விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் மீனா, தங்கமயில், ராஜி மூவருமே தன்னுடைய மாமனாரின் பிறந்த நாளுக்காக என்ன வாங்கலாம் என்று யோசனை செய்து மூவரும் ரெடி ஆகி வெளியே கிளம்ப பார்த்தார்கள். உடனே பாண்டியன், எங்கே? என்று கேட்டதற்கு மூவருமே தங்கமயில் வீட்டுக்கு போகிறோம் என்று சொன்னார்கள். உடனே பாண்டியன் செலவுக்கு 200 ரூபாய் கொடுத்து அனுப்பி இருந்தார். இந்த வாரம் மீனா, தங்கமயில், ராஜி மூவருமே தன்னுடைய மாமனாருக்கு துணி எடுக்க ஜவுளிக்கடைக்கு போனார்கள்.
அங்கு துணி எல்லாம் எடுத்து விட்டு பில் கொடுக்க மீனா வந்தார். உடனே ராஜி தடுத்து கொடுக்கப் போனார். ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று தங்கமயில் வருத்தப்பட்டார். இதற்கிடையில் மீனா, செந்திலுக்கு நிறைய முறை போன் செய்து கொண்டே இருந்தார். ஆனால், செந்தில் கண்டுகொள்ளவிலை. உடனே மீனா, இதுதான் நீங்கள் என்னிடம் பேசுவது கடைசி என்று மெசேஜ் அனுப்பி இருந்தார். இதை பார்த்து செந்தில் அதிர்ச்சி ஆனார். இன்னொரு பக்கம் மூவரும் நல்ல ஹோட்டலில் சாப்பிட்டு, ஷாப்பிங் முடித்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது மீனா, எனக்கு வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு கிளம்பி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இந்த வாரம் செந்தில், மீனாவை பற்றி வீட்டில் விசாரித்து விட்டு, ராஜிக்கு போன் செய்தார். ஆனால், அவர் தெரியாது என்று சொல்லி விட்டார். இதை கதிர் இடம் சொல்லி செந்தில் ரொம்பவே பயந்தார். நேற்று எபிசோடில் கதிர், செந்தில் இருவரும் தேடி அலைந்து கொண்டு இருந்தார்கள். அப்போது மீனாவும் மனம் மாறி போனை ஆன் செய்தவுடன் செந்தில் கால் செய்தார். பிறகு தான் இருக்கும் இடத்தை மீனா சொன்னவுடன் இருவருமே போனார்கள். அங்கு செந்தில்-மீனா தனியாக மனதை விட்டு பேச ஒரு வழியாக அவர்களுக்கு இடையில் நடந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது.
சீரியல் கதை:
நேற்று எபிசோட்டில் கதிர், வீட்டிற்கு வரமாட்டேன். சவாரி போகணும் என்று சொன்னவுடன் எல்லோருமே வருத்தப்படுகிறார்கள். ராஜி, கதிரை நினைத்து வருத்தப்படுகிறார். ரூமில் சரவணனும் தங்க மயிலும் இதைப் பற்றி பேசும்போது, நீங்கள் உங்களுக்கும் கொஞ்சம் பணத்தை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று தங்கமயில் அறிவுரை சொன்னார். கதிரை நினைத்து கோமதி ரொம்ப வருத்தப்பட்டு புலம்பி கொண்டிருக்க, அந்த சமயம் பார்த்து ராஜி வந்தவுடன் கோமதி திட்டிக் கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்:
உடனே கோபப்பட்ட மீனா, ராஜி தான் கதிரை கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்டாளா ? என்று கேட்டவுடன் கோமதி, ராஜி இருவருமே ஷாக் ஆகிறார்கள். இவர்கள் சொன்னதை அரசி சரியாக கேட்கவில்லை. இந்நிலையில் இன்றைய எபிசோடில் மீனா சொன்னதை அரசி ஒழுங்காக கேட்காததால் அப்படியே டிராக்கை வேற மாதிரி கோமதி பேசி இருந்தார். கடைசியில் ராஜுவால்தான் எல்லாம் என்பது போல் கோமதி பேச, உடனே ராஜி வருத்தப்பட்டு உள்ளே சென்றுவிட்டார். பிறகு மீனா, ராஜிவிற்கு ஆதரவாக கோமதியிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால், கோமதி ஏற்றுக்கொள்ளவில்லை.
இன்றைய எபிசோட்:
இன்னொரு பக்கம் கதிர் இரவு முழுவதும் வண்டி ஓட்டிக் கொண்டிருக்க, ராஜீவும் தூங்காமல் வீட்டிலேயே நடந்தது நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். மறுநாள் காலையில் கதிர் வீட்டிற்கு வந்தவுடன் தன் அம்மாவை பார்த்து பேச, கோமதி வேதனையில் அழுகிறார். அதற்கு கதிரும் ஆறுதல் சொல்கிறார். அதற்கு பின்னர் ரூமில் கதிர், ராஜிவிடம் பணத்தை கொடுக்க, எதற்கு நீங்கள் வேலைக்கு போகிறீர்கள்? உங்களால் என்னை தான் அத்தை திட்டுகிறார். நான் உங்களிடம் பணம் கேட்டேனா? என்று இருவருக்கும் மத்தியில் சண்டை நடக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.