பாண்டியனிடம் மன்னிப்பு கேட்ட கதிர், கோபத்தின் அனலில் கோமதி- விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
173
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் வடிவு, நகை பற்றி மறைத்து வைத்த விஷயம் ராஜி அப்பாவிற்கு தெரிந்து பயங்கரமாக சண்டை போட்டார். இருந்தும் நகை எங்கே இருக்கு? என்று வடிவு சொல்லவில்லை. ஆனால், உண்மையை சொல்லும் வரை இந்த வீட்டில் தண்ணி, சாப்பாடு எதுவுமே சாப்பிடக்கூடாது என்று சொல்லிவிட்டு ராஜி அப்பா சென்று விட்டார். இன்னொரு பக்கம், சரவணன்-தங்கமயில் அனுப்பிய போட்டோவால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி இருந்தது. பின் தங்கமயில் அனுப்பிய போட்டோவை வைத்து ராஜி- மீனா இருவரும் போன் செய்து பங்கமாக கலாய்த்தார்கள்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் வீடியோ கால் மூலம் செந்தில், கதிர் இருவரும் சரவணனுக்கு போன் செய்து கிண்டல் செய்தார்கள். மேலும், ராஜியின் அப்பா, நகை எங்கே? என்று வடிவை கேட்டு கோபப்பட்டு பேசுகிறார். பின் இருவருக்கும் இடையே பயங்கரமாக சண்டை நடந்தது. கடைசியில் அவர், வடிவை அடித்து கீழே தள்ள போகும்போது உண்மையை உளறி விட்டார். இன்னொரு பக்கம் ராஜியின் சித்தப்பாவிற்கு டியூசன் எடுக்கும் விஷயம் தெரிந்து அதிர்ச்சியாகி பயங்கரமாக சண்டை போட்டு வந்து விட்டார். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் ராஜி பயத்தில் இருந்தார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் வீட்டிற்கு வந்த சித்தப்பா, உண்மையை சொல்ல, ஆத்திரத்தில் இருவருமே பாண்டியனிடம் சண்டைக்கு போனார்கள். பதிலுக்கு பாண்டியனும் சண்டைக்கு போனார். கடைசியில் ராஜி செய்த வேலையை எல்லாம் அவர் சித்தப்பா சொல்ல மொத்த பாண்டியன் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து நின்று இருந்தார்கள். அப்போது கோமதி அண்ணன்கள், பாண்டியனை ரொம்ப கேவலமாக பேசி இருந்தார்கள். பின் பாண்டியன் அவர்களுக்கு பதில் கொடுத்து விட்டு வந்தார். பின் வீட்டில் கோமதி பயங்கரமாக ராஜுவை திட்டிக் கொண்டிருக்கிறார்.

நேற்று எபிசோட்:

பாண்டியன் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். எதற்கு நீ வேலைக்கு போனாய்? என்ன காரணம்? என்று கோமதி கேட்டதற்கு ராஜி, கதிர் இரவு-பகல் என்று பார்க்காமல் கதிர் வேலைக்கு போவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதனால் தான் போனேன் என்று சொன்னார். நேற்று எபிசோடில், உடனே கதிருக்கு கோபம் வந்து ராஜியிடம் கத்துகிறார். எனக்கும் என் அப்பாவிற்கும் இடையே ஆயிரம் சண்டை இருக்கும். நீ எதற்காக வேலைக்கு போனாய்? உன்னால் என் அப்பா அசிங்கப்பட்டு இருக்கிறார்? என்றெல்லாம் கேட்க, கோமதியும் பயங்கரமாக ராஜுவை திட்டுகிறார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

கடைசியில் மீனா, அவள் சொந்தமாக நிற்க வேலைக்கு போகிறார். இதிலென்ன தப்பு? என்று சொல்ல, இந்த விஷயம் உனக்கு தெரியுமா? என்று கேட்டதற்கு உண்மையை மீனா உளறி விடுகிறார். இதனால் பாண்டியன், மீனாவை தான் அதிகம் திட்டுகிறார். பின் மொத்த குடும்பமே மீரா- ராஜிக்கு எதிராக நின்று பேசுகிறது. கடைசியில் பாண்டியன் வருத்தப்பட்டு திட்டிவிட்டு சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் ராஜு வீட்டில் பாண்டியன் பற்றி மோசமாக பேசுகிறார்கள். அப்போது வடிவு -ராஜி அப்பா இருவருக்குமே சண்டை நடக்கிறது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதியிடம் மன்னிப்பு கேட்க ராஜி, மீனா இருவருமே சமையல் கட்டுக்கு வருகிறார்கள். ஆனால், கோமதி முகம் கொடுத்து கூட பேசாமல் திட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் செந்தில் உடன் பாண்டியன் உட்காந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது, நடந்ததைப் நினைத்து செந்தில் மன்னிப்பு கேட்கிறார். பின் கதிர், தன்னுடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்க, பாண்டியனும் கதிர் மீது கை போட்டு மனதை விட்டு பேசுகிறார். இன்னொரு பக்கம் ராஜி, மீனாவிடம் மன்னிப்பு கேட்டு அழ, மீனாவும் அவருக்கு ஆறுதல் சொல்கிறார். கடைசியில் வீட்டில் எல்லோருமே உட்கார்ந்து சாப்பிடும் போது, மீனா- ராஜி இல்லை. அவர்களை பாண்டியன் கூப்பிடுகிறார். ராஜி-மீனா வந்தவுடன் கோமதி கிளம்பி விடுகிறார். அப்போது கோமதி, நீங்கள் பண்ணியதை மறக்க மாட்டேன் என்று திட்டுகிறார்.

Advertisement