விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் பண விஷயத்தில் தவறு செய்ததை மனதில் வைத்துக் கொண்டு கோமதி அவரிடம் வம்பு இழுத்து பேசுகிறார். பின் வீட்டில் பாண்டியன், அனைவரையும் அழைத்து குடும்ப சூழ்நிலையை எடுத்துச் சொல்கிறார். ஆனால், அது எல்லோருக்குமே போர் அடிக்கிறது. இவர்கள் எல்லாருமே சேர்ந்து பேசும்போது தங்க மயிலை யாரும் கூப்பிடவே இல்லை. இதை எல்லாம் தங்கமயில் ரூமில் இருந்து பார்த்து ரொம்ப வருத்தப்பட்டார். அதற்குப் பின் எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். தங்க மயிலை யாருமே கூப்பிடவில்லை.
தன்னை யாராவது கூப்பிடுவார்கள் என்று அவரும் எதிர்பார்த்து ஏமாந்தார். அதற்குப்பின், மீனா- ராஜி இதுவருமே தங்கமயிலை சாப்பிட கூப்பிட்டார்கள். ஆனால், அவர் வரவே இல்லை. எனக்கு சாப்பிட விருப்பமில்லை என்று சொல்லி அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் தங்கமயில் சாப்பிடவில்லை என்று சரவணன் இடம் மீனா சாப்பாடு கொடுத்து விடுகிறார். முதலில் அதை மறுத்த சரவணன் பின் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு போனார். ஆனால், அவர் பெரிதாக வருத்தப்படாமல் சாப்பாட்டை மேஜை மீது வைத்து சாப்பிடு என்று சொல்லிவிட்டு சென்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இதெல்லாம் பார்த்து தங்கமயில், ரொம்பவே கவலைப்பட்டார். இன்னொரு பக்கம் சித்தப்பு, தன்னுடைய மாமா செய்வது ரொம்ப தவறு என்று கோமதி இடம் அறிவுரை சொன்னார். இதனால் கோமதியும் பாண்டியனிடம் கதிரை அடித்ததை பற்றி பேசி அறிவுரை சொன்னார். இந்நிலையில் நேற்று எபிசோடில், சரவணன் தன்னிடம் எதுவும் பேசவில்லை என்ற வருத்தத்தில் சாப்பிடாமல் தங்கமயில் இருந்தார். அப்போது உள்ளே வந்த சரவணன், சாப்பாடு வீணாகப் போகிறது என்று கிச்சனில் கொண்டு போய் சாப்பிடுகிறார்.
நேற்றைய எபிசோட்:
இதைப் பார்த்து தங்கமயிலுக்கு இன்னும் கோபம் அதிகமாகிறது. மறுநாள் காலையில் தங்கமயில், கோமதியிடம் பேச வருகிறார். ஆனால், அவர் முகம் கொடுத்து கூட பேசவில்லை. பின் தங்கமயில் இரவு சரவணன் செய்த வேலையை மீனாவிற்கு சொல்ல, மீனா சரவணன் மீது கோபப்படுகிறார். இதை சரவணன் இடம் மீனா கேட்க, சாப்பாடு வீணாக்க வேண்டாம் என்று சாப்பிட்டு விட்டேன் என்று மொக்கையாக சொல்லிவிட்டு செல்கிறார். பின் கிச்சனில் சரவணன் செய்த வேலையை மீனா சொல்ல, என் மகன் சரியாகத்தான் செய்திருக்கிறான் என்று கோமதி பேசுகிறார். இதையெல்லாம் கேட்டு தங்கமயில் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.
இன்றைய எபிசொட்:
இன்றைய எபிசோடில் கிச்சனில் மாமியாருக்கு உதவி செய்வதற்காக தங்கமயில் வருகிறார். ஆனால், வழக்கம் போல் கோமதி அவரை நக்கலாக பேசி அனுப்பி விடுகிறார். இன்னொரு பக்கம் ராஜியின் வீட்டில் சண்டை நடக்கிறது. சக்திக்கு திருமணமாகவில்லை என்று அவரின் அப்பா சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் வீட்டில் கலவரமே வெடிக்கிறது. ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை சொல்லி கொண்டு இருக்கிறார்கள். கடைசியில் ராஜியின் அப்பா, சக்திக்கு திருமணம் நான் செய்து வைக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறார்.
சீரியல் ட்ராக் :
இருந்தாலுமே, அவருடைய தம்பி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பெண்கள் எல்லோருமே கோபப்பட்டு பேசுகிறார்கள். ஒரு கட்டத்தில் ராஜியின் அப்பா அவருடைய மனைவியை அடிக்க போனதால் அப்பத்தாவுக்கு நெஞ்சு வலி வந்து விழுந்து விடுகிறார். உடனே அவரை மொத்த குடும்பமும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறது. இன்னொரு பக்கம் ராஜி, வீட்டில் என்ன பிரச்சனை என்று தெரியாமல் பயத்தில் கோமதி இடம் சொல்லி புலம்புகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.