விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் குமார் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருப்பதை பார்த்து இறந்துவிட்டார் என்று மீனா, கோமதி, ராஜி, அரசி நினைத்துக் கொண்டார். பின் எவ்வளவோ குமாரை எழுப்ப முயற்சித்தார்கள். ஆனால், குமார் எழவே இல்லை. இதனால் குமாரின் நிலைமையை நினைத்து ஒவ்வொருவரும் கதறி அழுதார்கள். மீனா, தன்னால் தான் இந்த நிலைமை என்று குற்ற உணர்ச்சியில் பதறி இருந்தார். அதோடு போலீஸ் ஸ்டேஷனில் உண்மையை சொல்கிறேன் என்று மீனா சொன்னார். ஆனால், கோமதி-ராஜி இருவருமே தடுத்து விட்டார்கள்.

அதற்குப்பின் ராஜி, கதிருக்கு போன் செய்து குமார் வந்த விஷயத்தையும் அவன் இறந்த விஷயத்தையும் சொன்னார். இதனால் கதிர் ஷாக் ஆகிவிட்டார். அதற்குப்பின் கதிர், இந்த உண்மையை போலீஸிடம் சொல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன், தைரியமாக இருங்கள் என்று ராஜிக்கு ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் மீனா, செந்திலுக்கு போன் செய்து குமாரை கொலை செய்த விஷயத்தை சொன்னார். அதை கேட்டவுடன் செந்தில் என்ன சொல்லுவது என்று தெரியாமல் ஷாக் ஆனார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் மீனா, நான்தான் கொலை செய்து விட்டேன். நான் தெரியாமல் செய்தேன். வேண்டுமென்று நான் அவனை அடிக்கவில்லை என்று சொன்னதையே சொல்லி புலம்பி அழுது கொண்டிருந்தார். ராஜி, கோமதி அரிசி மூவருமே மீனாவை சமாதியில் செய்தும் அவர் கேட்கவே இல்லை பக்கம் கதிர் செந்தில் இருவரும் மீனா குமாரை அடித்த விஷயத்தை பற்றி பேசி ரொம்ப வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். பின் இருவருமே கிளம்பி காரில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது செந்தில், ஒரு வேலை குமார் இறந்தது உண்மை என்றால் நான் மீனாவை ஜெயிலுக்கு அனுப்ப விட மாட்டேன்.

நேற்று எபிசோட்:
நானே பழியை ஏற்றுக்கொண்டு ஜெயிலுக்கு போய் விடுவேன் என்று சொல்லி ரொம்ப எமோஷனலாக சொல்லி புலம்பி கொண்டிருந்தார். உடனே கதிர், அதெல்லாம் ஒன்றும் இல்லை. நாம் நல்லபடியாக எல்லோரும் வீட்டுக்கு வருவோம் என்று ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் கோமதி, நீங்கள் அமைதியாக இருங்கள். நான் ஜெயிலுக்கு போய்விட்டால் அரசி கல்யாணத்தை மட்டும் எப்படியாவது நடத்தி விடுங்கள் என்று எமோஷனலாக பேசி இருந்தார். அப்போது குமாரின் கையசைவதை ராஜி பார்த்து எல்லோரிடமும் சொன்னார். பின் குமாருக்கு பேச்சு மூச்சு இருப்பது தெரிந்தது. இதனால் மொத்த பேருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் உண்மையை சொல்வதற்கு கதிருக்கு போன் செய்த ராஜி, குமார் உயிரோடுதான் இருக்கிறார். அவன் இறக்கவில்லை மூச்சு விடுகிறான் என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் கதிர், செந்திலுக்கு உயிர் வருகிறது. உடனே கதிர், எல்லோரும் ரூமை விட்டு வெளியே வந்து விடுங்கள். நாங்கள் வந்து விடுகிறோம் என்று சொல்கிறார்கள். இதனால் எல்லோருமே குமார் ரூமை விட்டு வெளியே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். பின் நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அப்போது கதிர், செந்தில் இருவரும் கதவை திட்டுகிறார்கள். பின் ராஜி, கதிராகத்தான் இருக்கும் என்று கதவைத் திறக்கிறார். பின் ரொம்ப எமோஷனலாக கதிரிடம் ராஜி பேசுகிறார். அதற்குப்பின் கதிர், செந்தில் இருவருமே எல்லோரையும் சமாதானம் செய்துவிட்டு குமார் ரூமிற்கு சென்று அவரை தண்ணீர் தெளித்து எழுப்புகிறார்கள். மயக்கத்தில் இருந்த குமாரும் தண்ணீர் பட்டவுடன் எழுந்து விடுகிறார். பின் கதிர், செந்தில் இருவரும் குமாரை விசாரிக்கிறார்கள். மாட்டிக் கொண்டால் என்ன பண்ணுவது என்று அவர்களை தள்ளிவிட்டு குமார் ஓடிவிடுகிறார். குமாரை துரத்திக் கொண்டு கதிர்-செந்தில் போகிறார்கள். இருந்தாலும் குமார் தப்பித்து விடுகிறார். பின் வீட்டில் எல்லோருமே நடந்ததை நினைத்து எமோஷனலாக பேச கதிர், செந்தில் இருவரும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






