விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் அப்பத்தாவுக்கு நெஞ்சு வலி வந்ததால் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணார்கள். இதை அறிந்த ராஜி- கோமதி இருவருமே வேதனைப்பட்டு அழுதார்கள். ஆனால், உண்மையில் பாட்டிக்கு ஒன்றுமே ஆகவில்லை. மாமியாரின் டிராமாவிற்கு மருமகள்களும் ஒத்துக் கொண்டு நடிக்கிறார்கள். பின் பழனி, தன் அம்மா நன்றாக இருக்கும் விஷயத்தை சொன்னவுடன் கோமதி ஆறுதல் அடைந்தார். பின் கோமதி தன்னுடைய அம்மாவிற்காக சமைத்து பழனியிடம் கொடுக்கும்போது பாண்டியன் வாங்கி பார்த்து விட்டார்.

வேறு வழியில்லாமல் கோமதி உண்மையை சொல்ல, பாண்டியன் எதுவும் சொல்லாமல் கொடுத்து விடு என்றார். அப்பத்தாவும் அதை வாங்கி சாப்பிட்டு சந்தோஷத்தில் தன் மகளை புகழ்ந்து தள்ளி இருந்தார். அதை வீடியோவாக எடுத்து கோமதி இடம் பழனி காண்பித்தார். அதை பார்த்து கோமதி ரொம்ப சந்தோஷப்பட்டு அழுதார். பின் தன் அம்மாவை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று சொல்ல, மகன்கள் எல்லோரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள். பின் ராஜி வீட்டில் இருந்து யாருமே ஹாஸ்பிடலுக்கு வரக்கூடாது. அதற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று பழனி இடம் வேலையை ஒப்படைத்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அவரும் வீட்டிற்கு சென்று தன் அண்ணன்களிடம் பேச்சிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். அப்போது சக்திக்கு பெண் பார்ப்பதாக சொல்லி தன் அண்ணன்களை எங்கும் போக விடாமல் பழனி தடுத்து நிறுத்தி இருந்தார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலுக்கு கோமதி- ராஜி இருவருமே போனார்கள். தன் அம்மாவை பார்த்து கோமதி ஆனந்தத்தில் அழுது புலம்பி இருந்தார். ஆனால், ராஜி பேசியும் அவருடைய அம்மா முகம் கொடுத்து கூட பேசவில்லை. கோமதி, தன்னுடைய அம்மாவிடம் மனம் விட்டு பேசி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த பாண்டியன், எங்கே கோமதி என்று கேட்க? தங்கமயில்- மீனா ஏதேதோ காரணத்தை சொன்னார்கள்.

நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் பெண் வீட்டார் வருவார்கள் என்று பழனியின் அண்ணன்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். நேற்று எபிசோட்டில் ராஜு, எவ்வளவோ கெஞ்சி கதறி அழுதும் அவருடைய அம்மா ஏற்றுக்கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் பழனியின் அண்ணன்கள் பெண் வீட்டார் வரவில்லை என்று ரொம்பவே கோபப்பட்டு இருந்தார்கள். கடைசியில் அவர்கள் ஹாஸ்பிடலுக்கு கிளம்ப பார்த்தார்கள். உடனே பழனி, கதிரிடம் இந்த உண்மையை சொல்ல, கதிரும் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது பாண்டியனிடம், தன் அம்மாவிற்காக கோவிலுக்கு போனதாக கோமதி சொல்ல, அவர் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டார்.

சீரியல் ட்ராக்:
பின் கோமதி, தன் மூன்று மகன்களையும் பற்றி புகழ்ந்து பேசி இருந்தார். இந்த நிலையில் இன்று எபிசோட்டில் கோமதியின் அண்ணன்கள் ஹாஸ்பிடலுக்கு சென்று பார்க்கிறார்கள். அங்கு சாப்பாடு கேரியரை பார்த்து யார் வந்தார்கள்? என்று கேட்டதற்கு, என்னுடைய அண்ணி வந்தார் என்று வடிவு சமாளிக்கிறார். ஆனால், அதில் கோமதி என்று பெயரை பார்த்த அவருடைய அண்ணன்கள் பயங்கரமாக கத்தி பேசுகிறார்கள்.
இன்றைய எபிசோட்:
உடனே அவர்கள், கோமதி தான் சாப்பாட்டை எடுத்து வந்தார் என்று சொல்ல இருவருமே மாறி மாறி கத்த, இதனால் நெஞ்சு வலி வந்தது போல மீண்டும் அப்பத்தா நடித்தார். உடனே டாக்டர் எல்லோரையும் திட்டி அனுப்பி விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் கோமதி, தன் அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் இருக்கிறார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த கோமதியின் அண்ணன்கள், பாண்டியன் வீட்டு வாசலில் கத்தி, ரொம்ப கேவலமாக பேசுகிறார்கள். அந்த சமயம் வந்த பாண்டியன், அவரும் திருப்பி திட்டுகிறார். இதையெல்லாம் உள்ளே இருந்து கேட்ட கோமதி அதிர்ச்சியில் மயங்கி விடுகிறார். பின் என்ன நடக்குமோ? என்ற பயத்தில் இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






