விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயிலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி எல்லோரும் பரிசு தந்தார்கள். அதற்குப்பின் பாண்டியன், டீச்சர் வேலைக்கு வர சொல்லிவிட்டார்கள். சர்டிபிகேட் எங்கே? என்று கேட்க, தங்க மயிலால் எதுவும் பேச முடியவில்லை. உடனே அவருடைய அம்மா, சர்டிபிகேட் தொலைந்து விட்டது என்று புது கதை ஒன்று சொன்னார். இருந்தும் விடாமல் பாண்டியன், தங்கமயிலை வேலைக்கு அனுப்புவதில் தீவிரம் காட்டி இருந்தார். பின் சரவணன், தங்கமயிலை வேலைக்கு அழைத்து போனார்.

அங்கு சர்டிபிகேட் இல்லை என்றாலும் பிரச்சனை இல்லை. நீங்கள் வேலையை பாருங்கள் என்று சொல்ல, தங்கமயில் பயத்தில் என்ன செய்வதென்றே புரியாமல் இருந்தார். இன்னொரு பக்கம் அப்பத்தா, கோமதியிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பழனிக்கு திருமணத்தை செய்து வைக்க வேண்டும் என்று புலம்ப, கோமதியும் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம் என்றார். அதன் பின் கோமதி, நீங்கள் செலவிற்கு பழனிக்கும், செந்திலுக்கு பணம் கொடுங்கள் என்று சொல்ல, பாண்டியனும் சரி என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் கடையில் பாண்டியன், இருவரும் தினமும் 100 ரூபாய் எடுத்துக் கொள்ளுங்கள். வேற ஏதாவது செலவுக்கு வேண்டுமென்றாலும் சொல்லிட்டு எடுத்துக் கொள்ளுங்கள் என்றவுடன் செந்திலுக்கு இன்னும் கோபம் அதிகமானது. இதனால் செந்தில் தன்னுடைய அப்பாவிடம் சொல்லாமல் கல்லாவிலிருந்து 500 ரூபாய் எடுத்துக் கொண்டு பொய் கணக்கு எழுதி வைத்தார். இதை பார்த்த பழனி ஷாக் ஆகி இருந்தார். இன்னொரு பக்கம் மீனா, வேலை செய்யும் இடத்திற்கு வந்த ராஜியின் சித்தப்பா, சக்தி இருவரும் ஆக்கிரமிப்பு இடம் சம்பந்தமாக தகராறு செய்தார்கள். அதற்கு மீனா, பதிலடி கொடுத்து இருந்தார்.
நேற்று எபிசோட்:
கோபத்தில் அவர்கள் மீனாவிடம் சண்டை போட்டு மிரட்டி விட்டு சென்றார்கள். நேற்று எபிசோட்டில் செந்தில், மீனாவிற்காக ஹேண்ட் பேக்கை பார்த்து பார்த்து ஆசை ஆசையாக வாங்கி இருந்தார். ஆனால், அதனுடைய விலை அதிகமாக இருந்தால் பழனி இடம் பணம் வாங்கி கொடுத்து விட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் திருடனுக்கு பயந்து சிசிடிவி கேமராவை பொருத்தி அதை பார்த்து ரசித்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார் பாண்டியன். பின் தங்க மயிலின் பிறந்தநாள் என்பதால் கேக் வாங்கி கொண்டாடி இருந்தார்கள்.

சீரியல் ட்ராக்:
அப்போது பாண்டியன் கேக் விலை தெரிந்து ரொம்ப ஷாக் ஆகி, இதெல்லாம் தேவையா? காசோட அருமை தெரியவில்லை என்று வழக்கம்போல கிளாஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால், அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அதற்குப்பின் செந்தில், தான் வாங்கின ஹேண்ட் பேக்கை மீனாவிடம் கொடுத்தார். அவரும் அதை பார்த்து ரொம்ப சந்தோசப்பட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன், தூங்காமல் கூட சிசிடிவி கேமராவை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கேமரா இருட்டாக தெரிகிறது என்று ஒரே ஆர்ப்பாட்டம் செய்து இருந்தார்.
https://www.youtube.com/watch?v=RNh-J0DxbQM
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், கதிர்- ராஜி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜி கண்ணனை துரத்தி ஓடிக்கொண்டிருக்கும் வீடியோவை பார்த்து கதிர், நீ பயங்கரமாக ஓடுகிறாய் என்று பாராட்டுகிறார். அதற்கு ராஜி, நான் அத்தலெட். போலீசாக வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை என்கிறார். பின் இருவருக்கும் போட்டி நடக்கிறது. அதில் ராஜி, கதிரை விட வேகமாக ஓடி வெற்றி பெறுகிறார். உடனே கதிர், நீ போலீசாக வேண்டும். யாராக இருந்தாலும், எது நடந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு நான் துணையாக இருக்கிறேன் என்று பேசுகிறார்.






