விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன் கடையில் வியாபாரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த மாப்பிள்ளை, அம்மா தேவையில்லாமல் உங்களிடம் நிறைய கேட்டுவிட்டார். எனக்கு அதில் எந்த உடன்பாடும் இல்லை. எனக்கு நான் நல்லா படித்திருக்கிறேன். நன்றாக சம்பாதிக்கிறேன். எதுவாக இருந்தாலும் என் மனைவிக்கு செய்கிறேன். கார் நானே வாங்கி தருகிறேன். அதை நீங்கள் கொடுத்து விடுங்கள் என்று ரொம்ப பெருந்தன்மையாக பேசி இருந்தார். இதைக் கேட்டு பாண்டியனும் அவருடைய அண்ணன்களும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். உடனே பாண்டியன், எங்கள் மகளுக்கு நாங்கள் செய்கிறோம்.

நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொன்னார். இன்னொரு பக்கம் கோமதி, அவருடைய மூன்று மருமகள்கள், மகள் உடன் கோவிலுக்கு செல்லும் ஊரிற்கு சென்று விட்டார்கள். பாண்டியனுக்கு போன் செய்த கோமதி ஊருக்கு வந்த விஷயத்தை சொன்னார். அப்போது பாண்டியன், மாப்பிள்ளை சொன்னதை சொன்னவுடன் கோமதிக்கு ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் ரூமில் மூன்று மருமகள், அரசி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மாப்பிள்ளை அரசிக்கு போன் செய்து பேசி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வர சொல்லி சுகன்யா, பழனிக்கு போன் செய்து கண்டமேனிக்கு கத்தி இருந்தார். பழனியும் என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
சுகன்யா, பழனிக்கு போன் மேல் போன் செய்து கொண்டிருந்தார். டார்ச்சல் தாங்க முடியாமல் பழனி வீட்டுக்கு வந்து விட்டார். அப்போது சுகன்யா, உங்கள் வீட்டிற்கு நான் வடித்துக் கொட்டணுமா? என்னால் வீட்டு வேலை செய்ய முடியாது என்று ரொம்ப மோசமாக பழனியை திட்டி இருந்தார். பின் பழனியிடம் தண்ணிர் எடுக்க சொல்லி குடத்தை கொடுத்தார். பின் காய்கறிகளை காய்கறிகளை கட் பண்ணுவது என்று வீட்டு வேலை எல்லாம் செய்ய சொன்னார். பழனி அழுது கொண்டு எதுவும் பேசாமல் செய்தார். இதையெல்லாம் வீட்டிற்கு வந்த சரவணன் பார்த்து விட்டார். வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டு சுகன்யா மோசமாக பேசிக் கொண்டிருந்தார்.

கடந்த வாரம் எபிசோட்:
சுகன்யாவின் நடவடிக்கையை பார்த்து சரவணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போது வெளிவந்த சுகன்யா, சரவணனை பார்த்து விட்டார். ஒன்னும் தெரியாது போல சுகன்யா நாடகமாடி இருந்தார். பின் மாடியில் பழனி-சரவணன் இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பழனி, கல்யாண நாளில் இருந்து இப்படித்தான் நடந்து கொண்டார். எனக்கு ஒண்ணுமே புரியவில்லை என்று தனக்கு நடந்த சோகமான விஷயத்தை சரவணன் இடம் சொல்லி வேதனைப்பட்டார். இன்னொரு பக்கம் மீனா-ராஜி- தங்கமயில் மூவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒவ்வொரு கணவர்மார்களும் எப்படி எல்லாம் தங்களை மிஸ் செய்கிறார்கள் என்று போன் செய்து பேசி இருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் கோமதியும், அவருடைய மகள், மருமகள் எல்லோருமே கோயிலுக்கு செல்கிறார்கள். அங்கு இருந்த பேனரில் நடனம் போட்டியில் முதல் பரிசு கார், இரண்டாம் பரிசு பைக்
என்று போடப்பட்டிருக்கிறது. அதை பார்த்த உடன் ராஜி, கதிருக்கு எப்படியாவது பைக் வாங்கி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் சுகன்யா, பழனியிடம் வீட்டு வேலையெல்லாம் வாங்கிக் கொண்டிருக்கிறார். பழனி வேதனையில் எதுவுமே பேச முடியாமல் வேலை செய்கிறார். அந்த சமயம் பார்த்து சரவணன் வந்தவுடன் வழக்கம்போல சுகன்யா நாடகம் ஆடுகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் ராஜி, மீனாவிடம் நடன போட்டி பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். இருவருமே கோமதியிடம் நடன போட்டியில் கலந்து கொள்வதற்காக போய் பேசுகிறார்கள். ஆனால் கோபத்தில் கோமதி, நடன போட்டி எல்லாம் தேவையில்லை. மாமாவிற்கு தெரிந்தால் பிரச்சினையாகும். வந்த வேலையை பார்க்கலாம் என்று திட்டி விட்டு செல்கிறார். எதுவும் பேசாமல் மீனா-ராஜி அமைதியாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனுக்கு ஃபோன் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், அவர் எடுக்கவே இல்லை. இதை தன் அம்மாவிடம் சொல்லி புலம்புகிறார் தங்கமயில். அதற்குப்பின் போன் எடுத்த சரவணன் இடம் தங்கமயில் கதறி அழுகிறார். ஆனால், அவர் எதையுமே கண்டு கொள்ளவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.






