விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயில் பண விஷயத்தில் தவறு செய்தார் என்று கோமதி-பாண்டியன் கோபத்தில் இருக்கிறார்கள். வீட்டில் எல்லோருமே தங்கமயிலை கண்டுகொள்ளவில்லை. அதற்குப்பின் சரவணன் இடம் மீனா சாப்பாடு கொடுத்து அனுப்பி இருந்தார். ஆனால், அவர் பெரிதாக வருத்தப்படாமல் சாப்பாட்டை மேஜை மீது வைத்து விட்டு சென்றதால் தங்கமயில் ரொம்பவே கவலைப்பட்டார். மறுநாள் காலையில் தங்கமயில், கோமதியிடம் பேச போனார். ஆனால், அவர் முகம் கொடுத்து கூட பேசவில்லை.

இன்னொரு பக்கம் ராஜியின் வீட்டில் சண்டை நடந்தது. சக்திக்கு திருமணமாகவில்லை என்று அவரின் அப்பா சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதனால் வீட்டில் கலவரமே வெடித்தது. ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை சொல்லி கொண்டு இருந்தார்கள். இதனால் பெண்கள் எல்லோருமே கோபப்பட்டு பேச, ராஜியின் அப்பா அவருடைய மனைவியை அடிக்க போனார். இதை எல்லாம் பார்த்து அப்பத்தாவுக்கு நெஞ்சு வலி வந்து கீழே விழுந்தார். உடனே அவரை மொத்த குடும்பமும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றது. இன்னொரு பக்கம் ராஜி, வீட்டில் என்ன பிரச்சனை என்று தெரியாமல் பயத்தில் கோமதி இடம் சொல்லி புலம்பி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் ஹாஸ்பிடலில் அப்பத்தாவுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டிருந்தது. மருத்துவர்கள் சரியான பதில் கொடுக்கவில்லை. இதனால் எல்லோருமே பயத்தில் அழுது புலம்பி கொண்டிருந்தார்கள். இந்த விஷயத்தை பழனிக்கு சொல்ல, அவர் பாண்டியன் கடையிலேயே மயக்கம் போட்டு விழுந்து கதறி அழுதார். பின் பழனியை பத்திரமாக ஹாஸ்பிடலுக்கு செந்தில் அழைத்து வந்தார். செந்திலை பார்த்த உடன் ராஜியின் சித்தப்பா, சக்தி கடுமையாக திட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால், செந்தில் எதுவுமே பேசவில்லை.

நேற்று எபிசோட்:
பின் பழனி இடம் நடந்ததை வீட்டுப் பெண்கள் சொல்ல, அவர் பயங்கரமாக கத்தி கோபப்பட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில், என்ன நடந்தது? என்று புரியாமல் ராஜி- கோமதி இருவருமே புலம்பி கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து வந்த கதிர் எல்லா உண்மையும் சொல்ல ராஜி- கோமதி இருவருமே வேதனைப்பட்டு அழுதார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், அப்பத்தா சீரியஸாக இருக்கும் விஷயம் தெரிந்து கோமதி- ராஜு கதறி கதறி அழுகிறார்கள். வீட்டில் எல்லோருமே சமாதானம் செய்தும் கோமதி கேட்கவில்லை.
இன்றைய எபிசோட்:
தன்னுடைய அம்மாவின் நிலைமையை நினைத்து ரொம்ப வேதனைப்படுகிறார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் ராஜி அப்பா, அம்மா சித்தப்பா எல்லோருமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் பாட்டிக்கு ஒன்றுமே ஆகவில்லை. அவர் கண்விழித்து பார்த்து டாக்டரிடம், நைட்டு சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகவில்லை. வீட்டில் பயங்கரமாக சண்டை நடந்தது. அந்த டென்ஷனில் மயங்கி விழுந்து விட்டேன். தயவு செய்து என்னை வீட்டுக்கு அனுப்பி விடாதீர்கள். இன்னும் ஒரு இரண்டு நாள் இங்கே தங்குகிறேன் என்று சொல்ல டாக்டரும் ஒத்துக் கொள்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் அனைவரும் அப்பத்தாவை பார்த்து நலம் விசாரிக்கிறார்கள். இன்னொரு பக்கம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பாட்டி நிலை குறித்து இல்லாதது பொல்லாததை சொல்ல, கோமதி இன்னும் வேதனைப்பட்டு அழுகிறார். கடைசியில் கோமதி, உனக்காக இவரை தூக்கிப் போட்டு வந்து விட்டேன் அம்மா. ஆனால், இப்போது உனக்காக இவர் எனக்கு வேண்டாம். நான் உன்னிடம் வந்துவிடுகிறேன் என்று புலம்புகிறார். இதைக் கேட்டு பாண்டியன், மற்றவர்கள் எல்லோருமே அதிர்ச்சியாகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






