை பற்றி பேசும்போது அப்பத்தா, கோமதி நிலைமை நினைக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது என்று புலம்பி இருந்தார். உடனே முத்துவேல், அரசி பக்கம் இருக்கும் நியாயத்தை மட்டும் பேசாதே. நம் மகனின் நிலைமையும் யோசித்துப் பார். குமார் மீது எந்த தவறும் இல்லை என்று சப்போர்ட்டாக பேசினார். அதற்குப்பின் தங்கமயில் பாண்டியனுக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடுக்க, அரசி அப்பா என்று கூப்பிடும் போது பயங்கரமாக கோமதி கோபப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அரசி, நான் செய்தது மிகப்பெரிய தவறு. எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். என்னிடம் பேசுங்கள் அப்பா என்று பாண்டியன் காலை பிடித்து கதறி அழுகிறார். பின் தன்னுடைய அண்ணன்கள் ஒவ்வொரு இடமும் மன்னிப்பு கேட்டு கதறுகிறார் அரசி. ஆனால், அவர்கள் யாருமே மன்னிக்கவில்லை. கோமதி, அரிசியை திட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் தங்கமயில், உன் அப்பா- அம்மா மீது சத்தியம் செய்து செய். யாரிடமும் பேச மாட்டேன் என்று சொல் என்கிறார்.

சீரியல் ட்ராக்:
அரசி, பாண்டியன் மீது சத்தியம் செய்து நான் அவருடன் பேச மாட்டேன். பழகமாட்டேன் என்கிறார். அதற்கு பின் கோமதி மீதும் சத்தியம் செய்கிறார். அதற்குப் பிறகுதான் பாண்டியன் அரசிடம் பேசுகிறார். வீட்டில் எல்லோருமே கொஞ்சம் ஓரளவுக்கு சமாதானம் ஆகிறார்கள். சுகன்யாவிற்கு மட்டும் வயிறு எரிகிறது. கடைசியில் பாண்டியன், நான் ஒரு இடத்திற்கு போய் விட்டு வருகிறேன். யாரும் என்னுடன் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






