-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சீரியல்ஸ்

பாண்டியனுக்காக கோமதி போட்ட கண்டிசன், முத்துவேல் எடுக்கப்போகும் முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
138

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோபம் தாங்க முடியாத செந்தில்- கதிர் இருவரும் சக்தியிடம் சண்டைக்கு போனார்கள். இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி கைகலப்பு ஆனது. அதற்குப்பின் அப்பத்தா சண்டையை தடுத்து நிறுத்தி சக்தியும் குமாரையும் உள்ளே அழைத்து சென்றார். அதற்குப் பின் ராஜியின் அப்பா, இது நீங்கள் திட்டம் போட்டு செய்தது போல் தான் தெரிகிறது. இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இனிமேல் அரசியை காதலிக்கும் விஷயத்தில் தலையிடக்கூடாது. பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விடுங்கள் என்று திட்டி அறிவுரை சொல்லி இருந்தார்.

-விளம்பரம்-

மாரி, இனிமேல் நீ அரசி பக்கம் போகவே கூடாது. உன் அப்பா தலையில் அடித்து சத்தியம் செய் என்றார். குமாரால் எதுவுமே சொல்ல முடியவில்லை. வேறு வழியில்லாமல் சத்தியம் செய்து விட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன் குடும்பமே வேதனை தாங்க முடியாமல் அழுது கொண்டு இருந்தது. பாண்டியனால் அதிர்ச்சியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதனால் அவர் வீட்டை விட்டு வெளியே போனார். உடனே வீட்டில் உள்ள எல்லோருமே தடுத்தும் பாண்டியன் கேட்கவே இல்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் அவர், என் மீது மரியாதை இருந்தால் என்னை தொடர்ந்து யாரும் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றார். எல்லோருமே பாண்டியன், எங்க போவார்? என்ன செய்வார்? என்ற குழப்பத்திலேயே இருந்தார்கள். பாண்டியன் மழையிலேயே நனைந்து கொண்டு தன் மகளை நினைத்து வருத்தத்துடன் அழுது கொண்டே போனார். இன்னொரு பக்கம் அப்பத்தா, கோமதியை நினைத்து வருத்தப்பட்டு புலம்பி இருந்தார். இதையெல்லாம் பார்த்து குமாரின் அப்பாவிற்கு சந்தோஷமாக இருந்தது. இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில், செந்தில்- கதிர் இருவரும் அப்பாவை தேடி போகலாம் என்று கிளம்பி இருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

-விளம்பரம்-

நேற்று எபிசோட்டில் பாண்டியன், எங்கு செல்வது என்று புரியாமல் வேதனையில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் பாண்டியன் மீது மோத வர, பாண்டியன் நிலை தடுமாறி கீழே விழ பார்த்தார். அதற்குப்பின் பிச்சை எடுப்பவர்கள் அருகில் அமர்ந்து அரசியை நினைத்து பாண்டியன் வருத்தப்பட்டு அழுது கொண்டிருந்தார். கதிர்-செந்தில்-பழனி மூவருமே பாண்டியனை தேடி எல்லா இடத்திலுமே அலைந்தார்கள். பின் பிச்சைக்காரர் உடன் பாண்டியன் படுத்திருப்பதை பார்த்து கதிர் ரொம்பவே மனமுடைந்து விட்டார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

பின் அவர் தன்னுடைய தந்தையை எழுப்பி தண்ணீர் கொடுத்து ஆறுதல் சொன்னார். பாண்டியன் ரொம்ப எமோஷனலாக கதிரை கட்டிப்பிடித்து அழுதார். அதற்குப்பின் கதிர், பாண்டியன் இருக்கும் இடத்தை எல்லோருக்கும் சொல்லி வரவைத்தார். வீட்டில் உள்ளவர்களுக்கு பாண்டியன் இருக்கும் இடத்தை சொன்னார்கள். சரவணன், பாண்டியனுக்காக வெளியே காத்துக் கொண்டிருந்தார். செந்தில்- கதிர் இருவரும் பாண்டியனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள்.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் வீட்டிற்கு வந்த பாண்டியனை பார்த்து கோமதி ரொம்ப கதறி அழுகிறார். பின் பாண்டியனின் தலையில் சத்தியம் செய்து அரசி, இனி நான் குமாருடன் பேசமாட்டேன். அவர் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன். நான் செய்தது தவறு. என்னை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சி கதறுகிறார். ஆனால், பாண்டியன் எதுவும் பேசாமல் கிளம்பி விடுகிறார். அதற்குப்பின் கோமதி தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு சென்று, என் மகள் உங்கள் பையனிடம் பேசமாட்டாள். அதேபோல் குமாரும் என் மகள் விஷயத்தில் தலையிடக்கூடாது. அதற்கு நீங்கள் தான் வாக்கு கொடுக்க வேண்டும் என்று தன்னுடைய மூத்த அண்ணனிடம் கேட்க, அவர் அமைதியாக இருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news