விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கதிர், நண்பனின் திருமணத்திற்கு சென்னை போவதாக வீட்டில் சொல்ல, பாண்டியன் சண்டை போட்டார். உண்மையில் கதிர், ராஜியின் தேர்வுக்காக தான் சென்னை போகிறார். இதனால் பாண்டியன்-கதிர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தான் அதிகமானது. இன்னொரு பக்கம் மீனா வேலை செய்யும் இடத்திற்கு வந்த ராஜியின் சித்தப்பா, தனக்கு தெரிந்த அதிகாரியின் மூலம் பிரச்சனையை முடிக்க பார்த்தார். மீனா, எதுவாக இருந்தாலும் சட்டப்படிதான் செய்வேன். என்னால் யாருக்கும் சலுகை செய்ய முடியாது என்று அதிகாரியை திட்டி விட்டார்.

இதனால் ராஜியின் சித்தப்பா மீனாவின் மீது கோபப்பட்டார். பின் கதிர் - ராஜி இருவருமே பாண்டியனிடம் சொல்லாமல் சென்னைக்கு கிளம்பி விட்டார்கள். இதனால் வீட்டில் என்ன கலவரம் வருமோ? என்ற பயத்தில் கோமதி இருந்தார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த பாண்டியன், கதிர்-ராஜி வீட்டில் இல்லாததை அறிந்து கோபப்பட்டார். அப்போது மீனா, ராஜி சித்தப்பா ஆஃபீஸ் வந்து மிரட்டியதை பாண்டியனிடம் சொன்னார். உடனே செந்தில் கோபப்பட்டு அவரிடம் சண்டைக்கு போக பார்த்தார். ஆனால், பாண்டியன் தடுத்து நிறுத்தி இதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவரும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ராஜி, பொய் சொல்லி போவதை நினைத்து வருத்தப்பட்டார். ஆனால், கதிர் அவருக்கு ஆறுதல் சொல்லி சப்போர்ட்டாக பேசி இருந்தார். நேற்று எபிசோட்டில் கதிர்-ராஜி இருவரும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்கள். போகும் வழியில் ராஜிக்கு எந்த ஒரு வருத்தமும் வராத அளவிற்கு பார்த்து பார்த்து கதிர் செய்தார். இன்னொரு பக்கம் சக்தி, அவருடைய அப்பாவும் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது வந்த செந்தில், என் மனைவி இடம் தேவையில்லாமல் மிரட்டுவது, வம்பு இழுப்பது என்ற வேலையை வைத்துக் கொள்ளாதே என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:
கோபத்தில் சக்தி அப்பா கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். உடனே சக்தி, அவர்களிடம் எதற்கு வம்புக்கு செல்கிறீர்கள் அப்பா, அமைதியாக இருங்கள். அவர்கள் வேலையை செய்யட்டும் என்று பாண்டியன் குடும்பத்துக்கு ஆதரவாக பேசி இருந்தார். இதைக் கேட்டு செந்தில் அமைதியாக போனார். பின் அரசியை திருமணம் செய்ய வேண்டும் என்றால் இப்படித்தான் பிராக்கெட் போட வேண்டும் என்று சக்தி சொன்னவுடன் அவர் அப்பாவும் ஏற்றுக்கொண்டார்.

இன்றைய எபிசோட்:
இன்னொரு பக்கம் கதிர்-ராஜி இருவரும் சென்னை சென்று விட்டார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில், ராஜியின் சித்தப்பா வழியில் சண்டை வாங்கியதை பற்றி வீட்டில் சொல்கிறார். இதை கேட்டு கோமதி- மீனா இருவரும் வரும் ஷாக் ஆகிறார்கள். ஆனால், பாண்டியன் வீட்டில் இல்லை.
அப்போது செந்தில், எங்கள் இருவருக்கும் பெரிய சண்டை நடக்க வந்தது. ஆனால், அவருடைய மகன் சக்தி நமக்கு சப்போர்ட் செய்து அவருடைய அப்பாவை இழுத்து சென்று விட்டான்.

சீரியல் ட்ராக்:
அது என்னவென்றே புரியவில்லை என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் அரசி, சக்தி தன்னிடம் பேசியதை நினைத்துப் பார்க்கிறார். அந்த சமயம் பார்த்து சக்தி வருகிறார். அவரை பார்த்தவுடன் அரசி உள்ளுக்குள் சிரிக்கிறார். ஒருவரைக் ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ராஜி தேர்வு எழுதுகிறார். அதன் பின் பாண்டியன், சரவணன் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது பாண்டியன், டூப்ளிகேட் சர்டிபிகேட்டை பற்றி கேட்கிறார். என்ன சொல்வது என்று புரியாமல் பயத்தில் தயங்குகிறார் தங்கமயில். இத்துடன் சீரியல் முடிகிறது.






