விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் மூன்று மருமகள்களுக்கும் தாலி பிரித்து கோர்க்க பாண்டியன் சம்மதித்தார். இதனால் கோமதி, நகைகளை எடுக்க பேங்கிற்கு போனார். என்ன நடக்குமோ? என்ற பயத்தில் தங்கமயில் இருந்தார். இன்னொரு பக்கம் அரசி வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது சக்தி அவரிடம் பேச முயற்சி செய்தார். ஆனால், அரசி எதுவுமே பேசவில்லை. உடனே அங்கு வந்த செந்திலை பார்த்தவுடன் சக்தி கிளம்பி விட்டார். பின் பாண்டியன், நியூஸ் பேப்பரில் இருக்கும் சிங்கப்பெண் விஷயத்தைப் பற்றி சொல்ல, எல்லோரும் ஷாக் ஆனார்கள்.

அதோடு அந்த பேப்பரில் ராஜியின் முகம் சரியாக தெரியவில்லை. அவருடைய பெயருமே குறிப்பிடவில்லை.
இருந்தாலும் வீட்டில் உள்ள எல்லோருமே அந்த சிங்கப்பெண் ராஜி தான் என்று கன்பார்ம் செய்தார்கள். ஆனால் ராஜி, அது நான் இல்லை என்று சமாளித்தார். மறுநாள் தாலி பிரித்து கோர்க்கும் விழாவிற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மூன்று மருமகள்களும் அழகாக ரெடி ஆகி இருக்கிறார்கள். நேற்று எபிசோட்டில், தாலி பிரித்து கோர்க்கும் விழாவிற்கு உறவினர்கள் எல்லோருமே வந்திருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பாண்டியன் வீடு கோலாகலமாக இருந்தது. ஆனால், தங்கமயில் மட்டும் நகையை நினைத்து பயங்கரமாக புலம்பி கொண்டு இருந்தார். அப்போது கோமதி, நகைகளை கொண்டு தங்கமயில் இடம் கொடுத்தார். உடனே தங்கமயில் அம்மா, ராஜிக்கு கொஞ்சம் நகைகளை எடுத்து கொள்ளுங்கள் என்றார். ஆனால், கோமதி வேண்டாம் என்றார். இன்னொரு பக்கம் மீனா, தன் நகைகளை ராஜிக்கு போட்டு விட, இதை பார்த்து கோமதி சந்தோஷப்பட்டார். பின் மாடியில் தங்கமயில், தன்னுடைய அப்பா- அம்மாவை கூட்டிட்டு போய் எதற்கு இப்படியெல்லாம் செய்கிறீர்கள்.

நேற்று எபிசோட்:
அது கவரிங் என்று தெரிந்துவிட்டால் என்ன செய்வது? என்று புலம்பினாள். இதை எல்லாம் இன்னொரு பக்கம் நின்று இருந்த ராஜி- மீனா இருவருமே கேட்டு விட்டார்கள். பின் அவர்கள் இதை பற்றி தங்கமயிலிடம் விசாரிக்க, அவர் அப்பா- அம்மா ஏதோ சொல்லி சமாளிதார்கள். ஆனால், அவர்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. கடைசியில் தங்கமயில், இதெல்லாம் கவரிங் நகை தான். 8 பவுன் தான் தங்கம். இதனால் தான் நான் பயப்படுகிறேன் என்று உண்மையை சொல்ல, மீனா- ராஜி இருவருமே அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில், என்னுடைய நகைகளில் முக்கால்வாசி போலி தான். என்னுடைய அப்பா பெரிய பிசினஸ் மேன் எல்லாம் கிடையாது. அவர் வேலை இல்லாமல் சும்மா தான் இருக்கிறார். எனக்கு பல வருடமாக கல்யாணம் ஆகவில்லை. அதனால் தான் பொய் சொல்லி திருமணம் செய்து விட்டார்கள். இனிமேல் இந்த உண்மை எல்லாம் மறைத்து வைத்து தினமும் பயந்து பயந்து வாழ முடியவில்லை. நீங்கள் இதை மாமாவிடம் சொன்னாலும் எனக்கு பிரச்சினை இல்லை. போய் சொல்லுங்கள் என்கிறார்.

சீரியல் ட்ராக்:
உடனே மீனா- ராஜி இருவருமே நீங்கள் சொன்னது தவறு தான். மாமா நகைக்கு முக்கியதுவம் கொடுத்ததில்லை. இருந்தாலுமே உங்களுடைய வாழ்க்கையை கெடுக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் யாரிடமும் சொல்ல மாட்டோம் என்று சொன்னவுடன் தங்கமயிலின் அம்மா பெருமூச்சு விடுகிறார். பின் நல்லபடியாக மூவருக்குமே தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடக்கிறது. இதையெல்லாம் அப்பத்தா, ராஜி அம்மா வெளிய நின்னு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த ராஜி - கதிரை பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். அப்போது ராஜி அப்பா வருகிறார்கள். ஆனால், அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






