விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் மீனா, அரசியிடம் சுகன்யாவை நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டார். இதனால் சுகன்யாவிற்கு மீனா மீது பயங்கர கோபம் வந்தது. அதற்குப்பின் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்து விட்டார்கள். மாப்பிள்ளைக்கு பாண்டியன் வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்தார்கள். அதற்குப்பின் மாப்பிள்ளை பற்றி அரசியின் அண்ணன்மார்கள் விசாரித்தார்கள். இன்னொரு பக்கம் அரசி இடம் கோமதி, தயவுசெய்து எந்த பிரச்சினையும் செய்யாதே. இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல் என்று ரொம்ப எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார். அதற்கு பின் அரசியை அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

அரசியை பார்த்தவுடன் மாப்பிள்ளைக்கு பிடித்து விட்டது. அவர் அரசியிடம் பேசி இருந்தார். ஆனால், அரசி எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். பின் தனியாக அழைத்து சென்று பேச சொல்கிறார்கள். பின் அரசியை மீனா அனுப்பி வைக்கிறார். மாப்பிள்ளை எவ்வளவு பேசியுமே வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாகவே நிற்கிறார் அரசி. பின் எங்களுக்கு இந்த கல்யாணத்திற்கு சம்மதம் என்று மாப்பிள்ளை வீட்டில் சொல்கிறார்கள். உடனே மாப்பிள்ளை அம்மா, நிச்சயதார்த்தம் செய்துவிடலாம் என்று சொன்னவுடன் பாண்டியனின் மொத்த குடும்பமும் ஷாக் ஆகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
உடனே மாப்பிளை அம்மா, உங்களுக்கு நிச்சயதார்த்தம் தெரியாதா? என்று கேட்க, எங்களுக்கும் சம்மதம் என்றார் பாண்டியன். அதற்குப்பின் ரெண்டே மாதத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நிச்சயதார்த்த ஓலையை படித்தார்கள். எதுவும் சொல்லாமல் அரசி அமைதியாக இருந்தார். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு அரசியும் மூன்று அண்ணிமார்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது மீனா, கல்யாணம் முக்கியம்தான். ஆனால், உனக்கு படிப்பு முக்கியம். எப்படியாவது மாப்பிள்ளை இடம் நாங்கள் பேசி உன்னுடைய படிப்பிற்கு ஏற்பாடு செய்கிறோம். நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே. நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் சொன்னார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோடில் ராஜி- மீனா இருவருமே எப்படியாவது கோயிலில் மாப்பிள்ளை இடம் அரசி படிப்புக்கு சம்மதம் வாங்கி விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கோமதி வந்து விட்டார். பின் மூவருமே சேர்ந்து கோவிலுக்கு சென்றார்கள். மாப்பிள்ளையும் தன்னுடைய அம்மாவுடன் கோயிலுக்கு வந்து இருந்தார். என்ன நடக்குமோ என்று கோமதி மீனா புலம்பி கொண்டிருந்தார். ஒரு பக்கம் கோமதியை ராஜி சமாளித்தார். இன்னொரு பக்கம் மீனா, மாப்பிள்ளையும் அவர் அம்மாவையும் சமாளித்தார். இருவரையும் சந்திக்க விடாமலும், அரசி படிப்பு விஷயம் எப்படியாவது மாப்பிள்ளை இடம் சொல்ல வேண்டும் என்றும் மீனா நினைத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோவிலில் மாப்பிள்ளை அம்மாவும், கோமதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். உடனே மாப்பிள்ளை அம்மா, மீனா அவர்கள் தான் கிரியேட்டிவிட்டியாக கல்யாணம் பண்ண வர சொன்னார் என்று சொன்னவுடன் கோமதியால் எதுவுமே பேச முடியவில்லை அமைதியாக இருக்கிறார். மீனா-ராஜி இருவருமே மாட்டிக்கொண்டோம் என்று பயப்படுகிறார்கள். அதற்கு பின் மாப்பிள்ளையை தனியாக அழைத்து சென்ற மீனா, நாங்கள் அரசி படிப்பு விஷயமாக பேச தான் அழைத்தோம். திருமணத்திற்கு பிறகும் அவள் படிக்க வேண்டும். உங்களுக்கு சம்மதமா? என்று கேட்க, மாப்பிள்ளையும் ஒத்துக்கொள்கிறார். வந்த வேலை நல்லபடியாக முடிந்தது என்று நினைத்து மீனா சந்தோஷப்படுகிறார்

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் கோமதி, எதற்காக மாப்பிள்ளை வீட்டில் வர வைத்தீர்கள்? கல்யாணத்தை நிறுத்த பார்க்கிறீர்களா? என்று ராஜி- மீனா இருவரிடமும் சண்டை போடுகிறார். அப்போது மீனா, அரசி படிப்பு விஷயமாக பேசத்தான் வர சொன்னோம். மாப்பிள்ளையும் ஒத்துக்கொண்டார் என்று சொன்னவுடன் கோமதி அமைதியாகி விடுகிறார். அதற்கு பின் கோயிலில் நடந்ததை பற்றி எல்லாம் பாண்டியன் இடம் கோமதி சொல்கிறார். அப்போது வீட்டிற்கு மாப்பிள்ளையும் அவருடைய அம்மாவும் வருகிறார்கள். அப்போது மாப்பிள்ளையின் அம்மா, கல்யாண விஷயமாக பேச தான் வந்தேன். நகை போடுவதைப் பற்றி பேச வந்தேன் என்று சொன்னவுடன் பாண்டியன் ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






