விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் செந்தில்- மீனா இருவருமே அரசாங்க வேலை, தேர்வு பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது புது சட்டை வாங்க வேண்டும் என்று மீனா சொல்ல, செந்தில் தன்னுடைய அப்பாவிடம் கேட்டார். ஆனால், அவர் முடியாது என்று சொன்னதால் செந்திலுமே கோபப்பட்டு புலம்பி கொண்டு இருந்தார். இன்னொரு பக்கம் மீனா தொடர்ந்து செந்திலுக்கு போன் செய்து கொண்டே இருந்தார். அப்போது பாண்டியன் சொன்ன விஷயத்தை பற்றி பழனி சொல்லி விட்டார். அதன் பின் கதிர் உடன் மீனா துணி வாங்க கடைக்கு போனார் . அங்கு செந்திலுக்காக எல்லா சட்டைகளையும் மீனா பார்த்தார். ஆனால், அவருக்கு பிடிக்கவே இல்லை.

இதை பார்த்து கதிருக்கு தலை சுத்துகிறது. பின் நேரம் ஆகிறது என்பதால் ராஜிக்கு போன் செய்து, ஏதாவது சொல்லி சமாளி என்றார் மீனா. இன்னொரு பக்கம் சக்தி அப்பா, தன் அண்ணன் அடித்ததை நினைத்து தன் மகனிடம் புலம்பி திட்டி கொண்டிருந்தார். மேலும், பாண்டியன் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த மீனா, லேட்டாக வந்ததற்கு ஏதோ காரணம் சொல்லி சமாளித்தார். உடனே கதிர், செந்தில் அண்ணனுக்கு சட்டை வாங்கியது பற்றி சொன்னவுடன் பாண்டியன் கோபப்பட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
எதற்கு வீண் செலவு? என்றவுடன் மீனாவும் ஏதோ சொல்லி இருந்தார். இருந்தாலுமே பாண்டியன் கோபப்பட்டார். பின் சட்டையின் விலை 2000 என்று தெரிந்தவுடன் இன்னும் அதிகமாக கோபப்பட்டு பேச, மீனா மனம் உடைந்து அமைதியாக அங்கிருந்து கிளம்பி விட்டார். மேலும், இன்றைய எபிசோட்டில் பாண்டியன் சொன்னதை நினைத்து மீனா ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது வந்து செந்தில், மீனாவிடம் மன்னிப்பு கேட்டு சமாதானமும் செய்தார். பின் இருவரும் சந்தோசமாக பேசி கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைய எபிசோட்:
மறுநாள் காலையில் செந்தில் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். கோமதி, தங்கமயில், மீனா மூவருமே சாமி கும்பிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். அப்போது பாண்டியன் வந்தவுடன் செந்தில் ஆசீர்வாதம் வாங்குகிறார். உடனே அவர், பரிசைக்கு படித்தால் தானே எழுத முடியும். கலர் கலராக துணி வாங்கி போட்டால் பாஸ் ஆக முடியாது என்று நக்கலாக பேசுகிறார். இதனால் செந்தில்-மீனா முகமே மாறிவிடுகிறது. உடனே கோமதி, கதிர் இருவருமே பாண்டியனை திட்டுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
பின் பாண்டியன், செந்திலுக்கு வாழ்த்து சொல்லி அனுப்புகிறார். அதற்குப்பின் கடைக்கு சென்று கொண்டு இருக்கும் போது பாண்டியன், செந்திலை புகழ்ந்து பேச, பழனிக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போது அங்கு இருந்த மீனாவின் அப்பாவை பார்த்தவுடன் பாண்டியன், என்னுடைய மகன் அரசாங்க வேலைக்கு தேர்வு எழுதி இருக்கிறான். அவன் பாஸ் ஆகி விடுவான். நீங்கள் அவர்களை ஏற்றுகொள்வீர்கள் என்று சவால் விட, மீனா அப்பா அமைதியாக இருந்தார். பின் ராஜி, கல்லூரிக்கு போக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். அங்கு அவரை காதலித்து ஏமாற்றிய கண்ணன் வந்தார். இதை பார்த்து ராஜி ஷாக்கானார்.
https://www.youtube.com/watch?v=aIj7Fmov3LM
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில். கண்ணன், ராஜியை பார்த்த உடன் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். பின்னாடியே அவரை துரத்திக் கொண்டு ராஜி போகிறார். கடைசியில் ராஜி கீழே விழ, கண்ணன் அங்கிருந்து தப்பித்து விடுகிறார். அந்த சமயம் வந்த கதிர், ராஜிக்கு உதவி செய்து நடந்ததை பற்றி தெரிந்து கொள்கிறார். பின் இருவருமே போலீஸ் ஸ்டேஷனில் சென்று கண்ணன் மீது புகார் கொடுக்கிறார்கள். பின் கதிர், இந்த விஷயத்தை வீட்டில் சொல்ல வேண்டாம் என்று உடன், ராஜி ஒத்துக்கொள்கிறார்.






