விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி டியூஷன் எடுப்பதற்கு பாண்டியன் சம்மதம் கொடுக்க, எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். பின் ராஜி-கதிர் இருவருமே டியூசன் போகும்போது அவருடைய சித்தப்பா ரொம்ப கேவலமாக கதிரையும், அவருடைய குடும்பத்தையும் பேச, ராஜி கோபம் வந்து அவருக்கு பதிலடி கொடுத்து இருந்தார். இன்னொரு பக்கம் செந்தில்- மீனா இருவருமே அரசாங்க வேலை, தேர்வு பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது தேர்வு எழுத புது சட்டை வாங்க வேண்டும் என்று மீனா சொல்ல, செந்தில் தன்னுடைய அப்பாவிடம் கேட்டார். ஆனால், அவர் முடியாது என்று மறுத்தார்.

இதை அறிந்த மீனா, கதிர் உடன் சட்டை வாங்க கடைக்கு போனார் . அங்கு செந்திலுக்காக எல்லா சட்டைகளையும் மீனா பார்த்தார். ஆனால், அவருக்கு பிடிக்கவே இல்லை. இதை பார்த்து கதிருக்கு தலை சுத்துகிறது. ஒருவழியாக மீனா சட்டையை வாங்கி விட்டார். பின் வீட்டிற்கு வந்த மீனா, லேட்டாக வந்ததற்கு ஏதோ காரணம் சொல்லி சமாளித்தார். உடனே கதிர், செந்தில் அண்ணனுக்கு சட்டை வாங்கியது பற்றி சொன்னவுடன் பாண்டியன் கோபப்பட்டார். மீனாவும் ஏதோ சொல்லி இருந்தார். இருந்தாலுமே பாண்டியன் கோபப்பட்டு ரொம்ப மோசமாக மீனாவை திட்ட, அவர் வருத்தப்பட்டு உள்ளே சென்று விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் பாண்டியன் சொன்னதை நினைத்து மீனா ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது வந்து செந்தில், மீனாவிடம் மன்னிப்பு கேட்டு சமாதானமும் செய்தார். பின் இருவரும் சந்தோசமாக பேசி கொண்டு இருக்கிறார்கள். மறுநாள் காலையில் செந்தில் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது பாண்டியன் வந்தவுடன் செந்தில் ஆசீர்வாதம் வாங்கினார். உடனே அவர், நக்கலாக மனது கஷ்டப்படும் அளவிற்கு பேசி இருந்தார். இதனால் செந்தில்-மீனா முகமே மாறிவிடுகிறது. உடனே கோமதி, கதிர் இருவருமே பாண்டியனை திட்டி இருந்தார்கள்.

நேற்று எபிசோட்:
அதற்குப்பின் கடைக்கு சென்று கொண்டு இருக்கும் போது பாண்டியன், செந்திலை புகழ்ந்து பேச, பழனிக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போது அங்கு இருந்த மீனாவின் அப்பாவை பார்த்தவுடன் பாண்டியன், என்னுடைய மகன் அரசாங்க வேலைக்கு தேர்வு எழுதி இருக்கிறான். அவன் பாஸ் ஆகி விடுவான் என்று சவால் விட, மீனா அப்பா அமைதியாக இருந்தார். பின் ராஜி, கல்லூரிக்கு செல்லும் வழியில் அவரை காதலித்து ஏமாற்றிய கண்ணனை பார்த்து ஷாக்கானார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் கண்ணனை பார்த்தவுடன் கோபத்தில் ராஜு அவரை துரத்துகிறார். கண்ணனுமே ராஜிவிடம் இருந்து தப்பிக்க வேகமாக ஓடுகிறார். அப்போது எதிர்பாராத விதமாக ராஜு கீழே விழுந்ததால் அவரருக்கு அடிபட்டு வருகிறது. கண்ணன் தப்பித்து விடுகிறார். அந்த சமயம் பார்த்து வந்த கதிர், ராஜிவிக்கு உதவி செய்து என்ன நடந்தது? என்று கேட்க, அவர் நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னார். பின் எப்படியாவது கண்ணனை கண்டு பிடிக்க வேண்டும் என்று சொன்னவுடன் இருவருமே காரில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கண்ணன் கிடைக்கவில்லை.

சீரியல் ட்ராக்:
பின் இருவரும் புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் போகிறார்கள். அங்கு நடந்த உண்மை எல்லாம் ராஜூ சொல்ல வந்தார். ஆனால், கதிர் தடுத்து தான் காதலித்ததாகவும், தன்னுடைய பிரண்டு தான் ராஜி நகையை திருடி எடுத்துச் சென்றதாகவும் மாற்றி சொல்கிறார். பின் இந்த விஷயத்தை வீட்டிற்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம் என்றவுடன் ராஜிவும் சரி என்கிறார். இன்னொரு பக்கம் செந்தில் தேர்வு எழுதும்போது வெளியே இருக்கும் மீனாவையே பார்த்துக் கொண்டிருக்கிறார். கடைசியில் கதிர், ராஜி இருவருமே வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது கண்ணனை மீண்டும் பார்த்ததாக வண்டி நிறுத்த சொல்கிறார் ராஜி. பின் இருவருமே கண்ணனை தேடி வருகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






