விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சக்திவேல், உன்னை வேலை விட்டே தூக்குகிறேன். என்னுடைய பண பலத்தால் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று யார் யாருக்கோ போன் செய்தார். ஆனால், யாருமே ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. கவர்மெண்ட் சொல்வதை கேளுங்கள் என்று சில பேர் அறிவுரையும் சொன்னார்கள். பின் அங்கு வந்த போலீஸ், மீனாவிடம் பேசி பார்க்கிறார்கள். ஆனால், மீனா ஒத்துக் கொள்ளவில்லை. கடைசியில் சக்திவேலிடம் அவர்கள், மீனா மேம் சொல்வதைக் கேளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். சக்திவேல், எதுவும் பேச முடியாமல் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தார். கடைசியில் கடையை இடித்து தரை மட்டும் ஆக்கி இருந்தார்கள்.

இன்னொரு பக்கம் சரவணன், தன்னுடைய நண்பருடன் சேர்ந்து தங்கமயில் வேலை செய்யும் ஹோட்டலுக்கு சாப்பிட போனார். சரவணன் இருப்பது தெரியாமல் தங்கமயில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து பரிமாறி இருந்தார். பின் சரவணன், தங்கமயிலை பார்த்தவுடன் ஷாக் ஆனார். தங்கமயில் அதிர்ச்சியில் என்ன சொல்வது என்று தெரியாமல் பயப்பட்டார். அதற்கு பின் சரவணன், இது தான் நீ வேலைக்கு செல்லும் இடமா? என்று கேட்டார். உடனே தங்கமயில், என்னுடைய தோழி சொன்ன இடத்தில் ஆட்கள் எடுக்கவில்லை. அதனால் தான் இங்கு வேலைக்கு வந்தேன் என்று ஏதேதோ பொய் சொல்லி சமாளித்தார். இருந்தாலுமே சரவணன் ஏற்றுக் கொள்ளவில்லை, பயங்கரமாக கோபப்பட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் சரவணன், நீ இப்படி பொய் சொல்லிவிட்டு வேலைக்கு போவது சரியில்லை. எங்களை எல்லாம் ஏமாற்றுவாய் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை என்று பயங்கரமாக கோபப்பட்டார். தங்கமயில் என்ன சொல்வதென்றே புரியாமல் அழுது கொண்டே இருந்தார். பின் வீட்டில் சொல்ல வேண்டாம் என்று தங்கமயில் கெஞ்சியுமே சரவணன் கேட்கவில்லை அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு மீனா வந்தார். அப்போது பாண்டியன்- கோமதி இருவருமே சக்திவேல் கடை விஷயமாக பேசி இருந்தார்கள். அப்போது மீனா, சட்டப்படி என்ன செய்யணுமோ அதை தான் செய்தேன் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:
அதற்குப்பின் மாப்பிள்ளை போன் செய்து அரசி இடம் பேசி இருந்தார். ஆனால், அரசி சரியாக பேசாமல் போனை வைத்து விட்டார். பின் மீனாவிடம் அரசியை பேச சொல்லி மாப்பிள்ளை கேட்டார். மீனாவும் அரசிக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் வந்த தங்கமயில், உண்மை தெரிந்து விட்டதோ? என்று ரொம்பவே பார்த்து இருந்தார். ஆனால், சரவணன் வீட்டில் எதையுமே சொல்லவில்லை. கோமதி, ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறாய் என்று திட்டி இருந்தார். சரவணன் எதுவும் சொல்லாமல் தங்கமயிலை முறைத்துக் கொண்டே இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன், கடையில் என்ன நடந்தது என்று சொல்லு என்கிறார். தங்க மயில், ரொம்ப பயப்படுகிறார். கடைசியில் சரவணன், தங்கமயில் லீவு கேட்டு விட்டார். அவளையும் கோயிலுக்கு அழைக்க செல்லுங்கள் என்று சொல்கிறார். அப்போது தான் தங்கமயில் பெருமூச்சு விட்டார்.
எல்லோருமே கோயிலுக்கு கிளம்புவதை பற்றி பேசி இருந்தார்கள். அதற்குப்பின் தங்கமயில் வெளியே என்ன நடக்குமோ? என்ற பயத்தில் இருக்கிறார். அப்போது வந்த மீனா, உங்களுக்கும் மாமாவிற்கும் பிரச்சனையா? ஏன் ரெண்டு பேருமே பதட்டமாக இருக்கிறீர்கள் என்று சொன்னவுடன் கேட்கிறார். ஆனால், தங்கமயில் ஏதேதோ சொல்லிவிட்டு செல்கிறார். இருந்தாலும் மீனாவிற்கு சந்தேகம் வருகிறது.

சீரியல் ட்ராக்:
ரூமிற்கு சென்ற தங்கமயில், என்னை மன்னித்து விடுங்கள் என்று பேசுகிறார். ஆனால், சரவணன் கோபத்தில் எதுவும் பேசாமல் தூங்கி விடுகிறார். அதற்குப்பின் மறுநாள் காலையில் எல்லோருமே கோயிலுக்கு தயாராகி கிளம்புகிறார்கள். வீட்டில் சுகன்யா மட்டும்தான் தனியாக இருக்கிறார். பழனிக்கு ஃபோன் செய்த சுகன்யா, இந்த பேய் பங்களாவில் என்னால் எப்படி தனியாக இருக்க முடியும். என்னை ஏன் இப்படி கொடுமை படுத்துகிறீர்கள் என்று வழக்கம் போல் பழனியை திட்டிக் கொண்டிருக்கிறார். அவர் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். அதற்குப் பின் கடைக்கு வந்த சரவணன், தன்னுடைய தந்தையிடம் தங்க மயிலை பற்றி உண்மையை சொல்லிவிடலாம் என்று நினைக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






