விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் மீனாவின் அப்பா, அரசாங்க வேலையை பற்றியும், செந்தில் செய்யும் மளிகை வேலையை பற்றியும் வித்தியாசப்படுத்தி பேசி இருந்தார். எதுவும் சொல்ல முடியாமல் செந்தில் அமைதியாக இருந்தார். அந்த சமயம் பார்த்து போன் செய்த பாண்டியன், பணத்தை எடுத்து வர சொல்லி கத்தினார். அதனால் செந்தில் கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் அரசியை பார்ப்பதற்காக மாப்பிள்ளை அந்த இடத்திற்கு வந்து விட்டார். பின் அரசி- மாப்பிள்ளை இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அரசி, குமாரை காதலித்த விஷயத்தை சொன்னவுடன் அவரால் எதுவும் பேச முடியவில்லை. அங்கு இருந்து கிளம்பி விட்டார். பின் மீனா, என்ன நடந்தது? என்று கேட்க, குமார் விஷயத்தை அரசி சொன்னார். இதனால் அதிர்ச்சியில் மீனா அமைதியாகி விட்டார். இன்னொரு பக்கம் பேங்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வந்த செந்தில் தன்னுடைய மாமனாரை சந்தித்தார். பின் அரசாங்க வேலைக்கு ஆள் ஏற்பாடு செய்யும் ஒரு நபரை அறிமுகம் செய்து வைத்தார். செந்தில் தங்கைக்காக எடுத்து வந்த பணத்தை மீனா அப்பாவிடம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் செந்தில், பாண்டியன் சொன்னதை நினைத்து பார்த்து பணத்தை மீனா அப்பாவிடம் கொடுக்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். பாண்டியன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது சரவணன், தங்கமயில் ஊருக்கு கிளம்பி வரும் விஷயத்தை சொன்னார். உடனே பாண்டியன், எதற்கு ஏன்? என்று கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து தங்கமயில் வந்து விட்டார். அப்போது அவர், வேலையில் லீவு கிடைக்கவில்லை. அதனால் வந்து விட்டேன் என்று சொன்னார். உடனே பாண்டியன், அந்த வேலையே வேண்டாம். லீவு எதுவுமே கிடைக்கவில்லை. ரொம்ப லேட்டாக வருகிறாய் என்று சொல்லிவிட்டார்.

நேற்று எபிசோட்:
அதற்கு பின் சரவணன், நீ படித்த கல்லூரி, ஸ்கூல் என எல்லா டீடைலும் எனக்கு கொடு. நான் உனக்கு சர்டிபிகேட் ரெடி பண்ணி தருகிறேன் என்று சொன்னவுடன் தங்கமயில் ரொம்பவே பதறி இருந்தார். இன்னொரு பக்கம் நடன போட்டியில் கலந்து கொள்ள ராஜி பெயர் கொடுத்தார். பின் போட்டியில் ஒவ்வொருவருமே சிறப்பாக நடனமாடி இருந்தார்கள். அப்போது ராஜி மேடைக்கு வந்த உடனே அவரைப் பற்றி விசாரித்தார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் வெளியூர் ஆட்களுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்றெல்லாம் கத்தி இருந்தார்கள். ராஜிக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் அமைதியாக நின்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி நடனம் ஆடக்கூடாது என்று அந்த ஊர் இளைஞர்கள் பயங்கரமாக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கோமதியும் ராஜி நடனம் ஆட வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால், ராஜி எப்படியாவது கதிருக்கு பைக் வாங்க வேண்டும் என்று எல்லா எதிர்ப்புகளையும் மீறி டான்ஸ் ஆடுகிறார். இதை பார்த்து மொத்த ஊர் மக்களுமே அசந்து போய் விடுகிறார்கள். பின் கோமதி, இதோடு போதும் மீண்டும் நடனமெல்லாம் ஆட தேவையில்லை என்று திட்டுகிறார். இன்னொரு பக்கம் தங்களுடைய கட்டிடத்தை மீனா இடித்தது பற்றி சக்திவேல் தன்னுடைய அண்ணனிடம் சொல்லி புலம்புகிறார்.

சீரியல் ட்ராக்:
உடனே முத்துவேல், மீனாவை வேலையை விட்டு தூக்கு என்று தன்னுடைய தம்பிக்கு ஐடியா கொடுக்கிறார்.
பின் அரசிக்கு மாப்பிள்ளை மெசேஜ் போட்டிருக்கிறார். அதை அரசி தன்னுடைய அண்ணிகளிடம் காண்பிக்கிறார். அதில் மாப்பிள்ளை, எனக்கும் சின்ன வயதில் ஒரு கிரஷ் இருந்தது. இது ஒரு பெரிய விஷயமே இல்லை. நீ எதைப் பற்றியும் யோசிக்காதே என்று அவருக்கு சப்போர்ட்டாக பேசுகிறார். அதற்குப்பின் ராஜி- மீனா இருவருமே நடன போட்டி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜி இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகி இருக்கும் விஷயத்தை தெரிந்தவுடன் ரொம்ப சந்தோசப்படுகிறார். ஆனால், கோமதி நடனப் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று கோபப்படுகிறார். என்ன செய்வது என்று புரியாமல் ராஜி -மீனா இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






