விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கதிர், செந்தில் இருவரும் எல்லோரையும் சமாதானம் செய்துவிட்டு குமார் ரூமிற்கு சென்று அவரை தண்ணீர் தெளித்து எழுப்பி இருந்தார்கள். மயக்கத்தில் இருந்த குமாரும் தண்ணீர் பட்டவுடன் எழுந்து விட்டார். பின் கதிர், செந்தில் இருவரும் குமாரை விசாரித்தார்கள். மாட்டிக் கொண்டால் என்ன பண்ணுவது என்று அவர்களை தள்ளிவிட்டு குமார் ஓடிவிட்டார். குமாரை துரத்திக் கொண்டு கதிர்-செந்தில் போனார்கள். இருந்தாலும் குமார் தப்பித்து விட்டார். பின் வீட்டில் எல்லோருமே நடந்ததை நினைத்து எமோஷனலாக பேச கதிர், செந்தில் இருவரும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார்கள்.

ராஜி- கதிர் இருவருமே குமார் விஷயத்தைப் பற்றியும், நடன போட்டியை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். மறுநாள் காலையில் ராஜிக்காக துணி வாங்க கதிர் கடைக்கு சென்று இருந்தார் அதற்குப்பின் எல்லோருமே நடன போட்டி நடக்கும் இடத்திற்கு சென்று விட்டார்கள். அப்போது அங்கு இருந்த இளைஞர்கள் ராஜிவிடம் போன் நம்பரை கேட்டு வம்பு இழுத்தார்கள். உடனே கதிர்- செந்தில் இருவருமே அந்த இளைஞர்களை அடித்து துரத்தி விட்டார்கள். அதற்கு பின்பு நடனப் போட்டியில் ஒவ்வொருவருமே வித்தியாசமாக நடனம் ஆடி இருந்தார்கள். ராஜி என்ன செய்வார் என்று கதிர் யோசித்துக் கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
ராஜி, அம்மன் பாட்டிற்கு நெருப்பு சட்டி எல்லாம் வைத்து பயங்கரமாக ஆடி இருந்தார். கொஞ்சம் ரிஸ்க் எடுத்து நடனம் ஆடுவதால் வீட்டில் உள்ள எல்லோருமே பயப்பட்டார்கள். பின் ஒரு வழியாக அந்த போட்டியில் ராஜி வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு சென்று விட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன், செந்தில்- கதிர் இருவரும் சொல்லாமல் கோவிலுக்கு சென்றதை பற்றி வீட்டில் திட்டிக் கொண்டிருந்தார். பின் சரவணன், சர்டிபிகேட் எங்கே? கொண்டு வந்து கொடுத்தால் தானே வேலை விஷயமாக பேச முடியும் என்று கேட்டார்.

கடந்த வாரம் எபிசோட்:
தங்கமயிலால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். கடைசியில் இறுதி சுற்றில் ராஜி நன்றாக நடனமாடி இருந்தார். பின் இரண்டாம் பரிசு வேண்டும் என்பதால் கொஞ்சம் தடுமாறியது போல் நடித்து இருந்தார் ராஜி. வீட்டில் உள்ள எல்லோருமே ஏன்? என்னாச்சு? என்று பதறி போனார்கள். அதற்கு ராஜி, கொஞ்சம் ஸ்டெப்பை மறந்து விட்டேன் என்றார். கடைசியில் ராஜி ஆசைப்பட்டது போல் பைக் வென்று விட்டார். இதை பார்த்த கதிர், நமக்காக தான் இவள் இவ்வளவு கஷ்டப்பட்டாலே என்று நினைத்து கண்கலங்கி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி, நீ எனக்காக தானே போட்டியில் கலந்து கொண்டாய் என்று கேட்கிறார். அதற்கு ராஜி அப்படியெல்லாம் இல்லை என்று இறுதி சமாளிக்கிறார். ஆனால், கதிர் உண்மையை கண்டுபிடித்து ரொம்ப சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் குமார், அரசி வீட்டில் நடந்ததை தன்னுடைய தந்தையிடம் சொல்லி புலம்புகிறார். உடனே கோபப்பட்ட சக்திவேல், குமாரை பயங்கரமாக திட்டுகிறார். அந்த சமயம் பார்த்து வந்த மாரி, என்ன ஆனது என்று கேட்க, சக்திவேல் குமாருக்கு நடந்த விஷயத்தை சொன்னவுடன் அவர் பயங்கர ஷாக் ஆகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் மாரி, அரசிக்கு திருமணமாகப் போகிறது. உன் வேலையை பார் என்று அறிவுரை சொல்கிறார். இன்னொரு பக்கம் எல்லோரும் வீட்டிற்கு கிளம்புவதற்காக ஃபேக் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கோமதி தெரியாத தனமாக கதிர்- ராஜி திருமணத்தை பற்றி பேச வருகிறார். உடனே மீனா, தடுத்து நிறுத்திவிட்டு ஏதேதோ சமாளிக்கிறார். பின் மொத்த குடும்பமும் கிளம்பி விடுகிறார்கள். அப்போது வரும் வழியில் ராஜி, மாமாவிற்கு நடந்த உண்மையை சொல்லிவிடலாம் என்று கேட்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






