தங்கமயில் அப்பாவுக்கு ஏற்பட்ட நிலைமை, கதிருக்கு தெரிய வந்ததா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
228
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர் வேலைக்கு போனதால் பாண்டியன் கோபப்பட்டு பேசி இருந்தார். அப்போது செந்தில் தன் மனதில் இருந்த ஆதங்கத்தை சொல்ல, பாண்டியன் வருத்தப்பட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். இதனால் கோமதிக்கு இன்னும் கோபம் அதிகமாகி செந்தில் இடம் சண்டை போட்டார். ராஜி சமாதானம் செய்தும் கோமதி ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே கோமதி, எல்லாம் சொல்லிக் கொடுத்துதான் நடக்கிறார்கள். குடும்பத்தை பிரிக்க பார்க்கிறார்கள் என்று மூன்று மருமகள்களையும் திட்டி இருந்தார். இதனால் மூன்று மருமகள்கள் வருத்தத்தில் இருந்தார்கள்.

-விளம்பரம்-

அதன் பின் மருமகளுக்கும் மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. அப்போது கோமதி, நான் கோபத்தில் பேசி விட்டேன். மன்னித்து விடுங்கள் என்று சொல்ல, எல்லோரும் சமாதானம் ஆகி விட்டார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில் அப்பா, கதவை திறந்து வை. நான் வீட்டுக்குள் வருகிறேன் என்று சொன்னார். தங்கமயிலுமே பயத்தில் கதவை திறந்து, நான் பொய் சொன்னேன் என்ற பழியை ஏற்றுகொள்கிறேன். திருட்டுப்பழி வேண்டாம். நீங்கள் கிளம்பி விடுங்கள் என்றார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அதற்கு அவர், எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்கிறேன் என்றார். பின் தங்கமயில் அப்பா வீட்டுக்குள் பதுங்கி பதுங்கி வர, அந்த சமயம் பார்த்து பழனி எழுந்தார். தங்கமயில் அப்பாவை திருடன் என நினைத்து பழனி அவரை பிடிக்க, எப்படியோ அவர் தப்பித்து விட்டார். உடனே பழனி, திருடன் திருடன் என்று கத்த, வீட்டில் உள்ள எல்லோருமே வந்து விட்டார்கள். பாண்டியன் மற்றும் அவருடைய மகன்கள் வீடு முழுவதுமே சுற்றி தேடி பார்த்தார்கள். ஆனால், யாருமே இல்லை. தங்கமயில் அப்பா, பயந்து கொண்டு ராஜியின் அப்பா வீட்டில் ஒளிந்து கொண்டார்.

கடந்த வாரம் எபிசோட்:

பின் பாண்டியன், வீட்டில் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று பார்க்க சொன்னார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் இருந்து வந்த சத்தத்தை கேட்டு ராஜியின் அம்மா, சித்தி எல்லோருமே பயந்து போனார்கள். ராஜியின் அப்பா, சித்தப்பா வெளியில் வந்து பார்த்த போது தங்கமயிலின் அப்பாவை பார்த்து விட்டார்கள். அப்போது தங்கமயில் அப்பா, நான் வழி தவறி வந்தேன். மன்னித்து விடுங்கள் என்று அழுது புலம்பி இருந்தார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

தங்கமயில் தன்னுடைய அப்பாவிற்கு என்ன ஆனது? என்று புரியாமல் தவித்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி அப்பா, தங்கமயிலின் அப்பாவை துருவி துருவி கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அவர் எதுவும் சொல்லாமல் அழுது கொண்டே இருக்கிறார். இதையெல்லாம் பார்த்த அப்பத்தா, அவரை விட்டு விடுங்கள் என்று சொல்கிறார். ஆனால், அவர்கள் பாண்டியனை அசிங்கப்படுத்த திட்டம் போடுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் தங்கமயில், தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து அப்பாவை பற்றி கேட்கிறார். அதற்கு அவர், இன்னும் வரவில்லை என்று சொல்கிறார். பின் தன்னுடைய கணவரை தேடி அலைகிறார் தங்கமயில் அம்மா. அங்கு வந்த கதிரிடம், தன்னுடைய கணவர் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்கிறார் தங்கமயில் அம்மா. பின் கதிர், நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கிளம்புங்கள் என்று அவரை வீட்டில் விட்டு தன்னுடைய வீட்டிற்கு வருகிறார். அப்போது ராஜியின் அப்பா வீட்டில் தங்கமயில் அப்பாவை கட்டி போட்டு இருப்பதை கதிர் பார்த்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement